சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

வியாழன், அக்டோபர் 13, 2011

நாட்டின் அதிகார அமைப்பு!?
யலேய் அய்யா.. கொஞ்சம் கதவைத் திறவேம்லே...
ம்ம்ஹூம் தொறக்க முடியாது... எங்க அய்யா திட்டுவாவ...
ஏய்... எஞ்செல்லம்ல... எங்கண்ணுல்ல... சாக்லெட்லாம் வாங்கித்தாறன்... யே சொல்லுடே... ஐஸ்க்ரீம் வேணுமா? வாங்கியாறம்லே... கொஞ்சம் கதவைத் திறவேன்...
ம் ஹூம் தொறக்க முடியாது! எங்க அய்யா சொல்லிருக்காவ... நீங்க சொல்லுதீயல்லா... இந்த மாதிரில்லாம் சொல்லிக்கிட்டு பூச்சாண்டிங்க வருவாங்க... அவங்க என்ன சொன்னாலும் சரி... என்ன செஞ்சாலும் சரி... கதவ மட்டும் தொறந்துடாதன்னு சொல்லிருக்காவ...
ஏய் நீ இப்ப்டில்லாம் பேசினா உன்னை போலீசு அங்கிள் கிட்ட பிடிச்சுக் குடுத்துடுவேன்...
அது சரி! நீங்க புடிச்சிக் குடுக்கலைன்னாலும் எங்க அய்யாவும் அதத்தான் செய்வாரு! அதுனால தொறக்க மாட்டேன்!
யப்பா... நாங்கல்லாம் சிபிஐகாரவுக... அதான்ம்லே ஒங்கிட்ட கெஞ்சி கேக்கோம்... சமத்தா கதவத் தொறந்து விடுதியா?!
மாட்டேன் போ! எங்க அய்யாவும் அதத்தான் சொன்னாவோ! யலேய் சிபிஐகாரவுக வருவாக... கெஞ்சிக் கேப்பாக; ஆசை வார்த்தை சொல்லி கேப்பாக... ஆனா கதவ மட்டும் தொறந்துடாதன்னு நேத்து மட்டுமா சொன்னாவோ.... ஆறு மாசமா சொல்லிட்டிருக்காவல்லா! ஐங் நானா தொறந்துவிடுவேன்... வேற சோலிய பாருங்க.. போங்க!
யலேய் தம்பி... அர மணி நேரத்துக்கு மேல ஆயிட்டுடே! அமைச்சர் வீடா இருந்தா நாங்க வருவமா? முன்னாள் அமைச்சர் வீட்டுல ரெய்டுக்கு வந்ததுக்கே இப்டில்லாம் கெஞ்ச வேண்டிருக்குடே! எங்க நெலமைய கொஞ்சம் யோசிச்சி பாத்தியா? மீடியாகார பயலுவ வேற கேமராவ மேலயும் கீழயுமா ஆட்டிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் அலையுதாவ! ஏ... கொஞ்சம் தயவு பண்ணி கதவ திறந்து விடுப்பா... இல்லன்னா...
இல்லைன்னா.... என்ன செய்வீய?
அ.....ழு..... து....டு..வேன்...
சரி சரி... கண்ணை துடைச்சிக்கிங்க! ஒங்களைப் பாத்தா பாவமா இருக்கு! நான் தொறந்து விடுதேன்! ஆனா எங்க அய்யாட்ட என்னய மட்டும் மாட்டி விட்டுடாதீய... சரியா!!!
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix