சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

வெள்ளி, டிசம்பர் 30, 2011

முன்னா ஹஸார் பிஏபிஎல்

எங்களுக்கும் போடத் தெரியும் குல்லா!
எங்ககிட்டயா விளையாடினே தில்லா!


காந்தியத்தான் கணக்கா வெச்சி கம்பி நீட்டுவோம்!
காந்தி கணக்க கண்ணில் காட்டி காய நகத்துவோம்!


லோக்கு பாலோ ஜோக்கு பாலோ ஒண்ணு கேட்டுக்கோ!
நீக்கு போக்கு தெரிஞ்ச வந்தான் நல்லா மாட்டிக்கோ!


தொப்பி ஒண்ணு போட்டுவிட்டால் கேள்வி கேப்பியா
தப்பி கிப்பி மீண்டும்வந்தால் தோல்வி தானப்பா!
பெயரில்லா சொன்னது…

எசப்பாட்டு பாடறீங்க நீங்க, 2ஜி ஏலம் தான் விட்டிருக்கோம் நாங்க

புரியாத ஆளய்யா நீரு, நாங்க
புவியாளும் மன்னரய்யா பாரு

உங்களுக்கோ பாரதத்தாய் அன்னை - அவள் நிகராமோ சோனியாத்தாய் முன்னை?

ஊழலொழிக்கப் போராடும் மக்காள் - எம் ஊழலொளித்தல் போராட்டம் காண்பீர்

கொடுத்துப் பாரும் இன்னொரு முறை பவரை - நாட்டை கூறாக்கிப் பெற்றிடுவோம் சீனா தரும் கவரை

அம்பலத்தாடியவன் பேர் கொண்டவன் எனக்கு - அவன் ஆட்டம் கூட பூஜ்ஜியத்தின் கணக்கு

தாடிக்கார பிரதமர் ஒரு ஊமை - அக்கூட்டத்திலே நான் வீடு புகுந்த ஆமை

எனக்குத் தெரிந்த மந்திரமெல்லாம் இதுவே - அது
போகப்போவது - 2ஜி, தலைவணங்குவது - சோனியாஜி,
ஒதுக்கியாயிற்று - முகர்ஜி
எட்டி உதைக்க வேண்டியது - ராகுல்ஜி
இந்திய நாட்டின் முன்னேற்றம்? - சீ சீ

- ப. சிதம்பராஷ்டகம்


 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix