சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

வியாழன், ஏப்ரல் 10, 2008

THIRUKOSHTIYUR TEMPLE :
SWAMY RAMANUJA'S STATUE


திருக்கோஷ்டியூர் திருத்தலம்

மதுரையிலிருந்து அல்லது, திருச்சி-புதுக்கோட்டை-திருமயம்- வழியாகச் சென்றால் திருப்பத்தூர் அடையலாம். அங்கிருந்து கால் மணி பயணத்தில் திருக்கோஷ்டியூர் செல்லலாம்.

இந்தத் திருத்தலம், சுவாமி ராமானுஜரால் உலகப் பிரசித்தி பெற்றது. காரணம், இங்குள்ள சௌமிய நாராயணப் பெருமாள் ஆலயத்தின் அஷ்டாங்க விமானத்தின் மதில் மீது ஏறி நின்றுதான், ஸ்வாமி ராமானுஜர் தமக்கு குருவான நம்பியிடமிருந்து ரஹஸ்யார்த்தங்களை உபதேசம் பெற்று, அதை பொதுவில் எல்லோர்க்கும் வெளிப்படுத்தினார். உலகுய்ய இந்த உபதேச ரஹஸ்யார்த்தங்களைச் சொன்ன இடத்தில் சுவாமி ராமானுஜரின் கல் திருமேனியும், சுதை மேனி ஒன்றும் அமைத்திருக்கிறார்கள். அந்தத் திருமேனியின் பின்னிருந்து நாம் பார்த்தால் ஒரு வீதி அழகாகத் தெரிகிறது. ஸ்வாமி ராமானுஜர் சொன்னதை பயபக்தியுடன் கேட்டு மகிழ்ந்த பக்தர்கள் எப்படி இருந்து கேட்டிருப்பார்கள் என்ற கற்பனையை நம் மனத்திரையில் போட்டுக் கொள்ளலாம். அந்தத் தெருவில்தான் நம்பிகளின் இல்லமும் இருந்திருக்கிறது. அதையும் நாம் அஷ்டாங்க விமானத்தின் மேலிருந்து தரிசிக்கலாம்.

அஷ்டாங்க விமானம் என்பது மிகவும் சிறப்பான ஒன்று. மதுரை கூடல் அழகர் சன்னிதியிலும், திருக்கோஷ்டியூர் சௌம்ய நாராயணப் பெருமாள் சன்னிதியிலும், உத்திரமேரூர் பெருமாள் சன்னிதியிலும் இந்த அஷ்டாங்க விமான சேவையை அடியேன் தரிசித்திருக்கிறேன்.

இந்த விமானத்தில், ஆடல்வல்லான் நடராஜப் பெருமான், உபதேச மூர்த்தியாக நின்ற தட்சிணாமூர்த்திப் பெருமான், சக்கரத்தாழ்வார், நரசிம்ம ஸ்வாமி என்று பலவிதமான சுதை உருவங்கள் அமைக்கப்பெற்றுள்ளன. வண்ணமயமான இந்த அஷ்டாங்க விமான சேவை என்பது, நம் பாவங்களைப் போக்க வல்லது. அந்த சேவையை அன்பர்களுக்காக அடியேன் இங்கே தந்திருக்கிறேன்.

அன்பன்

செங்கோட்டை ஸ்ரீராம்.

புதன், ஏப்ரல் 09, 2008

Thirumayam- near pudukkoottai, Tamil Nadu. Perumal Koil


திருமயம் பெருமாள் கோயில்


இந்தப் படங்கள், திருமயம் திருக்கோயிலுக்குச் சென்றபோது எடுக்கப்பட்டவை. பொதுவாக இறைவனை புகைப்படம் எடுக்கக் கூடாது என்பார்கள். உடல்நலம் முடியாமல் பெருமாளைக் காணும் ஆவல் மிகுந்த பெரியவர் ஒருவருக்காக அடியேன் எடுத்துவந்த புகைப்படங்கள்... இவை. அந்தப் பெரியவருக்கு மட்டுமல்லாமல், அவரை நேரில் வந்து தரிசிக்க முடியாமல், ஆனால் அவருடைய நினைவாக உள்ள பக்தர்களுக்காக, குறிப்பாக அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் மகன் அல்லது மகள்களுடன் தங்கிவிட்டு, இந்தியாவில் உள்ள இந்தப் பெருமாள் நினைவாகவே உள்ள பெரியவர்களுக்காக இந்தப் படத்தை இடம்பெறச்செய்துள்ளேன். பெருமாள் என்னை மன்னிப்பாராக.

Mr. MOON'S DIFFERENT STYLES


CAN YOU IDENTIFY THESE IMAGES?
IF YOU CAN'T...?SCROLL DOWN

AND

CAN YOU IMAGINE THIS?

YES, THESE POSES ARE GIVEN BY OUR BEAUTIFUL CHANDRAN (MOON).JUST A GIMIX IN THE PHOTOGRAPHIC SENSE... THATS ALL...

 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix