சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

வியாழன், ஏப்ரல் 28, 2011

அழைப்பது எப்படி?



தாயின் தமிழ்ப் பற்று
அம்மா என அழைக்கச் சொன்னாள்...

அப்பாவின் ஆங்கில மோகம்
மம்மி என அழைக்கச் சொன்னார்...

குழப்பத்தில் தவித்த குழந்தை
அம்மி என அழைத்தது...

அட, எவ்வளவு பொருத்தம்!
அம்மி மேல்தானே குழவி இருக்கும்!?

புதன், ஏப்ரல் 27, 2011

இதயம் கனத்தது; நெஞ்சம் நனைத்தது!



இதழாளன் உனக்கு என் இதயத்தில் இடமுண்டு
இதயத்தை வருடியபடி இனிப்பாய்த்தான் நீ இருந்தாய்
இதுவரை ஏதும் நீ எதிர்க்கேள்வி கேட்டதில்லை
அதனால்தான் அவ்விடத்தை அன்பாய் நான் அளித்திருந்தேன்

இதுவெல்லாம் நேற்று...

இன்றோ..?

இதழாளன்தானா நீ... தான்தோன்றித் தனமாக
இதயத்தைத் தூக்கியெறிந்து இப்படியும் கேட்கின்றாய்?
இதற்கெல்லாம் பதில் சொல்ல இதயத்தில் இடமில்லை..

அலை அலையாய்க் கேள்விக் கணைகள்
வரிசைகட்டி வந்தாலும் அசராமல் பதில் சொல்வேன்...
அந்தோ...
அலைவரிசைக் கேள்வி கேட்டு அதிரவே செய்கின்றாய்...

இதயம் இழந்து நீ கேட்பதனால்,
என்
இதயம் கனத்ததுவே!
நெஞ்சம் நனைத்ததுவே!

செவ்வாய், ஏப்ரல் 12, 2011

Mannarkudi rajagopala swami car festival







































Posted by Picasa

Mannarkudi Rajagopalawami Temple Car festival














புதன், ஏப்ரல் 06, 2011

பழம்பெரும் நடிகை சுஜாதா காலமானார்


பிரபல தென்னிந்திய நடிகை சுஜாதா சென்னையில் இன்று காலமானார். 
இலங்கையில் 1952ம் ஆண்டு சுஜாதா பிறந்தார். அவரின்  தாய்மொழி மலையாளம்.இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்ட நடிகர்களுடன் சுஜாதா இணைந்து நடித்துள்ளார்.  
கமல்ஹாசனுடன் பெரும்பாலான படங்களில் நடித்துள்ளார்.அவள் ஒரு தொடர்கதை, வாழ்ந்து காட்டுகிறேன்,  விதி, அன்னக்கிளி, அந்தமான் காதலி, அவர்கள், கடல் மீன்கள், தாய் மூகாம்பிகை, மங்கம்மா சபதம், கொடிபறக்குது, உழைப்பாளி, அமைதிப்படை, பாபா, வில்லன், அட்டகாசம், வரலாறு உள்ளிட்ட படங்களில் சுஜாதா நடித்துள்ளார். 
கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த சுஜாதாவின் உயிர் சென்னையில் உள்ள அவரது வீட்டில் பிரிந்தது.







சட்டபூர்வமா ஆக்கிட்டா?!



மேடம்... இந்த மாதிரி... இங்க ஒரு கேள்வி கேக்கறாங்க...

போபர்ஸ் ஊழல் விவகாரத்துல குவாத்ரோச்சியும் வின்சத்தாவும் கமிஷன் பெற்ற பணத்துக்கு வருமான வரி பாக்கிய கட்டச் சொல்லி சம்பந்தப் பட்டவங்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் போச்சுல்ல... அப்படி,
ஓட்டுக்கு லம்ப்பா ஒரு அமவுண்ட் வாங்கினதுக்கும் வாக்காளருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப ஏற்பாடு செஞ்சா நல்லாருக்குமாம்...
அதுமூலமா வாக்குக்கு பணம் கொடுக்கறதையும் வாங்கறதையும் சட்டபூர்வமா ஆக்கிடலாமாம்...
எப்படி ஊழல் பணத்த கமிஷனா வாங்குறதை சட்டபூர்வமா அணுகுறா மாதிரி ஏற்பாடு ஆச்சோ அந்த மாதிரி...
இப்போ என்னடான்னா இந்த தேர்தல் கமிஷனையும் இவ்ளோ வேலை வாங்கி... அவங்களையும் பகைச்சிக்கிட்டு...
இதெல்லாம் தேவையான்னு கேக்கறாங்க..?! 

தமிழ்நாட்டு தேர்தல் - சிறப்பு ச்ஸூ ச்ஸூ விளம்பரம்

தமிழ்நாட்டு தேர்தல் - ஒரு சிறப்பு பார்வை விளம்பரம்
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix