சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

வெள்ளி, டிசம்பர் 30, 2011

முன்னா ஹஸார் பிஏபிஎல்





எங்களுக்கும் போடத் தெரியும் குல்லா!
எங்ககிட்டயா விளையாடினே தில்லா!


காந்தியத்தான் கணக்கா வெச்சி கம்பி நீட்டுவோம்!
காந்தி கணக்க கண்ணில் காட்டி காய நகத்துவோம்!


லோக்கு பாலோ ஜோக்கு பாலோ ஒண்ணு கேட்டுக்கோ!
நீக்கு போக்கு தெரிஞ்ச வந்தான் நல்லா மாட்டிக்கோ!


தொப்பி ஒண்ணு போட்டுவிட்டால் கேள்வி கேப்பியா
தப்பி கிப்பி மீண்டும்வந்தால் தோல்வி தானப்பா!

செவ்வாய், டிசம்பர் 13, 2011

புத்தூர் சுதர்ஸனர் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் காலமானார்



திருச்சி, டிச.13: திருச்சி புத்தூரில் வசித்து வந்த ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 86.  அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் சிரமப் பட்டு வந்தார். இந்நிலையில் இன்று (டிச.13) அதிகாலை 2.15க்கு அவர் ஆசார்யன் திருவடி அடைந்ததாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.திருச்சியின் புகழ்பெற்ற வழக்குரைஞர். சுதர்ஸனர் என்றும் சுதர்சனம் ஐயங்கார் என்றும் வைணவ உலகில் அழைக்கப்பட்டவர். இவருடைய தந்தையார் ஸ்ரீனிவாஸ ஐயங்கார். மிகச் சிறந்த அறிஞராகத் திகழ்ந்தவர். தந்தையின் வழியில் கிருஷ்ணஸ்வாமி ஐயங்காரும் சட்டம் முதுநிலை படித்து வழக்குரைஞர் ஆனார். தந்தையார் தொடங்கிய வைஷ்ணவ சுதர்ஸனம் என்னும் வைணவப் பத்திரிகையை வெகு காலம் நடத்தி வந்தவர்.  சமயப் பற்றால் வழக்குரைஞர் தொழிலை இரண்டாம் பட்சமாகக் கருதி சமயத் தொண்டு ஆற்றியவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை மற்றும் புத்தகங்கள் பதிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் நூற்றுக்கணக்கில் நூல்களை எழுதியுள்ளார். வைணவ கிரந்தங்கள், சமஸ்கிருத நூல்கள், தமிழ் பிரபந்தப் பாசுரங்களுக்கு விளக்கங்கள் என பல நூல்கள் இவரின் உழைப்பில் வெளிவந்துள்ளன. இதற்காக தனி அச்சுக்கூடமே வைத்து பதிப்பித்து வந்தார். தெய்வத் தமிழ் பாசுரங்கள் எளிய மக்களுக்கும் தெளிந்த நடையில் விவரணங்களோடு கிடைப்பதற்கு இவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம். திவ்யார்த்தரத்னநிதி, விசிஷ்டாத்வைத சம்ரட்சகர், திருமால்நெறி நூற்காவலர், ஸ்ரீதத்வநிர்தாரகர், வித்யாவிஷாரதா உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர் ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி ஐயங்கார்.தொடர்புக்கு:ஸ்ரீவைஷ்ணவ சுதர்ஸனம்5/3பி, புத்தூர் அக்ரஹாரம், புத்தூர், திருச்சி 17போன்: 0431 - 2773705 

வியாழன், நவம்பர் 24, 2011

அடிப்பார் இல்லாத அமைச்சர்


ஐயா... ஐயா... கொஞ்சம் இருங்க! அவரு உங்களைப் பாத்து செவுட்டுல அடிக்கிறா மாதிரி ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போறாரு... நீங்க கொஞ்சம்கூட காதுலயே போட்டுக்க மாட்டேங்கறீங்களே...

அப்படி என்ன சொல்லிட்டுப் போறாரு..

அடிப்பார் இல்லாத அமைச்சர் என்றால் 
கெடுப்பார் டூஜியைப் போல்! 
அப்படின்னு கவிதை பாடிட்டுப் போறார்...

புதன், நவம்பர் 23, 2011

பால் மவுசு கூடுது; லோக் பால் மவுசு?



கொஞ்சம் இருங்க... கொஞ்சம் இருங்க... இப்போ எங்களுக்கும் மவுசு கூடும்னு நாங்க எதிர்பார்க்கறோம். நாங்க முன்வைக்கிற மசோதாவோட மதிப்பை உணர்ந்து, தமிழ்நாட்டு முதல்வரும் முழு ஆதரவைத் தருவாங்கன்னு நாங்க எதிர்பார்க்கறோம். ஏன்னா அவங்க இப்பதான் ஆவின் பால்-க்கு உண்டான மதிப்பை ரொம்ப உயர்த்தி உயரத்துல வெச்சிருக்காங்க. அதுமாதிரி எங்க லோக்பால்-க்கான மதிப்பையும் உணர்ந்து எங்களை உயரத்துல வைப்பாங்க. அப்புறம் பாருங்க... லோக் பால்- வேணும்னு எப்படி எதிர்க்கட்சிங்கள்லா அறிக்கை விடறாங்கண்ணு!!!

பிரேக் பிரேக்... இல்லாம போனா?


பிரேக் பிடிக்காம போனா... பஸ்ஸின் கதி..?இப்படித்தான் மோதி நிக்கணும்!அதுவும் ஓட்டுகின்ற திறமையை குடிப்பழக்கம் கொல்லும் என்று அறிவுரை சொல்லும் இடத்தின் மீதே!உங்கள் மூளையை 5 நிமிடத்தில் அடையும் ஆல்கஹால் என்று அறிவுரை சொல்லும் இடத்தின் மீதே!அட... அரசாங்கமும் இப்படித்தான்!அதனால்.. ஒரு பிரேக் வேண்டும்!இப்படி ஆகாமல் இருக்க!

சரியான சில்லரை எடுத்துக்காதீங்க?!


ஐயா இந்த நோட்டீஸை நல்லா படிச்சுப் பாருங்க... அப்புறம் இதுல நீங்க பத்திரமா பயணம் செய்யிறதுக்கான டிப்ஸ் எல்லாம் இருக்கு. பணத்தை பத்திரமா பாத்துக்குங்க...பிக்பாக்கெட்காரன் பக்கத்துலயே நிப்பான். நீங்க இறங்கறதுக்குள்ள அபேஸ் செய்யலாம்... அதுனால உங்க பர்ஸ், பைகளை எப்படி கவனமா பாத்துக்கணும்னு நாங்க சில ஐடியால்லாம் சொல்லியிருக்கோம். கண்டக்டர்கிட்ட சரியான சில்லரை கொடுங்க... அட... ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்.. நீங்க இறங்கப் போற இடம் வர்றதுக்குள்ள டிக்கெட் விலையை ஏத்தி அந்த டிக்கெட் கட்டண வித்தியாசத்தை உடனே உங்ககிட்ட வசூல் செய்யலாம். அதுனால எதுக்கும் கொஞ்சம் கூடவே சில்லரை எல்லாம் வெச்சிக்குங்க...

புதன், நவம்பர் 09, 2011

அன்றா சொன்னேன்? நன்றா செய்தேன்!?



பெட்ரோல் விலை குறித்து...
இதை அங்க போய் கேளுங்க!
இல்லை.. நீங்க... பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் வாங்கலைன்னா நாங்க அமைச்சரவையிலிருந்து வாபஸ் ஆகிடுவோம்னு சொன்னீங்களே!
ஆமாம்! இது மக்கள் விரோத நடவடிக்கை! அவங்க விலை வாபஸ் பத்தி யோசிச்சாகணும். இல்லைன்னா எங்க நிலை வாபஸ்தான்!
ஆனா பிரணாப் என்னமோ வித்தியாசமா பேசுறாரே...
இல்லை இல்லை... இது எங்க உறுதியான இறுதியான முடிவு. நாங்க எதில் இருந்தும் பின்வாக்கப் போவதில்லை...
உங்க எம்பிக்கள் கிட்டே பிரதமர் உறுதியா சொல்லியிருக்காறாமே!
என்ன...?! உறுதியாவா??? அவரு அப்படில்லாம் பேசமாட்டாரே! கொஞ்சம் இருங்க பிரதமர் என்ன டீலிங்ல அப்படி பேசினார்னு தெரிஞ்சுக்கறேன்...
......
......
ம்ம்ம்... எம்பிக்கள்ட்ட பேசிட்டேன். பெட்ரோல் விலையை ஏத்துறதை எங்களால அனுமதிக்க முடியாது. இருந்தாலும், இந்த முறை பிரதமரை நாங்க மன்னிக்கறோம். அடுத்த முறை ஏத்தினா... நிச்சயமா வாபஸ்தான்! அதுல நாங்க உறுதியா இருக்கோம்..!

(பெங்காலி மொழி புரியாததால, இவங்க என்ன பேசியிருப்பாங்கன்னு யோசிச்சதுல.... இப்பிடி!)

எலக்டிவ் அம்னீஷியா!



என்னங்க அத்வானிஜி... தமிழ்நாட்டு முதலமைச்சட்ட போன்ல பேசும்போது ரொம்ப ரொம்ப நன்றின்னு சொன்னீங்களாமே!
ஆமாம்... சரியான நேரத்துல சரியான நடவடிக்கை எடுத்தாங்களே... பாராட்டாம இருக்க முடியுமா?
ஆமாமா... செலக்டிவ் அம்னீஷியான்னு சொன்னவங்களாச்சே...
என்னது..? அப்படியா? யாரைப் பாத்து சொன்னாங்க...?!
ஆஹா... அவங்க சொன்னது நூறு சதவீதம் சரிதான்!

சாப்பிட வரட்டா?



என்னப்பா... தம்பி... உங்க வீட்டுக்கு இன்னிக்கி மத்தியானம் சாப்பிட வரட்டா...
என்னாது.... சாப்பிடவா? என்னயவே எங்கம்மா போடா டேய் ராத்திரி வீட்டுக்கு வந்தா போதும்டானு துரத்தி விட்டுட்டாங்க... இதுல நீங்க வேற?

ஞாயிறு, நவம்பர் 06, 2011

வேலை (செயல்) திட்டம்?!



உங்க மாநிலத்துலயும் நீங்க ஒழுங்கா நூறுநாள் வேலைத்திட்டத்தை பின்பற்றலையாமே!
அய்யய்யோ அப்டி முறைச்சிப் பாக்காதீங்க... பயம்மா இருக்கு... இது எதிர்க்கட்சி ஆட்சி செய்யிற குஜராத், பீகார், உத்தரப் பிரதேசம் இல்லேங்க... நம்ம கட்சி ஆட்சி செய்யிற ஆந்திரமுங்க....
அது எனக்கு தெரியுது! ஆனா மாயாவதிக்கு அனுப்பினா மாதிரி உங்களுக்கும் கடிதம்லாம் போட்டாதான் சரியாவரும்னு நெனக்கிறேன்...
என்னங்க இப்படி சொல்றீங்க? இங்க ஒழுங்கா வேலையே செய்ய முடியலே... இதுல நீங்க வேற....
அதான் சொல்லுறேன்... நூறு நாள் வேலைத் திட்டத்தாலதான் கூலிக்கு ஆள் கிடைக்க மாட்டேங்கிறாங்கன்னு தமிழ்நாடு மாதிரி மாநிலங்கள்ல புகார் சொல்லுறாங்க... நீங்க மட்டும் இந்த திட்டத்தை சரியா செஞ்சிருந்தீங்கன்னா.... தெலங்கானா மாதிரி பிரச்னை வருமா? கொடி பிடிக்க கோஷம் போட சாலைமறியல் போராட்டத்துக்கு ஆள் தேறுமா? யோசிச்சிப் பாருங்க. அதான் சொல்றேன் நீங்களும் நூறு நாள் வேலைத்திட்டத்துல முறைகேடு செஞ்சிருக்கீங்க...

டீப் டிஸ்கஷன்தான்! நம்ம டூப் டிஸ்கஷன்தான்!!


என்னங்க இது... திக் திக் இப்படி திக்கு திக்குன்னு உளறிக்கொட்டுறாரு..?
ஏன் என்னாச்சு... கொடுத்த வேலையை நல்லாத்தானே செய்துக்கிட்டிருக்காரு?!
அதில்லே..! ப்ளான் 1, ப்ளான் 2,. ப்ளான் 3 அப்டின்னு ஏதேதோ சொல்லி எல்லாத்தையும் ஆர்.எஸ்.எஸ்தான் இயக்குதுங்கிறாரே!
ஆமா... எதுனா பிரச்சினைன்னா அப்படிச் சொல்லனும்னுதானே 1947லிருந்தே நம்ம கட்சிக்காரங்களை பழக்கப்படுத்தி வெச்சிருக்கோம்?!
ஆனா.... இப்போ அதுவே வினையா முடிஞ்சிடும்னு பயமாயிருக்கு!
ஏன் எல்லாம் சரியாத்தான் போயிட்டிருக்கு. நெனச்ச மாதிரியே அண்ணா ஹசாரே குழு பயந்து பிரிஞ்சிட்டாங்க... ஒருத்தர ஒருத்தரு அடிச்சிக்கிறாங்க... நாமதான் ஆர்.எஸ்.எஸ் அப்படிங்கிற தீண்டாமை அஸ்திரத்தை சரியா போட்டிருக்கமே!
ஆனா பாருங்க... பொதுமக்கள் பாபா ராம்தேவை நல்லவருங்கிறாங்க... அண்ணா ஹசாரேவை ரொம்ப நல்லவருங்கிறாங்க... ரவிசங்கர்ஜியை ரொம்ப ரொம்ப நல்லவருங்கிறாங்க... இப்படி எல்லாரும் நல்லவங்கன்னு நம்பிக்கிட்டிருக்கிற எல்லாரையும் ஆர்.எஸ்.எஸ் சொல்லித்தான் இயங்குறாங்கன்னு நம்ம திக்கு திக்கு சிங் சொல்லுறாரே... அதுனால, இதுவரை மோசமானவங்கன்னு மக்கள் நெனச்சிக்கிட்டிருக்கிற ஆர்.எஸ்.எஸ்.காரங்களை நல்லவங்கன்னு நினைக்கும்படியா செய்யிறாரோ? இவரு நல்லவரா கெட்டவரான்னே தெரியலியே?!

ஆர்ட் ஆஃப் லையிங்!?



சிறீ சிறீ ரவிசங்கர்ஜி என்னமோ ஆர்ட் ஆஃப் லையிங் அப்படின்னு அமைப்பு வெச்சிருக்கறதா சொன்னாரே! அதான்... எங்கிட்டயே போட்டி போடறாரேன்னு நெனச்சித்தான் இந்த டகால்டி வேலையெல்லாம் செஞ்சி பாக்குறேன்... மேட்டர் மசிய மாட்டேங்குதே!
உம்மை அப்படியே கடிச்சி முழுங்கிடப்போறேன்...அய்ய... அவரு வெச்சிருக்கிறது ஆர்ட் ஆஃப் லிவிங்... அதாவது வாழும் கலை..ன்னு பேரு! நீங்க நினைக்கிற மாதிரி ஆர்ட் ஆஃப் லையிங்... பொய் சொல்லுற கலை இல்லீங்க! எதையும் மொதல்ல சரியா காதுகொடுத்து கேளுங்க... ஓ... சரி சரி... இதுதான் உங்களுக்கு பிரச்னையா?!

செல்’ல’போன் மொழி!



செல்போன் மொழியில உங்க மொழியும் சேர்ந்துடுச்சாம் மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்!
என்ன சொல்லுறீங்க!
மீட்டிங் ஹாலுல பேசுற காமா சோமா பார்ட்டிங்கல்லாம் இப்ப மைக்க புடிச்ச உடனே இதைத்தான் சொல்லுறாங்க... அதுவும் உங்களுக்கு புகழாரம் சூட்டிக்கிட்டே!
அப்படி என்ன சொல்லுறாங்கஜி
உங்க செல்போனை எல்லாம் சைலண்ட் மோட்ல போடுக்குங்க... அப்படின்னு சொல்லிக்கிட்டிருந்தவங்க எல்லாம் இப்போ உங்க செல்போனை மன்மோகன்சிங் மோடுல போடுங்கன்னு தெனாவட்டா பேசுறானுங்க...
அடடே அப்படியா?
அட இதுக்காவது உங்க மௌனத்தை கலைச்சீங்களே... அப்படியே ஊழல் ஒழிப்புல தீவிரமா இருக்கோம்னு உலகத்துக்கு காட்ட, எங்க கட்சி ஒழிப்புல மட்டும் இறங்கிட்டீங்க போலிருக்கு...
அட... அதெல்லாம் ஒண்ணுமில்லே... எல்லாம் நியாயப்படிதானே நடக்குது!
ஆமா... ஆமா .... அந்த ஊழல் ஒளிப்பு நியாயத்தைத்தான் எங்க கட்சின்னும் பாக்காம  செய்யிறோம்னு மேடமும் சொன்னாங்க.!!!!

சுயமரியாதை உத்தியோகம்?!





அரசியல்-’டூன்’!

வாசல்லியே  இருந்து, கெஞ்சுகிறா மாதிரி...  அட என்னமோ சொல்லுவாங்களே அந்த.... உத்தியோகமா போயிட்டுதே!
எல்லாம்... பாசம்..  எல்லாம் .... தலை எழுத்து...!
அன்னிக்கி தலை கேட்டாருன்னு... கூடவே கேட்டமே... உஞ்சவித்திக்காரனுக்கு உத்தியோகம் எதுக்குன்னு?
ம்ம்ம்ம்... சுயமரியாதைக் கதை ஏதாவது யோசிக்க வேண்டியதுதான்!

முன்னாள் அமைச்சர்கள் மயம்!


வணக்கம்மா வாங்க வாங்க... அடுத்த வாரம் அப்படியே எங்க ஊருப் பக்கம் போயி வரலாமுன்னு இருக்கேன். ஒரு வாரமாச்சும் ஆகும். அதுக்குள்ள அடுத்த அமைச்சரவை மாற்றம் அது இதுன்னு எனக்கு வேலை வைக்க மாட்டீங்களே! ஏன்னா இந்த 5 வருஷத்துல, வருஷத்துக்கு 50 பேர் வீதம் 250 முறை அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்ய வேண்டியிருக்குமாம்... ஒரு பய ’பெட்’ கட்டுறான்...  அது எப்படிடான்னு கேட்டா... ஒரு சிலருங்க ரெண்டு மூணு வாட்டி அமைச்சரு ஆவாங்களாம்.. ஆனாம்மா... நீங்க ஒரு ரெக்கார்ட் பிரேக் பண்ணப் போறீங்க... இந்த சட்டசபைக் காலம் முடியும்போது எல்லாரும் முன்னாள் எம்.எல்.ஏவா இருக்கமாட்டாங்க... எல்லாருமே முன்னாள் அமைச்சர்களா இருப்பாங்க...

ஊழல் நாத்தம் தாங்கலே




அந்த ஆளு டியூப்லைட்டு கியூப்லைட்டுன்னு உளறுவதைக் கேட்டாலே வாய்நாத்தம் தாங்கமுடியலே! ’கப்’ அடிக்குது.... பேச வந்து உக்காந்தா, ஊழல் நாத்தம் தாங்க முடியலே! பேசாம பேசாமலேயே இருந்துருக்கலாமோ?!

பிரதம ஜோஸியக்காரர்




நமஸ்தே நமஸ்தே.. வாங்க வாங்க... என்ன பிரதமர்ஜி.. நல்லா படிச்சிட்டிருக்கீங்க போலிருக்கு?!
நமஸ்தே... என்ன ராகுல்ஜி சொல்றீங்க? நான்தான் அப்பவே நிறைய படிச்சிட்டேனே!
இல்ல இல்ல... நான் சொன்னது ஜோஸியப் புத்தகங்களை...
அப்படின்னா? புரியலியே!
அதான் இப்போ நல்ல நேரம், நட்சத்திரம், ராசி, ஹோரைன்னு எல்லாம் பாக்குறாமாதிரி தெரியுதே! இதுதான் ஊழலை ஒழிக்க நல்ல நேரம்னு பஞ்சாங்கம் பாத்து சொல்லியிருக்கீங்களாம்..! எனக்கும் பார்த்து சொல்லுங்க. .. எது நான் என்ட்ரி ஆகுறதுக்கு நல்ல நேரம்னு!

மகா மானஸ்டர்ர்ர்ரு




ஹய்யோ... ஹய்யோ... இந்த ஆளுங்க இப்படி புசுக்குனு போவாங்கன்னு கொஞ்சம்கூட நா எதிர்பாக்கலே!
யாரைச் சொல்றீங்க...
எல்லாம் இந்த அண்ணா ஹசாரே ஆளுங்கதான்! என்னல்லாம் பேசிட்டிருந்தாரு.... இப்ப பாருங்க காங்கிரஸை எதிர்க்க மாட்டேன்னு ஒரே போடா போட்டுட்டாரு! நம்ம திக்விஜய் சிங் ஒரு ஆளோட வாய்க்கே தாக்குப் பிடிக்க முடியாம ஜகா வாங்குறாங்களே! நாம எல்லாரும் சேர்ந்து ஆரம்பத்திலயே இப்படி செஞ்சிருந்தா..? இவங்கள்லாம் வந்திருக்கவே மாட்டாங்களே!
அதானே! மானஸ்தன்லாம் பொதுவாழ்க்கைக்கு வரக்கூடாதுன்னு சும்மாவா சொல்லி வெச்சாங்க! நாம எத்தனை பேர பாத்துருப்போம்ம்ம்ம்!
ஹா... ஹா... இன்னும் கொஞ்ச நாள்ல பாருங்க... ஊழலா அப்படின்னா? லோக்பாலா... அப்படின்னா? ஊழல் எதிர்ப்பு இயக்கமா அப்படின்னா? இப்படில்லாம் கேக்கப் போறாரு பாருங்க...

வியாழன், அக்டோபர் 13, 2011

இப்படித்தான் தள்ளிக்கிட்டு போகணும்!



இப்படித்தான் தள்ளிக்கிட்டு போகணும்!
வேறு வழி?!

நாட்டின் அதிகார அமைப்பு!?




யலேய் அய்யா.. கொஞ்சம் கதவைத் திறவேம்லே...
ம்ம்ஹூம் தொறக்க முடியாது... எங்க அய்யா திட்டுவாவ...
ஏய்... எஞ்செல்லம்ல... எங்கண்ணுல்ல... சாக்லெட்லாம் வாங்கித்தாறன்... யே சொல்லுடே... ஐஸ்க்ரீம் வேணுமா? வாங்கியாறம்லே... கொஞ்சம் கதவைத் திறவேன்...
ம் ஹூம் தொறக்க முடியாது! எங்க அய்யா சொல்லிருக்காவ... நீங்க சொல்லுதீயல்லா... இந்த மாதிரில்லாம் சொல்லிக்கிட்டு பூச்சாண்டிங்க வருவாங்க... அவங்க என்ன சொன்னாலும் சரி... என்ன செஞ்சாலும் சரி... கதவ மட்டும் தொறந்துடாதன்னு சொல்லிருக்காவ...
ஏய் நீ இப்ப்டில்லாம் பேசினா உன்னை போலீசு அங்கிள் கிட்ட பிடிச்சுக் குடுத்துடுவேன்...
அது சரி! நீங்க புடிச்சிக் குடுக்கலைன்னாலும் எங்க அய்யாவும் அதத்தான் செய்வாரு! அதுனால தொறக்க மாட்டேன்!
யப்பா... நாங்கல்லாம் சிபிஐகாரவுக... அதான்ம்லே ஒங்கிட்ட கெஞ்சி கேக்கோம்... சமத்தா கதவத் தொறந்து விடுதியா?!
மாட்டேன் போ! எங்க அய்யாவும் அதத்தான் சொன்னாவோ! யலேய் சிபிஐகாரவுக வருவாக... கெஞ்சிக் கேப்பாக; ஆசை வார்த்தை சொல்லி கேப்பாக... ஆனா கதவ மட்டும் தொறந்துடாதன்னு நேத்து மட்டுமா சொன்னாவோ.... ஆறு மாசமா சொல்லிட்டிருக்காவல்லா! ஐங் நானா தொறந்துவிடுவேன்... வேற சோலிய பாருங்க.. போங்க!
யலேய் தம்பி... அர மணி நேரத்துக்கு மேல ஆயிட்டுடே! அமைச்சர் வீடா இருந்தா நாங்க வருவமா? முன்னாள் அமைச்சர் வீட்டுல ரெய்டுக்கு வந்ததுக்கே இப்டில்லாம் கெஞ்ச வேண்டிருக்குடே! எங்க நெலமைய கொஞ்சம் யோசிச்சி பாத்தியா? மீடியாகார பயலுவ வேற கேமராவ மேலயும் கீழயுமா ஆட்டிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் அலையுதாவ! ஏ... கொஞ்சம் தயவு பண்ணி கதவ திறந்து விடுப்பா... இல்லன்னா...
இல்லைன்னா.... என்ன செய்வீய?
அ.....ழு..... து....டு..வேன்...
சரி சரி... கண்ணை துடைச்சிக்கிங்க! ஒங்களைப் பாத்தா பாவமா இருக்கு! நான் தொறந்து விடுதேன்! ஆனா எங்க அய்யாட்ட என்னய மட்டும் மாட்டி விட்டுடாதீய... சரியா!!!

அடையாள பொம்மைகள்



கொலுவோடு கொலுவாக
அடையாளம் தெரியாமல்!

இப்படியும் பேச வரும்!?



அட... இப்படியும் பேச வேண்டி வருமோ?
.......
ஒரு காலத்தில் நாங்கள் ஒருவரை மலையாளி என்று மதிப்போடு கூறி மகிழ்ந்தோம். ஆனால், பதிலுக்கு அவர்கள் எங்களை தெலுங்கர் என்று கேவலமாக, அரசியல் நாகரிகம் இல்லாமல், மனிதப் பண்பே இல்லாமல் கொக்கரித்து வக்கிரமாக மகிழ்ந்தார்கள். நான் சவால் விடுகிறேன்.... என்னை தமிழன் இல்லை என்று நிரூபிக்கத் தயாரா? நான் இந்த மண்ணின் மைந்தன் என்று நிரூபிக்கிறேன். அந்த சும்மையார் சும்மாவாச்சும் கூறிச் சென்றால் நாங்கள் சும்மாயிருப்பதா? நேற்று கேள்வி கேட்டார்கள்... பிறப்பு இடச் சான்று அளிக்கும் அதிகாரி கையொப்பம் இட்டுத் தந்த பிறப்பிடச் சான்றெல்லாம் இருக்கிறதா என்று! இவர்கள் இப்படி எல்லாம் கேட்கிறார்கள் என்றவுடன், இந்தப் பொய்யை, அதுவும் ஒரு பொறுப்பில் இருக்கும் ஒருவர் கூறும் பொய்யை பொய்யாக்க வேண்டும் என்பதற்காகத்தான்... இன்று அதிகாலை மேலோகத்தில் இருக்கும் அந்த அமரரான அதிகாரியிடம் இருந்து மைண்ட் வேவ் நவீன டெக்னாலஜி மூலம் இதோ... இப்போதுதான் வரவழைத்து உங்களிடம் எல்லாம் காட்டுகிறேன் அந்த பிறப்பிடச் சான்றிதழை!

அவ தாரமே! அட பாரமே!


குப்பைத் தொட்டி கவிழ்ந்து கிடப்பது போல்
பின்னே...
தீவிரவாதத்தை ஒழிக்க எடுத்த அவதாரமாம்
இதற்கு மேல் நோ கமெண்ட்ஸ்...

வியாழன், செப்டம்பர் 22, 2011

காலமானார் - கமலா ரங்கநாதன்


திங்கள், செப்டம்பர் 05, 2011

Guru charanam



Guru Brahmaa Guru Vishnu
Guru Devo Maheswara
Guru Saaksaat Param Brahma
Tasmai Shri Guruve Namaha

Meaning
Guru Is Brahmaa (Who plants the qualities of goodness)
Guru Is Vishnu (Who nurtures and fosters the qualities of goodness)
Guru Is Maheswara (Who weeds out the bad quality)
Guru Is Supreme Brahman Itself
Prostration Unto That Guru
-------------------------------
Guru Brahma, Guru Vishnu, Guru Devo Maheshwara. Guru Sakshath Parambrahma, Tasmai Shri Gurave Namaha. (tr: Guru is the creator Brahma, Guru is the preserver Vishnu, Guru is the destroyer Siva. Guru is directly the supreme spirit — I offer my salutations to this Guru.)

திங்கள், ஆகஸ்ட் 29, 2011

மொழி இணைப்புப் பாலம் அமைத்த ரா.வீழிநாதன்

மொழி இணைப்புப் பாலம் அமைத்த ரா.வீழிநாதன்



செங்கோட்டை ஸ்ரீராம்
First Published : 28 Aug 2011 01:37:45 AM IST
தமிழ் மொழிபெயர்ப்பு இலக்கிய உலகில் தனி இடம் பெற்றவர் ரா.வீழிநாதன். சிறந்த படைப்பாளி. இலக்கியவாதிகள், வாசகர்கள் மத்தியில் மிகப் பிரபலமான பெயர். தமிழில் இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகள், கட்டுரைகள், புதினங்களைப் படைத்தவர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியப்பணி புரிந்தவர். இதற்காக அவர் கற்றவை மிக அதிகம். கல்கி வார இதழில் உதவி ஆசிரியராக வெகுகாலம் பணி செய்த இவர், பின்னாளில் காஞ்சி மகாபெரியவர் ஆசியுடன் வெளிவந்த "அமரபாரதி' மாத இதழின் நிறுவன ஆசிரியரானார். மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர். இந்தியிலிருந்து தமிழில் இவர் மொழிபெயர்த்துள்ளவை மிக அதிகம். குஜராத்தி, மராத்தி, உருது, பெங்காலி ஆகிய மொழிகளிலும் தேர்ந்தவர்.
 1920-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பூந்தோட்டத்துக்கு அருகில் உள்ள விஷ்ணுபுரம் என்ற கிராமத்தில் பிறந்தார். காவிரியின் கிளை நதியான அரசலாற்றின் கரையில் உள்ள திருவீழிமிழலை இறைவன் பெயரையே பெற்றோர் இவருக்குச் சூட்டினர்.
 அடிப்படைப் படிப்பறிவே ஆடம்பரமாகக் கருதப்பட்ட அந்தக் காலத்தில், ரா.வீ.க்கு ஹிந்தி உள்ளிட்ட வேற்று மொழிகளும் படிக்க ஆசை. அந்தக் கிராமத்திலேயே வசித்த வி.கே.சுப்பிரமணிய ஐயர் இவரைத் தன் மகன்போல் நேசித்து, எந்தவித குருதட்சிணையும் இன்றி ஹிந்தி கற்றுக் கொடுத்தாராம். தொடர்ந்து சம்ஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளும் கற்றார் ரா.வீ.
 இவருக்கு 14 வயது இருக்கும்போது, தவளாம்பாள் என்ற பெண்ணை மணம் செய்து வைத்தனர். அவரே ரா.வீ.யின் மூச்சுக்கும் பேச்சுக்கும் காரண சக்தியாக விளங்கினார். பெரும்பாலானோர், குடும்பம் ஓர் இம்சை என்று கருதும் நிலையில், ரா.வீ.யின் எழுதும் இச்சைக்கு உயிரூட்டியவர் மனைவி தவளாம்பாளே. இதை பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார் ரா.வீ.
 காந்தியின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார். இந்தி ராஷ்டிரபாஷா தேர்வில் தென்னாட்டிலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து இந்தி பிரசார சபைகளிலும், திருச்சி ஜோசப் கல்லூரி, தேசியக் கல்லூரி, ஹோலி கிராஸ் கல்லூரிகளில் இந்தி விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். பிரசார சபை நடத்தி வந்த "இந்தி பத்ரிகா' இதழிலும் பங்காற்றியுள்ளார். சென்னையில் இந்தி பிரசார சபா வெள்ளிவிழாவுக்கு காந்திஜி வருகை தந்தபோது, அவருடன் இணைந்து பங்காற்றிய பெருமை ரா.வீழிநாதனுக்கு உண்டு.
 வீழிநாதனின் முதல் சிறுகதை "ரயில் பிரயாணம்' 1942-இல் "கலைமகள்' இதழில் வெளியானது. தொடர்ந்து "காவேரி' இதழில் இவர் படைப்புகள் வெளிவரலாயின. அடுத்து, "கல்கி' இவரைப் பெரிதும் ஆட்கொண்டது. கல்கியில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். கூடவே, இந்தியில் தயாரான "மீரா' படத்துக்கு வசன மேற்பார்வையும், அதில் நடித்த எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு இந்தி கற்றுக்கொடுக்கும் பணியும் சேர்ந்தே நடந்தது.
 "கல்கி' கிருஷ்ணமூர்த்தியே வீழிநாதனை சம்ஸ்கிருத, இந்திக் கதைகள், படைப்புகளை தமிழில் மொழிபெயர்க்கத் தூண்டுகோலாக இருந்தார். தனது கதைகள், நாவல்களை இந்தியில் மொழிபெயர்க்கச் சொன்னார். சோலைமலை ராஜகுமாரி, பார்த்திபன் கனவு, அலையோசை ஆகியவை இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டன. அலையோசை, "லஹரான் கி ஆவாஜ்' என இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது இவருக்கு சிறந்த மொழிபெயர்ப்பு விருதைப் பெற்றுத் தந்தது. அதன் மூலம் ரா.வீழிநாதன் பெயர் தமிழ்-இந்தி இலக்கிய இதழியல் உலகில் மிகப் பிரபலமடைந்தது. இவைதவிர, சிறுகதைகள், கட்டுரைகள், துணுக்குகள் போன்றவற்றை அதிகம் எழுதியுள்ளார். காவேரி, கல்கி, நவயுவன், கலைவாணி, சக்தி, கலைமகள், ஆனந்தபோதினி, பிரசண்ட விகடன், நவசக்தி, நாடோடி, தென்றல், மாலதி, திரைஒலி, சிவாஜி, ஹிந்துஸ்தான், நல்ல மாணவர், அணுவிரதம், தமிழ்நாடு, குமுதம், விகடன், சாவி, இதயம் பேசுகிறது, முத்தாரம், மஞ்சரி, விஜயபாரதம், கோகுலம், பூந்தளிர், சுதேசமித்திரன், தினமணி, தினமணி கதிர் என அந்தக் காலத்தைய அனைத்து பத்திரிகைகளிலும் இவரின் படைப்புகள் வெளியாகியுள்ளன.
 குறும்பன், அட்சயம், ஆங்கிலம், மாரீசன், ராமயோகி, ராமகுமார், கிருத்திவாஸ், ராவீ, விஷ்ணு என்றெல்லாம் புனைபெயர் வைத்துக்கொண்டு எழுதினார் ரா.வீழிநாதன். "காசி யாத்திரை' என்ற நூல் இவரின் எழுத்துலக அனுபவத்துக்குச் சான்று. விசும்பரநாத் கெüசிக் எழுதிய பிகாரினி (பிச்சைக்காரி) நாவலை இவர் யசோதரா என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். இதில் சாண்டில்யனின் முன்னுரை, நூலின் சிறப்பை உணர்த்தும்.
 குறிப்பாக, ஜெகசிற்பியனின் ஜீவகீதம் நாவல், "பஹர் க அத்மி' என்ற பெயரில் மொழிபெயர்ப்பானது. ஜெயகாந்தனின் ஜெய ஜெய சங்கர, ராஜாஜியின் பஜகோவிந்தம், நவீன உத்தரகாண்டம் ஆகியவை இதே பெயர்களில் இவரால் இந்திக்குச் சென்றன. நா.பா.வின் சமுதாய வீதி, தி.ஜா.வின் வடிவேலு வாத்தியார், பி.எஸ்.ராமையாவின் பதச்சோறு, என்.சிதம்பர சுப்ரமணியத்தின் இதயகீதம் உள்ளிட்ட மேலும் பல நூல்கள் இந்தி இலக்கிய உலகில் இடம்பிடிக்கக் காரணமாக அமைந்தவர் ரா.வீ.
 1980 பிப்ரவரி முதல் இவர் நிறுவன ஆசிரியராக இருந்து நடத்திய "அமரபாரதி' பத்திரிகையை குடும்பப் பத்திரிகை என்றே சொல்வார் ரா.வீ. பத்திரிகைப் பணிகளில் குடும்ப உறுப்பினர்கள் எல்லோருமே உதவி செய்ததால் அவ்வாறு கூறுவதாகச் சொல்வார் ரா.வீ.
 ""எழுதுவது அற்புதமான கலை. சக்தி வாய்ந்தது. அதற்கு நல்ல கல்வியறிவும், விஷயங்களைப் புரிந்துகொண்டு வெளிப்படுத்தும் திறனும் மிகத் தேவை. நல்ல மொழியறிவு அவசியம். இவையெல்லாம் இருந்தால்தான் எழுத்தின் மூலம் நல்ல கருத்துகளை, சொல்ல வருவதை மிகத் தெளிவாக அழகாக வாசகரிடம் கொண்டு சேர்க்க முடியும்'' - இது ரா.வீழிநாதன் அடிக்கடி சொல்லும் விஷயம்.
 சிறிய துண்டுத் தாளில்கூட குறிப்புகளை எழுதுவார். துணுக்குகள் படைப்பார். தம் 75-ஆம் வயதில் அவர் மறையும் வரை, துணுக்குகள் எழுதுவதைக்கூட அவர் கைவிடவேயில்லை. "என்னதான் இலக்கியவாதியாக இருந்தாலும், மொழிபெயர்ப்பு இலக்கியத் துறையில் ஈடுபடுபவரை இரண்டாம்தரக் குடிமகனாகக் கருதும் போக்கு வருந்தத்தக்கது' என்பதை அவரே ஓரிடத்தில் பதிவு செய்திருக்கிறார்.
 மஞ்சரி இதழில் ரா.வீ.யின் எழுத்துகள் அதிகம் இடம்பெற்றன. மொழி பெயர்ப்புக் கலை குறித்த இவருடைய சிறு சிறு கட்டுரைகள், தமிழ்ப் படைப்புகள் உலகை ஆக்கிரமிக்க வழி சொல்லுபவை. மொழிபெயர்ப்பு இலக்கிய உலகில் தனித்துவம் பெற்ற இதழாளர். நவீன உலகில் தமிழின் ஆளுமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் ஒவ்வொருவரும் அடையாளமாகக் கொள்ள வேண்டியவரும்கூட!

திங்கள், ஆகஸ்ட் 15, 2011

காதிலே பூ! கொள்கையெலாம் ப்பூ ப்பூ...

உண்ணாவிரதம் என்றால் என்னவென்றே தெரியாத

அன்னியன் ஆங்கிலேயனிடம்
உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டாய்!
உத்தம உருவாய் உனைக் கொண்டாடியது உலகம்!

உன் வழியைத்தான் இன்றும் ஒருவர் மேற்கொண்டிருக்கிறார்...

உண்ணாவிரதம் என்றால் என்னவென்றே தெரியாத
அன்னிய அடிவருடிகளிடம்...
போராட்டம் நடத்துபவரையே களங்கம் சுமத்தி
அப்புறப்படுத்தும் வழி கண்டவர்களாய்..!

அன்று அகிம்சைப் போராட்டத்தாலே
காங்கிரஸ் இயக்கம் கொண்டு
ஆங்கிலேயன் காதிலே பூச்சுற்றினாய்!
இன்று ஹிம்சை செய்வதையே வழியாய்க் கொண்ட
காங்கிரஸ் கட்சிக்காரர்கள்
உன் பெயரையே போட்டுக்கொண்டு
உன் காதிலே பூச்சுற்றுகிறார்கள்...

அட... இருங்க... இருங்க...
எங்கள் பங்குக்கு நாங்களும் சுற்றுகிறோம்...

ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2011

விமர்சனக் கலைக்கு வளம் சேர்த்த க.நா.சுப்ரமணியம்


விமர்சனக் கலைக்கு வளம் சேர்த்த க.நா.சுப்ரமணியம்

First Published : 14 Aug 2011 03:03:11 AM IST

மிழின் இலக்கிய வளமையும் தொன்மைச் சிறப்பையும் நமக்குள்ளே வைத்திருத்தல் தகாது; உலக மொழிகளில் எடுத்துச் சென்றால் அதன் பெருமை உயரும் என்றெண்ணியவர் க.நா.சு. அதனால் தமிழின் தலைசிறந்த படைப்புகளை ஆங்கிலத்தில் கொண்டுசெல்ல மொழிபெயர்ப்புக் களம் கண்டார். உலக இலக்கியத்துக்கு இணையாக உயர்ந்த தரத்தில் நவீனத் தமிழ் இலக்கியமும் திகழ வேண்டும் என்ற விருப்பத்தால், இப்பணியில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டவர்.
 க.நா.சு. என்ற மூன்றெழுத்தால் இலக்கிய உலகில் செல்லமாக அழைக்கப்பட்டவர் க.நா.சுப்ரமணியம். கந்தாடை நாராயணசாமி ஐயரின் புதல்வராக சுவாமிமலையில், 1912-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி பிறந்தார்.
40 நாவல்கள், 10 சிறுகதைத் தொகுதிகள், 80க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், தத்துவ விசார நூல்கள் 10, இலக்கிய விசாரம் என்ற கேள்வி பதில் நூல் ஒன்று, உலகத்துச் சிறந்த நாவல்கள், உலகத்துச் சிறந்த நாவலாசிரியர்கள், உலகத்துச் சிறந்த சிந்தனையாளர்கள் என மூன்று தொகுதிகள், இலக்கிய விமர்சன நூல் ஒன்று. இன்னும் பல நூல்களை தம் 86 வயதுக்குள் எழுதிக் குவித்தவர் இவர். அதற்கு மூல காரணமாக அமைந்தது, சிறுவயதிலேயே இவர் ஊன்றிப் படித்த இலக்கியங்கள் மற்றும் பிற நூல்கள்தான்.
 ÷சுவாமிமலை கோவிலருகே தொடக்கப்பள்ளியில் தொடங்கி, பின்னர் கும்பகோணம் நேட்டிவ் உயர்நிலைப் பள்ளியில் படிப்பு தொடர்ந்தது. அவருடைய தந்தைக்கு சுப்பிரமணியத்தை ஏதாவது ஓர் அரசுப் பணியில் அமர்த்திவிட எண்ணம். எனவே, ஆங்கிலக் கல்வி முறைக்கு மாற்றிப் படிக்க வைத்தார். கும்பகோணம் அரசுக் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலை என விரிந்த அவருடைய கல்விப் பயணம், அவருக்கு இலக்கிய அறிவையும் கூடவே ஆங்கிலப் புலமையையும் தந்தது.
படிக்கும் காலத்திலேயே ஐரோப்பியப் பத்திரிகைகளுக்கு கதைகள் அனுப்பி வைத்தார் சுப்ரமணியம். வெளிநாட்டு மற்றும் இந்திய ஆங்கிலப் பத்திரிகைகளில் அவருடைய கதை கட்டுரைகள் வெளிவந்தன. 1935-இல் டி.எஸ்.சொக்கலிங்கம் நடத்திவந்த "காந்தி' இதழில் வெளிவந்த கதைகள் அவரது சிந்தனையை தமிழின்பால் திருப்பின. தொடர்ந்து மணிக்கொடி அவரை ஈர்த்தது. தமிழில் எழுதத் தொடங்கினார் க.நா.சு.
 ÷தமிழ் இலக்கியப் பணிக்காகச் சென்னை வந்தவர், தன் எழுத்துகளுடன் கால் பதித்தது "தினமணி' அலுவலகத்தில். அங்கே எழுத்தாளர் வ.ரா. இவருடைய கையெழுத்துப் பிரதிகளை வாங்கிப் பார்த்தார். கே.என்.சுப்ரமண்யம் என்று கையெழுத்துப் போட்டிருந்தார்.
வ.ரா. கேட்டார்... ""நீர் என்ன ஆங்கிலேயனுக்குப் பிறந்தவரா... கே.என்.சுப்ரமண்யம் என்று எழுத?'' வெடுக்கென்று கேட்டார். சுப்ரமண்யமோ யோசித்துக் கொண்டிருந்தார். ""கே.என்.சுப்ரமண்யம் என்றெல்லாம் எழுதாதீர்... கந்தாடை நாராயணசாமி ஐயர் மகன் சுப்ரமண்யம் அல்லவா நீர்; க.நா.சு. அல்லது க.நா.சுப்ரமண்யம் என்றே எழுதும்'' என்று கட்டளையிட, இவரும் அதை ஏற்றுக்கொண்டார். அதுமுதல் க.நா.சு. என்ற மூன்றெழுத்துப் பெயர் தமிழ் இலக்கிய வானில் சுடர்விடத் தொடங்கியது.
ஒரு நாளைக்கு குறைந்தது 10 பக்கங்கள் தமிழில் சுயமாக எழுதுவது, 15 பக்கங்கள் தமிழில் மொழிபெயர்ப்பது, 10 பக்கங்கள் ஆங்கிலத்தில் புதிதாகப் படைப்பது, இத்துடன் மதிப்புரை, விமர்சனங்கள் எழுதுவது என்பதை எழுத்துப் பணிக்கான திட்டமிடலாகக் கொண்டார். தழுவல் எனும் உத்தியோடு விகடன், சுதேசமித்திரன், இமயம், சக்தி, ஜோதி உள்ளிட்ட இதழ்களில் பிறமொழி இலக்கியங்களைத் தமிழில் தந்தார்.
 "சூறாவளி' எனும் இலக்கிய இதழைத் துவக்கினார். ராமபாணம், சந்திரோதயம், இலக்கிய வட்டம், ஞானரதம், முன்றில்... இவை எல்லாம் க.நா.சு.வால் தொடங்கப்பட்ட இதழ்கள்தான். இவற்றால் ஏற்பட்ட பொருளாதார நஷ்டம், தமிழுலகுக்கு மாபெரும் மொழிபெயர்ப்பு இலக்கிய நஷ்டத்தைத் தந்துவிட்டது.
 ÷தயவு தாட்சண்யமற்ற கண்டிப்பான விமர்சனங்களுக்குப் பெயர் பெற்றவர் க.நா.சு. "தினமணி'யில் இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் அதிகம் எழுதியவர். அசுரகணம், பித்தப்பூ, தாமஸ் வந்தார், கோதை சிரித்தாள் எனப் பல நாவல்களையும் எழுதியுள்ளார். 1979-இல் குமாரன்ஆசான் நினைவு விருது, 1986-இல் சாகித்ய அகாதெமி விருது என விருதுகளும் பெற்றவர். பொய்த்தேவு - இவரது பிரபலமான நாவல்களுள் ஒன்று.
 ÷அந்நாவலில் இவரது எழுத்து நடை கதை நடையாக இல்லாமல் பல இடங்களில் கட்டுரை நடையாகவே இருக்கிறது என்பது அந்தக் கால விமர்சகர்களின் கணிப்பு.
 ÷க.நா.சு. மேற்கத்திய எண்ணம் கொண்டவர்; தமிழ்நாட்டைப் பற்றி அக்கறை இல்லாதவர் என்றெல்லாம் அந்தக் காலத்தில் அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவர் மேற்கொண்ட மொழிபெயர்ப்புப் பணி அதற்குக் காரணமாக இருக்கலாம். இருப்பினும், மொழிபெயர்க்கப் படைப்புகளைத் தேர்வு செய்யும்போது அதை உணர்வுப்பூர்வமாகவே செய்தார் என்பது புரியும். ÷தமிழர்களை, தமிழ்க் கலாசாரத்தை மனதில் கொண்டே, அவர்களுக்கு ஒட்டக் கூடியதைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தார் என்பதையும் உடனிருந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
 ஆனால், க.நா.சு.வே விமர்சனக் கலைக்கு உரமிட்டவர். அவருடைய விமர்சனங்கள் இன்றளவும் பேசப்படுகின்றன. அந்த வகையில், க.நா.சு.வுக்கு எழுத்துத் துறைக்கு அப்பால் நண்பர்கள் அதிகம் இருந்ததில்லை. சம காலத்து எழுத்தாளர்கள் பற்றி, படைப்புகள் பற்றி நிறைய விமர்சனங்கள் செய்துள்ளார் க.நா.சு. ஆனால், பாரதி பற்றி அவரிடம் ஒரு மெüனமே இருந்திருக்கிறது. பாரதியைக் குறைசொல்லி எழுதியதுமில்லை; பாராட்டியும் சொன்னதில்லை.
 தன் விமர்சனங்கள் பற்றி அவர் ஓரிடத்தில் சொன்னது...
 ÷""நீங்கள் அழிக்கும் விமர்சனம் ஏன் எழுதுகிறீர்கள்; ஆக்க விமர்சனம் செய்யக்கூடாதா என்றுதான் விமர்சனம் எழுத ஆரம்பித்த காலத்தில் பல வாசகர்கள் என்னைக் கேட்டதுண்டு. அதற்கு ஒரே பதில்தான் உண்டு. அழிக்கப்பட வேண்டியது அதிகமாக இருக்கும்வரை அழிக்கும் விமர்சனம் செய்தேதான் தீரவேண்டும். ஆனால், ஆக்க விமர்சனம் இல்லாமல் அழித்தல் விமர்சனம் என்று ஒன்று கிடையாது. இலக்கிய விமர்சனத்தில் ஒரு நோக்கில் அழிப்பதும் ஆக்குவதும் ஒன்றே என்றுதான் பதில் தரவேண்டும். மற்றபடி கவிதை, சிறுகதை, நாவல் என்று எழுதுகிறபோது நான் எழுதியதை எந்தச் சுண்டைக்காய் வாசகன் ஏற்றுக் கொள்ளுவான் என்பது பற்றி எனக்கு நினைப்பு இருப்பதில்லை. தான் இன்று கவிதை என்று எழுதுவதை, கம்பனும் இளங்கோவும், டாண்டேயும், ஷேக்ஸ்பியரும் இன்று இருந்தால் ஏற்றுக் கொள்வார்களா என்பதுதான் என் நினைப்பு. நிகழ்கால வாசகன் அறிவால், ஆற்றலால், அரசியலால் அவர்களை விடச் சிறந்தவனாக இருக்கலாம்; ஆனால், இலக்கியத் தரத்தால் எந்த வாசகனும் எந்தக் காலத்திலும் எட்டாத ஒரு தரத்தையே பழங்கால, நிகழ்கால, வருங்கால எழுத்தாளர்கள் எல்லாம் எட்ட முயலுகின்றனர். அந்தத் தரம் ஒரு சரடு; அதைக் கண்டுகொள்ளத்தான் நம் பொது ஸீரியஸ் எழுத்தாளனும், தரமுள்ள இலக்கியாசிரியனும் முயலுகிறான். அந்தத் தரத்தை வாசகர்கள் தேடிக் கண்டுகொள்ள வேண்டும். இன்றைய வாசகர்கள் தேடத் தயாராக இல்லை. ஆனால் அவர்கள் தேடுவது அவர்களுக்குக் கிடைக்கும்...'' என்கிறார் க.நா.சு.

சனி, ஆகஸ்ட் 13, 2011

தேசம் விற்பனைக்கல்ல!



தேசம் விற்பனைக்கல்ல!

தேசியம் பேசினவன் ஒரு வகை
சுதேசியம் சொன்னவனும் ஒரு வகை
பாசிசம் பகன்றவனோ பல வகை
நாசிசம் மாக்கிசம் என்றெல்லாம் இசங்களை
பூசித்துக் காப்பதெல்லாம் போதாதா?

தேசத்தின் போராட்டம் எதை நோக்கி?
அடிமைத்தனம் அறுத்து அவதி நீக்க அல்ல!
அடிமை மோகத்தால் அவதி பெருக்க!

நம் தேசத்தின் இசம் எது?
இந்துயிசமா? புத்திசமா?
கிறிஸ்துவ இஸ்லாமிசமா?
இல்லவே இல்லை!

இந்த இசங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி
நம்பர் ஒன் இடம்பிடித்த இசம் ஒன்றுண்டு!

அந்த இசம்...
கூட்டுக் குடும்பத்தைக் கொலை செய்தது!
கூட இருந்தவனைக் குழிபறிக்கச் செய்தது...
பெண்ணாசை பொன்னாசை மண்ணாசை
துறக்கச் சொன்ன இசத்தையும் இம்சித்தது...

பாசத்தைப் படுகுழியில் தள்ளி,
சுயநலப் பித்தை வளர்த்தெடுத்தது!
நண்பர்களோ, உறவினர்களோ...

ஏன் ஏன்...
அண்ணன் தம்பி அம்மா அப்பா என்றாலும்,
ஓர் அறைக்குள் ஒட்டிக் கொண்டிருந்தாலும்,
இருவேறு ஆசைகளை வளர்த்தெடுத்தது!

வாழ்க்கை நெறிமுறை தொலைக்க வைத்து
வாழுதற்காய் முறைதவறும் மனம் வளர்த்தது!
நட்பு தொலைத்தது; நல் உளம் சிதைத்தது...

உதவும் எண்ணத்தை உருத்தெரியாமல் ஆக்கியது!
உடன் வந்தான் உதவி செய்வோம் உருப்படுவான் என்று பார்த்தால்,
கடன் வாங்கிக் கம்பி நீட்டிக் கழுத்தறுக்கச் செய்தது!
ஊழல், லஞ்சம், ஏமாற்றல், நயவஞ்சகம்...
எல்லாம் இந்த இசத்தால்தான்!

தேசத்தில் நிகழும் தவறுகளுக்கெல்லாம்
இந்த இசத்தின் வீச்சும் ஆளுமையுமே காரணமாம்!

தேசத்தை விலை பேச வைக்குது!
வாயில் சுதேசியம் பேசி, கையில் தேசியம் பிடித்து,
வாயில் கதவோ வெளிநாட்டுப் பொருளுக்கு திறக்க வைக்குது!

பெரும்பான்மை மதம் போலே
நமக்குள் நுழைந்திட்ட இந்த இசம்...
எந்த இசம்..?

எல்லாம் இந்த
கன்ஸ்யூமரிசம்தான்!

கன்ஸ்யூமரிசம்தான்!

இந்த இசத்தின் வழி நடப்போர்க்கு
நுகர்வோர் என்பது பெயர்...

நாமும் நுகரத் தலைப்பட்டோம்
வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட
நுகர்வோராய்!

இப்போது சொல்லுங்கள்...
நம் தேசத்தின் போராட்டம் எதை நோக்கி?

வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

சகோதரத்துவ நாளாம்!

சகோதரத்துவ நாளாம்!


-----------------------------------------------------------------------
கழுத்திலே கட்ட எண்ணமாம்!
தடுக்க என்ன செய்வது?!
கையிலே கட்ட இதோ நாள் வந்தது!
கழுத்திலே அவன் மாட்டிக் கொள்ளாமல்
இருக்கணுமே!

எல்லாம்...??!
ஒரு
கயிறு விஷயம்தான்!

ஞாயிறு, ஜூலை 31, 2011

சந்தனச் சமச்சீர் வேண்டுமடா!


அப்போ...
இந்திக்கு டாட்டா சொல்ல வெச்சி
நம்மை சந்திக்கு இழுத்தாங்க...
ஆனா..
அதைப் படிக்க வெச்சே தன் சந்ததியை
டாட்டாவையே மிரட்டுற அளவுக்கு
ஆளாக்கிவிட்டாங்க!

இப்போ..?
சமச்சீரை கொண்டு வரோங்கிற பேருல
கிறுக்கல்களை கிரேட்டுங்கிறாங்க!
சாக்கடையை சந்தனம்கிறாங்க!

சமச்சீருதான் வேணும் தம்பி
அது உண்மையான சந்தனமா இருந்தா..!

சாக்கடைக்கும் சந்தனத்துக்கும்
வித்தியாசம் பாரு தம்பி...
உண்மையான பகுத்தறிவாலே!
சமத்துக்கும் சீருக்கும்
விளக்கத்தைக் கேளாய் தம்பி...
ஊமையான உன்குரலாலே!

படிதாண்டிப் போனா...
பண்பு இல்லே!
சுவர் தாண்டிப் போனா...
சீர்மை இல்லே!

செவ்வாய், ஜூலை 26, 2011

காக்க காக்க கூட்டணி காக்க...

இப்படி ஒரு நிலையாச்சுதே... பரிகாசம் செஞ்சிட்டிருந்தேன்... இப்போ பரிகாரம் வேண்டியிருக்கு... நம்ம சோசியன் எதுனா பரிகாரம் சொன்னானா?

ஆமாங்கய்யா சொன்னானுங்க...
என்னது?
பகுத்தறிவுப் பகலவக் கவசம் படிக்கணுமாம்!
இது எதுல இருக்கு?
ராவண வாரிசுக் காக்காக் காவியத்தில் வருது...
அதுல என்ன பேருல இருக்கு?
நொந்த வேச்டி கவசம்னு இருக்கு!
இதைப் படிச்சா...
எல்லாம் சரியாயிடுமாம்!
அப்படியா...  எங்க படி...பாக்கலாம்!

ம்ம்ம்ம்...படிக்கிறேன்...
கோச்டியை கொஞ்சம் கலைச்சேவிட்டு
கச்டங்களைச் சொல்லி கண்ணு கலங்கணும்
காக்க காக்க களகம் காக்க
நாக்க அடக்கி நயமா வெக்கணும்
காக்க காக்க கூட்டணி காக்க
சேக்கா போட்டே சரண்டர் ஆவணும்
சேச்சீ சேச்சீ சீச்சீ சீச்சீ
ஜெஜ்ஜே ஜெஜ்ஜே.. சீச்சீ சீச்சீ
டூஜி பாஜி போஜி போஜி
சோனிஜி மன்னுஜி ஜேஜே ஜிஜி
நோக்க நோக்க வழக்குகள் நோக்க
சீப்பி ஐயை சிதறே அடிக்க
தாக்க தாக்க பிளாக் மெயிலாலே
பாக்க பாக்க பதவியப் பாக்க
தோக்க தோக்க கேசெல்லாம் தோக்க
கெக்கே பிக்கே காங்கிரசு காக்க
நம்பிக் கிட்டே தினமிதை ஓத
பகுத்தறி வெல்லாம் பழசாப் போக
ராவா ராவா ராவண வாரிசா
தாவா தாவா எல்லாந் தாவா
மாவா மாவா எல்லாம் மாவா
போவ போவ பொடிப்பொடி யாக...........

ஞாயிறு, ஜூன் 26, 2011

நவீன மகாபாரதம் :: சுட்டுக் கட்டியவர் யாரோ?!


























 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix