சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

புதன், ஜனவரி 26, 2011

இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டதாக நம்புகிறீர்களா?இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டதாக நம்புகிறீர்களா?


அரசியல் சுதந்திரம் பெற்றுவிட்டதாகச் சொல்கிறார்கள்.

அது என்னமோ ஆட்சியைக் கைமாற்றிவிட்டுப் போயிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

அன்று நிர்வாக ரீதியாக ஆட்சி செய்தது - ஐரோப்பியன் - ஆங்கிலேயன்!

இன்றும் நிர்வாக ரீதியாக ஆட்சி செய்வது - ஐரோப்பியன் - இத்தாலியன் - இந்திய ஆங்கிலேயன்!

அன்றும் இங்கிருந்து வளங்களைச் சுரண்டி அங்கே சேர்த்துவைத்தான்!

இன்றும் இங்கிருந்து வளங்களைச் சுரண்டி சுவிஸ் வங்கியில் சேர்த்துவைக்கிறார்கள்!

அன்று போராட ஒரு தியாகியர் கூட்டம் இருந்தது.

இன்று போராட ஒரு திருடர் கூட்டம் இருக்கிறது. போராட்டம் என்ற பெயரில் தாங்களும் சுரண்டிக் கொழுக்க!

அன்று பாரதி-காந்தி-திலகர் போன்றோர் மக்களுக்கு சுயவுணர்வூட்ட எடுத்துச் சொன்னதை

சத்தியம் செய்து பின் தொடர்ந்தார்கள்.

இன்று நாட்டின் நிலையை எடுத்துச் சொன்னால்

சாதியம் பேசி சாக்கடையில்தான் இருப்போம் என்று முழக்கம் செய்கிறார்கள்!

வாழ்க பாரதத் தாயே! நின் புதல்வர்கள் வளமுடன் இருப்பார்களாக!

இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டதாக நம்புகிறீர்களா?இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டதாக நம்புகிறீர்களா?


அரசியல் சுதந்திரம் பெற்றுவிட்டதாகச் சொல்கிறார்கள்.

அது என்னமோ ஆட்சியைக் கைமாற்றிவிட்டுப் போயிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

அன்று நிர்வாக ரீதியாக ஆட்சி செய்தது - ஐரோப்பியன் - ஆங்கிலேயன்!

இன்றும் நிர்வாக ரீதியாக ஆட்சி செய்வது - ஐரோப்பியன் - இத்தாலியன் - இந்திய ஆங்கிலேயன்!

அன்றும் இங்கிருந்து வளங்களைச் சுரண்டி அங்கே சேர்த்துவைத்தான்!

இன்றும் இங்கிருந்து வளங்களைச் சுரண்டி சுவிஸ் வங்கியில் சேர்த்துவைக்கிறார்கள்!

அன்று போராட ஒரு தியாகியர் கூட்டம் இருந்தது.

இன்று போராட ஒரு திருடர் கூட்டம் இருக்கிறது. போராட்டம் என்ற பெயரில் தாங்களும் சுரண்டிக் கொழுக்க!

அன்று பாரதி-காந்தி-திலகர் போன்றோர் மக்களுக்கு சுயவுணர்வூட்ட எடுத்துச் சொன்னதை

சத்தியம் செய்து பின் தொடர்ந்தார்கள்.

இன்று நாட்டின் நிலையை எடுத்துச் சொன்னால்

சாதியம் பேசி சாக்கடையில்தான் இருப்போம் என்று முழக்கம் செய்கிறார்கள்!

வாழ்க பாரதத் தாயே! நின் புதல்வர்கள் வளமுடன் இருப்பார்களாக!

தியாகியரே! தியாகியரே!!


குடியரசு தினக் கொடியேற்றம்...

கொடியின் நிறங்கள்...
பசுமை-செழுமை-இஸ்லாமாம்...
வெண்மை-அமைதி-கிறித்துவமாம்...
காவி-தியாகம்-இந்துவாம்...

குண்டூசிகளால் குத்துப்பட்டும் 
சட்டைப் பைகளில் ஒட்டிக் கொண்டு சிரிக்கிது 
தேசியக் கொடி!

குத்துப் பட்டதோ காவி நிறம்-தியாக நிறம்.
தேசியக் கொடியும் 
அதனால்தானே விழாமல் தாங்கி நிற்கிறது?!
அதுதான் மேலே ஓங்கி உயரப் பறக்கிறது!

தியாகம் மட்டும் இல்லை என்றால்
தேசியம் எங்கே நிலைக்கப் போகிறது!

குத்துப் பட்டும் சிரிக்கும் காவியைப்போலே
வெட்டுப் பட்டும் வேதனைப் பட்டும்
தேசியத்தைத் தாங்கி நிற்பீர்...
இந்திய நாட்டின் இந்துக்களே!

தியாகிகளே!

ஞாயிறு, ஜனவரி 23, 2011

கவிதை: என் இல்லத்தின் இனிய மரம்!


அப்துல் கலாம் துணைவேந்தரானது தமிழருக்குப் பெருமை. விஞ்ஞானி ஆனது இந்தியருக்குப் பெருமை. குடியரசுத் தலைவரானது உலகுக்கே பெருமை. அவர் இப்போது கவிஞராகியிருக்கிறார், இது இயற்கைக்குப் பெருமை. அயர்லாந்து பல்கலைக்கழகத்தில் அவர் அளித்த கவிதை இங்கே ...

ஓ! என் இல்லத்தின் இனிய மரமே!
எல்லா மரங்களிலும் நீ தான் பெருமைக்குரியவன்!
எத்தனை தலைமுறைகளை நீ வளப்படுத்தி இருக்கின்றாய்?!
வருடங்கள் பலப்பலவாய் பாசமுடன் பயன் தருகின்றாய்
உன் அக்கறை கவனிப்பில் இன்றும் வாழ்பவை எத்தனையோ?!
உன் வாழ்வின் கீதத்தை நானும் பாசத்துடன் கேட்கின்றேன்!
ஓ... என் நண்பனே! கலாம்!
உன் தாய் தந்தையைப் போல நான் வயது நூறைக் கடந்துவிட்டேன்
ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு மணிநேரம் நீ நடை பயில்கின்றாய்!
முழு நிலாப் பொழுதுகளிலும் நான் உன்னைக் காண்கிறேன்
சிந்தனையில் ஆழ்ந்தபடி நடக்கின்றாய்...
என் நண்பனே... உன் மன ஓட்டத்தை நான் உணர்வேன்...
""நான் என்ன கொடுக்க இயலும்''
ஏப்ரல் மாதப் பொழுதில், என்னை நீ ஏறிட்டுப் பார்த்தாய்!
மீண்டும் மீண்டும் நீ, மீளாப் பார்வை பார்த்தாய்!
ஆயிரம் ஆயிரமாய் இலைகள் உதிர்ந்திருக்க, நீ என்னைக் கண்டாய்!
என் நண்பனே, என்னிடம் கேட்டாய் நீ...
என் பாரம் எதுவோ!?
இலைகளை நான் கழித்ததும், புத்திலைகள் பிறப்பெடுக்கின்றன!
மலர்களின் மலர்ச்சி, வண்ணத்துப் பூச்சிகளையும் வண்டுகளையும் கவர்கின்றது.
எனவே, கலாம்... இது எனக்குப் பாரம் அன்று!
இது என் வாழ்வின் அழகான ஒரு கட்டம்!
கலாம்... இப்போது நீ என்னைச் சுற்றி வா!
அடர்ந்து செழித்த என் கிளைகளின் வழியே புகுந்து, அகத்தில் ஆழ்ந்து பார்.
தேன் நிரம்பித் ததும்பும் ஒரு தேனடையைக் காண்பாய்.
ஆயிரமாயிரம் வேலைக்காரத் தேனீக்களின் அயராத உழைப்பால் விளைந்தது...
அந்தத் தேனடை!
அவற்றின் ஓயாத உழைப்பால் சொட்டுச் சொட்டாகச் சேர்ந்தது... அங்கே தேன்!
தித்திக்கும் தேன் துளிகள் நிரம்பிய தேனடையின் பாரம் அபாரமானதுதான்!
ஆயிரமாயிரம் தேனீக்களின் காவலால் காக்கப்படுகிறது...
யாருக்காக இந்தத் தேன் சேகரிக்கப்பட்டது? பாதுகாக்கப்பட்டது?
அது உமக்காக, எத்தனையோ ஏழையருக்கு... சீமான்களுக்கு!
எல்லா உயிர்க்கும் பகிரப்பட வேண்டும் என்பதுதானே நம் நோக்கம்!
கலாம்! நீ பார்த்திருக்கிறாயா?
என் கிளைகளின் பல பாகங்களில் பல பறவைகள்
எத்தனை எத்தனை கூடுகளைக் கட்டியிருக்கின்றன..?
என் பெரும்பாலான நுனிக் கிளைகள் எத்தனை வசீகரமாயிருக்கும்?
நூற்றுக்கணக்கான கிளிகள் அதனைத் தம் வீடுகளாக்கியிருக்கின்றனவே!
எனவே, என்னை நீ கிளிமரம் என்று அழைப்பாய்.
இப்போதும் என்னை நீ தேன் மரம் என்பாய்.
என்னைப் பற்றி உன் பேரனிடம் நீ பேசியதைக் கேட்கும்போது,
நான் முறுவலிப்பேன்.. புன்னகைப்பேன்.
என் மரப்பொந்துகளிலும் கிளைகளிலும் பறவைகளின் வீடுகளுக்கு இடமளித்தேன்
நான் பறவைகளின் கீதத்தை செவிமடுத்திருக்கிறேன்...
அவற்றின் பிறப்பிலும் வளர்ச்சியிலும் காதலாகிக் கண்டிருக்கிறேன்...
அவை என்னைச் சுற்றிச் சுற்றிச் சிறகடித்துப் பறந்து
மகிழ்ச்சிப் பெருக்கை பரிமாறியிருக்கின்றன.
இப்போதெல்லாம் கலாம்... உன் நித்திய நடைப்போதுகளில்
என் அருகே வருவாய். இன்னும் அருகே வந்து என் வேர்ப் பற்றை பரிவோடு பார்ப்பாய்.
வெல்வெட் மெத்தையாய் புல்படுக்கை... சுற்றிலும் அடர்ந்த பூக்காடு!
அங்கே ஓர் அழகுப் பெண்மயில்
அது உள்ளக் களிப்பால் ஈந்த முட்டைக்கு கதகதப்பைத் தந்தது.
எல்லாப் போதுகளும்... அங்கே தாய்ப்பாசம் மீதுற அரவணைக்கும் அழகுக் காட்சி!
உன் வீட்டின் உள்ளிருந்து நோக்கும் அருமைக் காட்சி!
அந்தப் பெண்மயில் ஏழு குஞ்சுகளுடன் உலவியது
என்னைச் சுற்றிச் சுற்றி கம்பீரமாய் உலா வந்தது...
பகலும் இரவும் தன் குஞ்சுகளைப் பாதுகாத்தபடி!
இப்போது, ஒரு கேள்வி கலாம்...
என் குறிக்கோள்... எனக்கான கட்டளை, என் பிறவியின் நோக்கம்...எது?
நூறு வருடங்கள் உயிர்ப்போடு திகழ்வதா?
நான் பெற்றதை வைத்து ஆனந்தமாகக் கழிக்கிறேன் என் பிறவிப் பயனை!
நான் பரிமாறினேன்... பூக்கள் மற்றும் தேனை!
இருப்பிடம் தந்தேன், நூற்றுக்கணக்கான பறவைகளுக்கு!
நான் கொடுப்பேன் கொடுப்பேன் இன்னும் கொடுப்பேன்...
எனவே, நான் இருப்பேன்...
இன்றும் இளமையாக!
என்றும் இன்பமாக!

(அர்ஜூனா என்ற இந்த மரத்தின் அறிவியல் பெயர் TE​R​M​I​N​A​L​IA AR​J​U​NA- தமிழில் இதன் பெயர் மருத மரம்)
இது, 2009,ஜூன் 10 அன்று வடக்கு அயர்லாந்து, பெல்பாஸ்ட் குயின் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கவிஞர்கள் மாநாட்டில் அளிக்கப்பட்ட கவிதை)

தமிழில்: செங்கோட்டை ஸ்ரீராம்

தினமணிக் கதிரில் வெளியான கவிதை!

அவசர ரகசிய ஆலோசனை!


ம்ம்ம்... சிவ கங்கைலேர்ந்து கங்கைக்கே வசிக்கப் போயிட்டீங்க. அப்ப அப்ப இங்கயும் தலையைக் காட்டுங்க. தலைநகர்லயே தங்கிடாதீங்க. 

ஆமாங்க. நீங்க எல்லாரும் மனசு வெச்சதுனாலதான தலைநகர் தங்கல் சாத்தியமாகியிருக்கு. அதுக்கும் நீங்கதான் காரணம்... 

அந்த நினைவிருந்தா சரிதான்! பிறகு... இந்த கர்நாடகா விவகாரம் இப்படி போகுதே! 

அது ஒரு தனிக் கதை. இதெல்லாம் உங்களுக்கு தெரியாததா? 

ஆமாங்க. அவரு பாவம். சும்மா கோவில் குளம்னு தமிழ்நாட்டுக்கு வந்து கோடிகோடியா கொட்டிட்டுப் போறாரு. அவருக்கு எங்க எதைச் செய்யணும்னு தெரியல. கோவிலுக்கு வர்ற மனுஷன் அதே கையோட கோபாலபுரத்துக்கும் அடிக்கடி வந்துட்டுப் போயிருந்தாருன்னா, உங்களை எல்லாம் எப்படி சமாளிக்கணும்கிற வித்தையை கத்துக் கொடுத்திருப்பேன். 

ஐயையோ சும்மா இருங்க... ஏதோ அந்த ஒரு மாநிலத்த வெச்சி எங்க வியாபாரம் அபாரமா ஓடிக்கிட்டிருக்கு. அதுல நீங்க கையை வெச்சி கவுத்துடாதீங்க... 

இருந்தாலும் அவரைப் பாக்க பரிதாபமா இருக்கு. என்னங்க இது நில விவகாரம்..? உப்பு சப்பில்லாம... நாம பாக்காததா? இந்த அஞ்சு வருஷத்துல ரியல் எஸ்டேட் இங்க எப்படி வளர்ந்திருக்கு? யாரு வளர்த்திருக்காங்க? இதெல்லாம் அவரு கேட்டு தெரிஞ்சிக்க வேண்டாமா?! அதவிட ஒரு முக்கியமான படிப்பு அவருக்கு இருக்கு. ஒரு மாநிலத்துல கவர்னரை எப்படி கவனிக்கணும், எப்படி கையாளணும்ங்கிற வித்தை தெரியாம என்னத்த அவரு முதல்வர் நாற்காலில உட்கார்ந்திருக்காரோ தெரியலை. பக்கத்து மாநிலத்துல ஒரு பழுத்த அனுபவசாலி இருக்காங்கறதையே மறந்துட்டாரே! பண்டாரக் கட்சிங்கறது சரியாத்தான் இருக்கு... 

நல்ல வேளைங்க... அவருக்கு இந்த யோசனை தோணாம இருக்கறது! இல்லைன்னா நம்ம அலைக் கற்றை விவகாரம் அலை அலையா கத்தை கத்தையா மக்கள் மனசுல ஊறி, எல்லாமே நாறியிருக்கும்... 

பின்குறிப்பு: இது, ராடியா டேப் பேச்சு ஒட்டுகேட்பு மாதிரி... போட்டோ டூப் மனசு ஒட்டுகேட்பு

ஞாயிறு, ஜனவரி 16, 2011

புதுக் குறள் பத்து


வள்ளுவர் நாளில் நவீனக் குறள்பத்து 
நல்லோர்மன் னித்தருள்வீ   ரே !
பொதுமக்களியல் - குடிமையியல் - ஆட்சியியல் - குடிசெயல்வகையியல்
மலையளவு ஊழல் எனினும் மறப்போம் 

அலைக்கற்றை அவ்வளவு தான். (1)
கற்பனையில் தோன்றியதாய்க் கட்டவிழ்த்துக் காட்டிடுவோம்

விற்பனையில் பார்த்ததைத் தான் (2)
விலைவாசி ஏன்கவலை விற்பவற்றின் பங்காய்

நிலையாக நோட்டுவரும் போது? (3)
இலவசம் இல்லை இவன்வசம் இல்லை

பலமிழந்த பார்வையிது காண்  (4)
தைதான் சுயமரியா தைதான் சிதைந்தாலும்

வைவேனே வையத்தைத் தான் (5)
வெங்காயக் கேள்வி வெறுங்கேள்வி கேட்டக்கால்

பொங்காதோ எந்தன் உளம் (6)
செய்தவற்றில் செய்தவற்றை சேர்ந்தேதான் கண்டிட்டால்

செய்யாச் செயலெனவே புகல் (7)
இனத்தை சுகத்தை இனிதாய் விரும்பின்

மனத்தை உறக்கத்தில் வை  (8)
புதிதாகச் செய்வோம் புதிராகச் செய்வோம்

எதிர்க்கேள்வி கேட்டால் வழக்கு (9)
புத்தாண்டு பூத்ததுவாய் புன்சிரிப்பைக் காட்டிடுவோம்

வித்தாச்சே எங்கள்கொள் 'கை' (10)
© தினக்குரலன் மணிக்குறளன்

வியாழன், ஜனவரி 13, 2011

தாய் உள்ளமே!தாய் உள்ளமே!
தந்தாய் கள்ளமே!
ஆரூர்ப் பிறந்தாய்
அயலூர் வந்தாய்
எழுத்தினை எடுத்தாய்
கதைபல வடித்தாய்
அரசியல் கலந்தாய்
காழ்ப்புணர்வு விதைத்தாய்
கட்சியைப் பிரித்தாய்
ஆட்சியைப் பிடித்தாய்
இமயமென வளர்ந்தாய்
இருக்கையில் அமர்ந்தாய்
வளமையில் சிறந்தாய்
உறவுகளை வளர்த்தாய்
விதேசிகளைப் புகழ்ந்தாய்
சுதேசிகளை இகழ்ந்தாய்
வடக்கினைக் காத்தாய்
இனத்தமிழ் இழந்தாய்
இலவசத்தை எறிந்தாய்
மெலியோரை எதிர்த்தாய்


இன்னும்...
இத்தாய் எத்தாய்
உம்மேல் பித்தாய்
யாமிருக்க...


கள்ளமே
தந்தாய் உள்ளமே!
தாய் உள்ளமே!

புதன், ஜனவரி 12, 2011

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !


Pongal /Makar Sankranti Festival

In Tamil Nadu Sankrant is known by the name of ‘Pongal’, which takes its name from the surging of rice boiled in a pot of milk, and this festival has more significance than even Diwali. It is very popular particularly amongst farmers. Rice and pulses cooked together in ghee and milk is offered to the family deity after the ritual worship. In essence in the South this Sankrant is a ‘Puja’ (worship) for the Sun God.
Tithi (Date)
This festival, unlike other Hindu festivals, is not dependent on the position of the moon, but on position of the sun. On this day, the sun enters the zodiac sign of Capricorn. To compensate for the difference that occurs due to the revolution around the sun, every eighty years the day of sankrant is postponed by one day. In the present period Makar-sankrant falls on 14th January.

History

Sankranti is considered a Deity. According to a legend Sankranti killed a demon named Sankarasur.The day followed by Makar sankrant is called Kinkrant or Karidin. On this day, the female deity (devi) slayed the demon Kinkarasur.

Information

Information on Sankranti is available in the Panchang: The Panchang (Hindu Almanac) provides information on the form, age, clothing, direction of movement etc. of Sankranti. This information is appropriate to the changes taking place in Her according to time. He who is touched by Goddess Sankranti gets destroyed.

Importance

The northward movement of the sun begins on this day. The period from Karkasankrant (the passage of the sun into the zodiac sign of Cancer) to Makarsankrant is called the dakshinayan. A person who dies in the dakshinayan period has a greater chance of going to Yamalok (southward region), than one who dies during uttarayan (northward revolution).
Importance from the point of view of spiritual practice: On this day, from sunrise to sunset, the environment has more chaitanya (Divine conscious-ness); hence those doing spiritual practice can benefit from this chaitanya.

Methods of celebration

Kumkumarchan
Applying the Kumkum between
eye-brows
Benefit of highest merit acquired by a Holy dip on the day of Makarsankrant: The time from sunrise to sunset on Makar-sankrant is auspicious. A Holy dip during this period carries special significance. Those who take a Holy dip in the rivers Ganga, Yamuna, Godavari, Krushna and Kaveri at the Holy places situated on the banks of these rivers acquire the highest merit.

Offering: Importance of making an offering during an auspicious period: The period from Makarsankrant to Rathsaptami is an auspicious period. Any donation and meritorious deeds in this period prove more fruitful.

subtle-image-kumkumarchan
Substances offered: An offering of new vessels, clothing, food, sesame seeds, pot of sesame seeds, jaggery, a cow, a horse, gold or land should be made depending on the capability. On this day, married women also make some offering. They take things from unmarried girls and give them sesame seeds and jaggery in return. Married women organise a ceremony of haldi-kumkum (applying vermilion and turmeric to the forehead) and gift articles to other married women.
3. Importance of haldi-kumkum ceremony performed by married women on sankranti :Performing haldi-kumkum (Turmeric powder and saffron) ceremony is in a way invoking the waves of dormant Adi-shakti in the Universe to get activated. This helps in creating impression of Sagun (Materialised) devotion on the mind of an individual and enhances his bhav (Spiritual emotion) unto God.
A. Five steps in haldi-kumkum ceremony
1. Applying haldi-kumkum : Applying haldi-kumkum to a suvasini (A married woman whose husband is alive) activates the dormant Principle of Sri Durgadevi in her and bestows well-being to the applier suvasini.
2. Applying perfume : Fragrant particles emitting from the perfume please the Principle of the Deity and bestow well-being to the applier suvasini within a shorter period.
3. Sprinkling rose-water : The fragrant waves emitted by the rose-water activate the waves of the Deity and purifies the environment, and the suvasini who sprinkles it gets greater benefit of the activated Sagun Principle of the Deity.
4. Offering a gift : A gift offered is always supported by the end of the pallu of the sari. Offering a gift to another suvasini amounts to surrendering to the divinity in her, through sacrifice of body, mind and wealth. Giving support of the end of pallu of the sari means leaving attachment to even the clothes worn on the body and thus learning to overcome body awareness. Since the period of sankranti is favourable for sadhana, a gift given during this period pleases the Deities quickly and they bestow the donor suvasini with the desired  fruit.
4 A. What should be gifted ? : Instead of gifting non-dharmik commodities like soap, plastic items etc., objects complementary to Spirituality and are indicators of a married life, such as incense-sticks, ubtan (Fragrant herbal powder), religious and Holy texts, pictures of Deities, CDs on spiritual topics etc. should be gifted.
Small mud pots: The festival of sankrant requires small mud pots called sugad (in the Marathi language). Vermilion and turmeric powder is applied to the pots and a thread is tied to them. They are filled with carrots, jujube fruits, sugarcane pieces, pods, cotton, chickpeas, sesame seeds with jaggery, vermilion, turmeric etc. Five pots are placed on a wooden seat, rangoli is drawn around the seat and worshipped. Of these, three are gifted to married women, one is offered to the tulsi plant and one is retained.
Use of sesame seeds: Maximum use of sesame seeds is made during sankrant festival. For example, bathing with water containing sesame seeds and eating and distributing tilgul (a sweet made from sesame seeds), offering sesame to Brahmans, lighting lamps of sesame oil in a temple of Lord Shiva and performing pitrushraddh (rite for the departed ancestors) in which an offering of sesame seeds is made.
Subtle effect of Sesame

Importance of sesame seeds -
 Using sesame seeds eliminates sins: On this day those who apply sesame seed oil and utane to the body, bathe in water mixed with sesame seeds, drink water mixed with sesame seeds, perform a sacrificial fire, make an offering of sesame seeds and make similar use of sesame seeds, are liberated of all sins.
Importance according to Ayurved: Since sankrant falls in winter, consuming sesame seeds is beneficial.
Importance according to Spirituality:
1. Since sesame seeds have a greater ability to absorb and emit sattva frequencies, consuming tilgul helps improve spiritual practice. Distributing tilgul to one another results in an exchange of the sattva component.
2. Using sesame seeds in shraddh prevents demons from bringing obstacles during the rite.
Forbidden acts!

During the period of sankrant, brushing teeth, talking harshly, cutting trees or grass and acts provoking sexual urges should be avoided.
Do not fly kites!

Today, when the Nation and Dharma are in peril, flying kites for the sake of entertainment is akin to, 'Nero playing the fiddle while Rome burnt'. If the time spent on flying kites is used for the development of the Nation, it will make it progress faster; and if used for spiritual practice and missions related to Dharma, then society and the individual will benefit.
(Reference:  Holy Festivals, Religious Festivals and Vowed Religious Observances, compiled by H.H. Dr. Jayant B. Athavale and Dr. Mrs. Kunda Athavale, published by the Sanatan Sanstha.)

 

Culture & Festivities

The holy Vans given on the Makar Sankrant
This festival is celebrated differently in different parts of the country.

Uttar Pradesh:

In Uttar Pradesh, Sankrant is called ‘Khichiri’. Taking a dip in the holy rivers on this day is regarded as most auspicious. A big one-month long ‘Magha-Mela’ fair begins at Prayag (Allahabad) on this occasion. Apart from Triveni, ritual bathing also takes place at many places like Haridvar and Garh Mukteshwar in Uttar Pradesh, and Patna in Bihar. 

Bengal:

In Bengal every year a very big Mela is held at Ganga Sagar where the river Ganga is believed to have dived into the nether region and vivified the ashes of the sixty thousand ancestors of King Bhagirath. This mela is attended by a large number of pilgrims from all over the country.

Tamil Nadu:

In Tamil Nadu Sankrant is known by the name of ‘Pongal’, which takes its name from the surging of rice boiled in a pot of milk, and this festival has more significance than even Diwali. It is very popular particularly amongst farmers. Rice and pulses cooked together in ghee and milk is offered to the family deity after the ritual worship. In essence in the South this Sankrant is a ‘Puja’ (worship) for the Sun God.

 Andhra Pradesh:

In Andhra Pradesh, it is celebrated as a three-day harvest festival Pongal. It is a big event for the people of Andhra Pradesh. The Telugus like to call it 'Pedda Panduga' meaning big festival. The whole event lasts for four days, the first day Bhogi, the second day Sankranti, the third day Kanuma and the fourth day, Mukkanuma.

Karnataka:

In Karnataka, the festival is marked by visiting one's friends and relatives to exchange greetings, and by the preparation of a dish called Ellu (made with sesame seeds, coconuts, sugar blocks, etc). A common custom found across Karnataka is the exchange of sugarcane pieces and Ellu with one's neighbors, friends and relatives. In Karnataka, Pongal is known as 'Sankranti', and cows and bullocks are gaily decorated and fed 'Pongal'- a sweet preparation of rice. Special prayers are offered. In the evening, the cattle are led out in procession to the beat of drums and music. In the night a bonfire is lit and the animals are made to jump over the fire.
Makar Sankranti is marked by men, women and children wearing colorful clothing; visiting near and dear ones; and exchanging pieces of sugarcane, a mixture of fried til, molasses, pieces of dry coconut, peanuts and fried gram. On this auspicious day, people in Karnataka distribute Yellu and bella (Sesame seeds and Jaggery) and greet with the words " “Ellu bella thindu, Olle Maathu Aadu” (Eat sesame seeds and speak only good). The significance of this exchange is that sweetness should prevail in all the dealings.

Maharashtra:

hallawa ornaments
Ornaments made of sugar balls
In Maharashtra on the Sankranti day people exchange multi-colored tilguds made from til (sesame seeds) and sugar and til-laddus made from til and jaggery. Til-polis are offered for lunch. While exchanging tilguls as tokens of goodwill people greet each other saying – ‘til-gul ghya, god god bola’ meaning ‘accept these tilguls and speak sweet words’. The under-lying thought in the exchange of tilguls is to forget the past ill-feelings and hostilities and resolve to speak sweetly and remain friends. This is a special day for the women in Maharashtra when married women are invited for a get-together called ‘Haldi-Kumkum’ and given gifts of any utensil, which the woman of the house purchases on that day. Hindus wear ornaments made of 'Halwa' on this day.

Gujarat:

In Gujarat Sankrant is observed more or less in the same manner as in Maharashtra but with a difference that in Gujarat there is a custom of giving gifts to relatives. The elders in the family give gifts to the younger members of the family. The Gujarati Pundits on this auspicious day grant scholarships to students for higher studies in astrology and philosophy. This festival thus helps the maintenance of social relationships within the family, caste and community. Kite flying has been associated with this festival in a big way. It has become an internationally well-known event.

Punjab:

In Punjab where December and January are the coldest months of the year, huge bonfires are lit on the eve of Sankrant and which is celebrated as "LOHARI". Sweets, sugarcane and rice are thrown in the bonfires, around which friends and relatives gather together. The following day, which is Sankrant, is celebrated as MAGHI. The Punjabi's dance their famous Bhangra dance till they get exhausted. Then they sit down and eat the sumptuous food that is specially prepared for the occasion.

Kerala:

The 40 days anushthana by the devotees of Ayyappa ends on this day in Sabarimala with a big festival.

Bundelkhand:

In Bundelkhand and Madhya Pradesh this festival of Sankrant is known by the name ‘Sakarat’ and is celebrated with great pomp & merriment accompanied by lot of sweets.

Tribals of Orissa:

Many tribals in our country start their New Year from the day of Sankrant by lighting bonfires, dancing and eating their particular dishes sitting together. The Bhuya tribals of Orissa have their Maghyatra in which small home-made articles are put for sale.

Assam:

In Assam, the festival is celebrated as Bhogali Bihu.

Coastal Region:

In the coastal regions, it is a harvest festival dedicated to Indra.
http://www.hindujagruti.org/hinduism/festivals/makar-sankranti/

ஞாயிறு, ஜனவரி 09, 2011

அனுபவ வரம் அளிப்பாய் இறைவா!


நான்...


கூட்டுப்புழுவாய் உயிர்கொண்ட நாள் முதல்

பட்டாம்பூச்சியாய் சிறகுவிரிக்கும் நாள் வரையில்...


சின்னச் சின்னச் சறுக்கல்கள்

எண்ணிக்கை அறியா ஏமாற்றங்கள்!

எல்லாம் அனுபவங்களாய்

உள்ளத்தின் ஆழ்மடிப்பில்

உறங்கிக் கிடக்கின்றன!


எத்தனை எத்தனை பட்டாம்பூச்சிகள்

எனக்கு முன்பும் பின்பும்!


நான் மட்டும்

நிரந்தரப் பதிவாய் நிற்கவா போகின்றேன்!?

நானும் ஒருநாள்...

கால வெளியில் கரைந்து போகக்கூடும்!


ஆனால்... ஆனால்...


பட்டெனும் பகட்டுக்காய்

கூட்டுப்புழு கருக்கப்படுகிறதே!

எண்ண விதை முளைக்கும்போதே

என்னவோ அது களையப்படுகிறதே!


சிறகடித்துப் பறக்கும் நேரம்

சிறகொடிந்து கிடந்தால் பாரம்!


இறைவா...

பட்டாம்பூச்சியாய் பறக்கும் அனுபவத்தை

இறைஞ்சிக் கேட்கின்றேன்...
தந்தருள்வாயே!

ஒரு தியாகி இனி உருவாக மாட்டான்!


1921-ல் மகாகவி பாரதி மறைந்தபோது மிகக் குறைவானவர்களே வந்திருந்தனர் என்பது வருத்தத்துடன் அடிக்கடி நினைவுகூரப்படும் செய்தி. ஆனால், 90 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதும்கூட நிலைமையில் பெரிய மாற்றம் எதுவுமில்லை.


2011, ஜனவரி 2 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மிகப் பெரிய தியாகியொருவர் மறைந்தார், தனது 94-வது வயதில். மறைவு கேட்டு இல்லத்துக்கு வந்து இருந்தது சுமார் 25 பேர். நூறு பேர் வந்து சென்றவர்கள். மயானத்தில் நூற்றிச் சொச்சம்.

வரலாறும் இந்த சமுதாயமும் மறக்கக்கூடாத, ஆனால் மறந்துவிட்ட எத்தனையோ விடுதலைப் போராட்ட தியாகிகளில் ஜி.எஸ். லட்சுமண அய்யரும் ஒருவர்.

ஒருகாலத்தில், நகர்மயமானதன் பரபரப்புக்குள் வீழாத கோபி என்ற கோபிசெட்டிபாளையத்தில் பஸ்ஸிலிருந்து இறங்கி, அய்யர் வீடு எங்கே என சின்னக் குழந்தையைக் கேட்டால்கூட அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டுவிடும். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவருக்கு அந்தளவுக்கு மதிப்பு, மரியாதை.

ஜாதி, மதப் பாகுபாடு எதுவுமின்றி இந்தப் பகுதியிலுள்ள அனைத்து வீடுகளிலும் அய்யரைப் பார்க்கலாம். சுகம், துக்கம் எதுவானாலும் அழைப்பு வந்துவிடும், அய்யர் அங்கேயிருப்பார்.

இவருடைய தந்தை டி. சீனிவாச அய்யர், அந்தக் காலத்தில் கோபி, பவானி, கொள்ளேகால் இரட்டை மெம்பர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

1931-ல் மகாத்மா காந்தியின் அழைப்புக்கு இணங்க காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் ஹரிஜன மக்களை வீட்டுக்குள் அழைத்தனர், விருந்துகள் வைத்தனர், தோட்டக் கிணறுகளில் தண்ணீர் எடுத்துக்கொள்ளச் செய்தனர். லட்சுமண அய்யரின் வீட்டுக்குள்ளும் ஹரிஜனங்கள் அழைக்கப்பட்டனர். விருந்து வைக்கப்பட்டது. சும்மா விடுமா, சொந்தமும் சமூகமும். 1931 முதல் 36 வரை அய்யரின் குடும்பம் சமூக பகிஷ்காரம் செய்யப்பட்டது. உயர் ஜாதியினர் புறக்கணித்தனர்.

1938 முதல் 44 வரையிலான காலகட்டத்தில் வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற அய்யர், கோவை, அலிப்பூர், பெல்லாரி, வேலூர், பவானி எனப் பல்வேறு சிறைகளில் மூன்றரை ஆண்டுகளைக் கழித்திருக்கிறார். மனைவி, மாமனார், மாமியாரெல்லாமும்கூட இவருடன் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றிருக்கின்றனர்.

1944-ல் வார்தா சென்று மூன்று நாள் தங்கியிருந்த லட்சுமண அய்யரிடம், நீ பிராமணன்தானே, விடுதலைப் போராட்டத்துக்கு நிறைய பேர் இருக்கிறார்கள், ஊருக்குத் திரும்பியதும் ஹரிஜன சேவை செய்யத் தொடங்கு, அதுவே என்னுடைய விருப்பம் என்று ஆணையிட்டிருக்கிறார் மகாத்மா. கடைசி வரையிலும் காந்தியின் கட்டளையை நிறைவேற்றுவதில் கவனமாக இருந்தார் அய்யர். துப்புரவுத் தொழிலாளர்களை ஊருக்குள்ளே அழைத்துவந்து குடியிருப்புகளைக் கட்டித் தந்தவர் அய்யர்.

அரசியல் தலைவர்களைப் பொருத்தவரையில் அந்த நாள்களில் ஒரு சத்திரம் போலத்தான் இவருடைய வீடு. எந்நேரமும் சமையல் நடந்துகொண்டிருக்கும். சித்தரஞ்சன் தாஸ், பாபு ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, அருணா ஆசப் அலி, டாக்டர் அன்சாரி, சீனிவாச அய்யங்கார், காமராஜர், பெரியார் எனத் தலைவர்களின் பட்டியல் நீண்டுசெல்லும்.

1969-ல் காங்கிரஸ் பிளவுற்றபோது காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸில் பணியாற்றத் தொடங்கி, ஜனதா தளத்திலும் தொடர்ந்தார். ஆனால், அவருடைய செயல்பாடுகள் அன்றாட அரசியலுக்கு அப்பாற்பட்டவையே.

பிரிட்டிஷ் காலக் குற்றப்பரம்பரைச் சட்டத்தை ரத்து செய்தபோது, ராஜாஜி கூறிய அறிவுரைப்படி, நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த ஒரேயொரு சிறுவனுடன் இவர் தொடங்கிய விடுதியில் இப்போது சில நூறு மாணவ, மாணவியர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே.

அந்தக் காலத்தில் இவர்கள் குடும்பத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நஞ்சையும் புஞ்சையுமாக 380 ஏக்கர் நிலம். ஆனால், இப்போது அவர் குடியிருந்த வீடுதான் மிச்சம். ஒரு வீட்டைத் தவிர, இரு மகன்களுக்கும் ஒரு சென்ட் நிலம்கூடத் தரவில்லை. இவர் கொடையென வழங்கிய இடங்களில்தான் இன்றைக்குக் கோபிசெட்டிபாளையத்திலுள்ள பல கல்வி நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

வைரவிழா மேனிலைப் பள்ளி, பழனியம்மாள் பள்ளி, டி.எஸ். சாரதா வித்தியாலயம், விவேகானந்தா ஐ.டி.ஐ... இன்னும், ஸ்ரீராமபுரம் ஹரிஜன காலனி, துப்புரவுத் தொழிலாளர்களுக்கான காலனி... அவருடைய மறைவுக்காக ஒரேயொரு பள்ளி மட்டும் விடுமுறை அறிவித்தது. கமிட்டி உறுப்பினர் (?) மரணத்துக்காக விடுமுறை வழங்குவதில்லை என்பது கொள்கை முடிவு என ஒரு பள்ளி நிர்வாகம் தெரிவித்துவிட்டது! (கோடி கோடியென விலை உயர்ந்துவிட்ட கோபி நகருக்குள் லட்சுமண அய்யருக்கென இப்போது ஒரு சென்ட் இடம்கூட இல்லை).

தக்கர் பாபா வித்தியாலயம் என்ற தொடக்கப் பள்ளி, இரு பால்வாடிகள், இரு குழந்தைகள் காப்பு மையங்கள் எல்லாமும் இவர் தொடங்கி நடத்தியவை. எல்லாமே இலவச சேவை. விவேகானந்தா ஐ.டி.ஐ. என்ற தொழிற்கல்வி நிலையமும் உண்டு. அரசு மருத்துவமனையில் இவருடைய தந்தை பெயரில் ஒரு வார்டு உண்டு, நிலம் வழங்கியது பற்றி உறுதிப்படுத்த முடியவில்லை.

1952 முதல் 55 வரையிலும் 86 முதல் 92 வரையிலுமாக இரண்டு முறை கோபி நகர்மன்றத் தலைவராகவும் இருந்தவர் அய்யர். 1955-ல் இவர் கொண்டுவந்ததுதான் கோபி நகர் குழாய்த் திட்டம். புஞ்சைப் புளியம்பட்டி செல்லும் சாலையில் கோபிக்கான நீரேற்று நிலையம் இருக்கும் இடமும்கூட அய்யருடையதுதான்.

1986-ல் இவருடைய காலத்தில்தான்- கோபிசெட்டிபாளையத்தில் - முதன்முதலாக மனிதக் கழிவை மனிதன் சுமக்கும் அவலம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. அரசு நிதியுதவியுடன் அனைத்து உலர் கழிப்பிடங்களும் நீரடிக் கழிப்பிடங்களாக மாற்றப்பட்டன.

ஆனால், அத்தகைய அய்யருடைய மரணத்தின்போது அவரால் பயன் பெற்ற, பலன் பெற்ற பெரும்பாலானோர் வரவில்லை. அன்றைக்குக் கோபிசெட்டிபாளையம் வழியேதான் மாவட்ட ஆட்சியர் சென்றார், வரவில்லை. எம்.பி. வரவில்லை, எம்.எல்.ஏ. வரவில்லை. நகர்மன்றத் தலைவிகூட வரவில்லை. கோட்டாட்சியர் மட்டும் வந்தார், வாழ்நாள் முழுவதும் வழங்கிக் கெட்ட தியாகிக்கு அஞ்சலி செலுத்த அல்ல, தியாகிகள் செத்தால் வழங்கப்படும் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகையை வழங்குவதற்காக (அந்தத் தொகையையும் உடனே ஹரிஜன விடுதிக்குத் தந்துவிட்டனர் குடும்பத்தினர். அய்யரின் விருப்பப்படியே அவருடைய கண்களும் தானமாக வழங்கப்பட்டன).

(தி.மு.க.விலிருந்து என்.கே.கே. பெரியசாமி, சுப்புலட்சுமி ஜகதீசன், ம.தி.மு.க.விலிருந்து கணேசமூர்த்தி, பா.ஜ.க.விலிருந்து சி.பி. ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து பி.ஆர். நடராஜன், ஜனதாதளத்தின் குருமூர்த்தி ... போன்றோர் வந்தனர். ஒரு தனியார் கல்லூரி மாணவிகளும், ஹரிஜன விடுதி மாணவிகளும் வந்து அஞ்சலி செலுத்தினர்.)

போர்த்தலாமா, கூடாதா என்பதை உறுதி செய்ய முடியாத குழப்பத்தில் அவருடைய சடலத்தின் மீது தேசியக் கொடிகூட போர்த்தப்படவில்லை.

பிராமணக் குடும்பங்களில் மரணத்துக்காக அவ்வளவாக அழ மாட்டார்கள் என்பார்கள். ஆனால், லட்சுமண அய்யரின் சடலம் கிடத்திவைக்கப்பட்டிருந்தபோது ஒரேயொரு பெண் மட்டும் கடைசி வரை கதறியழுது கொண்டிருந்தார். அவர், அய்யர் வீட்டில் அவருக்குப் பணிவிடை செய்துவந்த ஹரிஜனப் பெண்!

1995, ஜூலையில் ஒருநாள் அவரைப் பார்க்கக் கோபிக்குத் தேடிச் சென்றபோது அவரில்லை. வீட்டுக்கு வெளியே ஒரு நோட்டுப் புத்தகம் தொங்கிக் கொண்டிருந்தது. எழுதிவைத்துவிட்டுச் செல்லுங்கள், அவர் உங்களைத் தேடி வந்துவிடுவார் என்றார்கள் அருகே இருந்தவர்கள். எழுதிவைத்துவிட்டுப் பேருந்து நிலையம் சென்று காத்திருந்தநேரத்திலேயே, ஒருவர் தேடி வந்துவிட்டார், அய்யர் உங்களைக் கையோடு அழைத்துவரச் சொன்னார் என்றபடி! நடமாட முடிந்தவரை அய்யர் அவ்வாறே ஒவ்வொருவரையும் தேடிச் சென்றே வாழ்ந்து கழித்துவிட்டார்.

அன்றைய தினம் நீண்ட நேரம் கடந்தகால நினைவுகளைப் பேசிக்கொண்டிருந்த லட்சுமண அய்யர் சொன்ன வரிகள் இப்போதும் நினைவிலாடுகின்றன: இன்று இந்தியாவிலேயேகூட கையெடுத்துக் கும்பிடக்கூடிய தலைவர்கள் யாரும் இல்லை. அத்தனை பேரும் ஆடம்பரத்திலும் விளம்பரத்திலும் சுயநலத்திலும்தான் மயக்கம் கொண்டிருக்கிறார்கள். காந்தியைப் போல, காமராஜரைப் போல ஒரு தலைவர் இல்லை. இன்று எந்த வழியிலாவது சம்பாதிப்பதையும் பிழைப்பதையுமே பெரிதாகக் கொண்டிருக்கிறார்கள் தலைவர்கள். தவிர, தியாகத்தைப் பெரிதாகக் கருதும் மக்களும்கூட நாட்டில் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

அன்று அவர் சொன்னது எத்தனை பெரிய உண்மை! முன்னாள் சாராய வியாபாரியான ஒன்றியச் செயலர் ஒருவரின் மாமியார் இறந்துபோனால்கூட நூறு கார்கள் வரிசைபோட, ஆயிரம் பேர் திரண்டிருப்பார்கள். ஏனென்றால் அவரால் ஆனதும் ஆகக்கூடியதும் எத்தனையெத்தனையோ! காலாவதியாகிப்போன ஒரு தியாகியின் சாவுக்குச் செல்வதில் யாருக்கு என்ன ஆகிவிடப் போகிறது. ஆனால், ஒன்றுமட்டும் நாம் மறந்துவிடக்கூடாது, இவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கும் இந்த சமுதாயத்திலிருந்து ஒரு தியாகிகூட இனி உருவாக மாட்டான், ஜாக்கிரதை.

(9.1.2011 தினமணியில் பாண்டியராஜன் எழுதிய கட்டுரை. தினமணியைத் தவிர வேறெதிலும் இதுபோன்ற கட்டுரையைக் காண்பது அபூர்வம்)

மோட்சம் என்றால் என்ன?


சித்தாந்தச் சிலந்திவலையில்

சிக்கிக்கொண்ட பூச்சி நான்!

இத்துப்போன வலை இதுவென்றால்

தப்பிப்போகத் தடை ஏதுமில்லை!


சித்தாந்தச்சிலந்தி இந்தப்பூச்சியை

சிறிதுசிறிதாய் சீரணித்துவிட்டால்...

பூச்சியின் மோட்சம் அதுதான்!

அதுதான்!

முக்தி நிலை, மோன நிலை

எல்லாமும் அதுதான்!

சனி, ஜனவரி 08, 2011

என் கணக்கு தப்பாது!இங்க பாருங்க... இதுதான் எங்க அப்பா எழுதி வெச்ச கணக்கு நோட்டு. அவரு அந்தக் காலத்துல என் படிப்புக்காக என்னல்லாம் பெரிசா செலவழிச்சிருக்காருன்னு குறிப்பிட்டிருக்காரு.அப்படியா சுவாரஸ்யமா இருக்கே... நீங்க 6ம் க்ளாசில சேந்தப்போ எவ்வளவு பணம் கட்டியிருக்காரு?

அது என்னத்த..? வெறும் 160 ரூபாய்தான். அது அறக்கட்டளை ஸ்கூலாம்.

அப்படியா உங்கள மட்டும் பெரிய்ய ஸ்கூல்ல சேர்த்திருந்தா நீங்களும் என்னை மாதிரி பெரிய்ய வக்கீலாவோ, அல்லது ஐ.எம்.ஏ.வுல டாக்டராவோ ஆகி கோடிக்கணக்கா சம்பாதிச்சிருப்பீங்க... சரி... நீங்க காலேஜ்ல சேர்ந்தப்போ என்ன பணம் கட்டியிருக்காரு..?

ம்... 2300 ரூபாய் மொத்தமா ஆயிருக்கு. ஆர்ட்ஸ் காலேஜ்.

சே... அது மட்டும் ஒரு 1 லட்சமோ 2 லட்சமோ செலவழிச்சி ஒரு இஞ்சினியரிங் காலேஜ்லயா இருந்தா, இந்நேரம் கவர்ன்மெண்ட் காண்ட்ராக்ட் வாங்கி, ஒரு 100 கோடியோ 200 கோடியோ சம்பாதிச்சிருப்பீங்க. அப்படி இல்லாததால உங்க குடும்பத்துக்கு இப்ப 200 கோடி நஷ்டம்.

அது என்ன இப்படி சொல்றீங்க? உங்க கணக்கு தப்பு.

கிடையாது. என் கணக்கு தப்பவே தப்பாது. உங்களுக்கு இஞ்சினியரிங் காலேஜ் சீட் கிடைச்சும் அங்க உங்கள சேக்காம, உங்க அப்பா 200 கோடி கையாடல் செஞ்சி குடும்பக் கணக்குலயே வராம ஆக்கிட்டாரு. அப்படித்தான..? அதே மாதிரி உங்கள நல்ல ஸ்கூல்ல சேக்காம உங்க குடும்பத்து வருமானத்துல ஒரு 50 கோடிய நஷ்டப்படுத்திட்டாரு. என்ன என் கணக்கு சரியா?

இல்லங்க. நான் அப்பதான் படிக்கத் தொடங்கினேன். எப்படி படிப்பேன், என்ன படிப்பேன்னு ஒரு விவரமே தெரியாம எப்படிங்க அவ்வளவு செலவு செஞ்சி பெரிய ஸ்கூல்ல என்னை சேர்த்திருக்க முடியும்? பிற்காலத்துல நான் நல்லா படிச்சி மார்க் எடுத்து காலேஜுக்கு வந்தப்போதானே என் அருமையே எங்க அப்பாவுக்கு புரிஞ்சது. ஆனா காலேஜுக்கு வந்த நேரத்துல இப்படி பண்ணிட்டாரே அதுதான் தப்பு.

...?!!!

செவ்வாய், ஜனவரி 04, 2011

ஜன.4 - ஹனுமத் ஜயந்தி ஸ்பெஷல்: சுந்தர காண்டம் பெயர் வந்தது எப்படி?

அது அறிஞர் நிறைந்த அரங்கம். அயோத்யாவின் அஸ்வமேத மண்டபம். குற்றத்தைத் தள்ளிவைத்து, குணத்தையே அள்ளிக் கொள்ளும் திரேதா யுகம் அது. வசிஷ்டர் முதலிய பிரம்ம ரிஷிகளும், ராம லட்சுமணர் முதலான அரசகுலத்தோரும் ரசிகர்களாகவும் புலமை மிக்கவர்களாகவும் அங்கே நிறைந்திருந்தனர். அந்தக் காவியத்தைப் பாடக் காத்திருந்தவர்களோ சிறார்கள்.

காவியத்தை இயற்றிய கவியோ வேடனாக இருந்து ரிஷியாக மாற்றம் பெற்றவர். ஆற்றங்கரையோரத்தில் அன்பினால் கட்டுண்ட புறாக்கள், அம்பினால் தைக்கப்பட்டு வீழ்ந்ததைக் கண்டு மனக் கலக்கம் மிகக் கொண்டவர். அதன் வெளிப்பாடு, சோகம் ததும்பும் சுலோகமானது. அதுவே உலகில் பிறந்த முதல் சுலோகம். அதுவும் சோக மயமான சுலோகம். அந்த சோக கீதம் இசைத்த கவியே உலகின் ஆதிகவி. கலைமகள் அவர் நாவில் நர்த்தனம் புரிந்தாள். நாரதர் காவியக் கருவைக் காட்டினார்.

கவியின் நாவிலிருந்து கவி ஊற்றுப் பெருக்கெடுத்தது. காவியத்தின் நாயகன் கதிரவ குலத் தோன்றலான ராமபிரான். கவி புனைந்த சுலோகங்களோ, பண்ணொடு இசைத்துப் பாடுதற்கேற்றவை. பாடப் புகுந்த சிறார்களோ, பச்சை மலையொத்த படிவத்து அடல் ராமனின் புதல்வர்கள். உருவம் அழகு. குரலோ இனிமை. கவியோ செவிக்கு அமுதம். பால் மணம் மாறாப் பாலகர் இருவரும் பாடும் அழகோ பார்ப்போரைச் சுண்டி இழுத்தது. அங்கே நடந்து கொண்டிருந்தது, ஆதிகவி வால்மீகியின் ராமாயண அரங்கேற்றம்தான்.

சகோதரர் புடைசூழ சபைத் தலைவராக வீற்றிருந்தார், சக்கரவர்த்தித் திருமகன். அண்ணலின் அடிக்கீழ் அமைதியே வடிவாக அஞ்சனை மைந்தன். அவையில் எங்கும் ‘ஆஹா’காரம் தவிர வேறு பேச்சேதும் இல்லை. வீணை நரம்பினை விரல்கள் மீட்டிட, அந்த மெல்லிய இசைக்கு ஏற்ப நாயகன் புகழ்பாடும் காவியத்தைப் பாடத் தொடங்கினர் சிறார்கள் இருவரும்.

குற்றம் காண இயலாத அந்தக் காவியத்தில் எல்லோரும் லயித்திருக்க, ஒருவர் மனம் மட்டும் சஞ்சலத்திலும் அச்சத்திலும் ஆழ்ந்திருந்தது. வேறு யார்? அந்தக் காவியம் இயற்றிய கவியேதான்! யார் என்ன குற்றம் சொல்வார்களோ? இந்த அரங்கேற்றம் நல்லபடியாக நடக்க வேண்டுமே என்று எத்தனை நாட்களாகக் காத்திருந்தார் அந்தக் கவி. பதற்றம் இல்லாமலா இருக்கும்! பாடலைக் கேட்பவர் பரவசத்தில் ஆழ்ந்துவிடுவர். அது நிச்சயம். பாராட்டல் மட்டும்தானே பாமரர்க்குத் தெரியும். ஆயின் பண்டிதர் எவரேனும் பாய்ந்தெழுந்தால்....? கவியின் கதி என்னாவது?

கவி கலங்கியதற்குக் காரணமும் இருந்தது. அண்ணலின் அடிக்கீழ் அமர்ந்திருந்தாரே அந்த அஞ்சனை மைந்தன்... அவர்தான் இந்தக் கவிக்கு அச்சத்தைத் தந்துகொண்டிருந்தார். அவர் மகா பண்டிதராயிற்றே! பண்டிதர் என்றால் வெறும் பாண்டித்யம் கொண்டவரா? நவவியாகரண பண்டிதரன்றோ? ஞானமும் சீலமும் வித்யையும் ஒருங்கே நிறைந்த அவர் முகப் போக்கை, ஒவ்வொரு கணமும் ‘திகில்’ உள்ளத்தோடு கண்காணித்துக் கொண்டிருந்தார் கவி வால்மீகி.

ஆயிற்று... பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம்... காவியத்தின் பெரும்பகுதி எந்தத் தடைகளும் குறைகளும் இல்லாமல் சென்று கொண்டிருந்ததில் காவியம் இயற்றிய கவிக்கு அதுவரை ஆனந்தம்தான்! ஆனால் அச்சரேகைகளும் அப்போதுதான் அவர் முகத்தில் படரத் தொடங்கியது.

‘இதி கிஷ்கிந்தா காண்டஸ் ஸமாப்த:’ -  என்று காவியத்தின் நான்காவது காண்டத்தைப் பாடிமுடித்த திருப்தியில் அந்தச் சிறார்கள் சற்றே ஆசுவாசப் படுத்திக் கொண்டனர்.

அடுத்த காண்டத்தைக் கேட்கும் ஆவலில் சபையில் எங்கும் நிசப்தம் நிலவியது. சிறார்கள் இருவரும் பாடத் தொடங்கினர்.

‘அத ஹனுமத் காண்ட: ஆரப்யதே’ என்று தலைப்புச் சொல் அந்தக் குழந்தைகளின் திருவாக்கிலிருந்து வெளிவந்த அந்த நொடிப்பொழுது.... ஒரு பேரிரைச்சல் பேரிடி முழக்கமாக சபையோரை அதிரச் செய்தது.

‘‘கவியே நிறுத்தும். சிறார்கள் பாடுவதை நிறுத்தச் சொல்லும். தலைப்பைத் திருத்தும். இல்லையேல் உம்மைக் கடலில் வீசி எறிந்துவிடுவேன்...’’

வானைப் பிளந்த இந்தச் சொற்கள் வால்மீகியைப் பார்த்து வந்த சொல்லம்புதான். வீசியவர் யார்? வீரத்தின் விளைநிலம், வாயுமைந்தன் அனுமன். அடிபட்ட அரவம் போல் அனுமன் அதரத்திலிருந்து வந்த அந்தச் சொல்லால் அவையோர் ஆச்சரியம் அடைந்தனர். எல்லாம் அறிந்த எம்பிரானோ அமைதி காத்தார். இப்படி நடக்கும் என எதிர்பார்த்திருந்த கவியோ கலக்கத்தைக் காட்டிக் கொள்ளாமல் கண்களால் ஏறெடுத்துப் பார்த்தார்.

பின்னர் அனுமனைப் பார்த்துக் கேட்டார்....

‘‘ஓ மகா பண்டிதரே! அஞ்சனையின் புதல்வரே... என்ன குற்றம் கண்டீர்? பாடலை நிறுத்தச் சொல்வதற்கான காரணம்தான் யாதோ? சொல் குற்றம் கண்டீரோ?’’

‘‘இல்லை இல்லை... கலைவாணியின் கருணையால் அவள் உம் நாவில் திருநடம் புரிகிறாள். அப்படி இருக்கையில் உம்மிடம் சொற்குற்றத்தை எப்படிக் காணமுடியும்...?’’

‘‘எனில், பொருட் குற்றம் கண்டீரோ?’’

‘‘ஆம். முக்திக்கு வித்தாகும் மிகப் புனிதமான ராம சரிதத்தில், பாமரக் குரங்கின் பெயரைச் சூட்டுதல் பொருத்தமற்றதே! புனிதக் காவியத்தில், ஒரு காண்டத்தின் தலைப்பாகவே ஒரு குரங்கின் பெயரைச் சூட்டுதல் பெருங்குற்றமே! அதுவும் பொறுத்துக் கொள்ள முடியாத பெருங்குற்றமே!’’

‘‘ஏன்? ராம சகோதரர்களின் பால லீலையைச் சொல்வது, பால காண்டம். அயோத்யாவின் சரிதத்தை அடக்கியது, அயோத்யா காண்டம். கானகத்தில் வாசம் செய்து, அண்ணல் அடியெடுத்து நடந்த ஆரண்யம் தொடர்பான சம்பவங்களைச் சொல்வது, ஆரண்ய காண்டம். கிஷ்கிந்தை வந்தது முதல் நடந்தவற்றைச் சொல்வது கிஷ்கிந்தா காண்டம். அப்படிப் பார்க்கும்போது, ஹனுமன் தொடர்பான வீரதீரங்களைச் சொல்வது ஹனுமத் காண்டம் என்றுதானே வைக்க முடியும். இங்கே ஹனுமனது சரிதம் முக்கியம் என்பதால் ஹனுமத் காண்டம் என்று பெயர் சூட்டியதில் என்ன தவறு இருக்கமுடியும்? இதில் ஏன் உமக்கு ஆட்சேபணை?’’

‘‘தாசானுதாசனாக, ராமபிரானின் திருப்பெயர் முழங்கும் விரதம் பூண்ட இந்த அடிமையின் பெயரை, புனித ராம சரிதத்தில் வைப்பது எவ்விதத்திலும் தகாது. உடனே அதை நீக்கி, வேறு பெயரைச் சூட்டுங்கள். இல்லையேல் நடப்பதே வேறு....’’

மலைபோல் எழுந்த மாருதியின் மனதை அறிந்தவர்கள் என்பதால், சபையோர் அச்சத்தின் பிடியில் அமைதி காத்தனர். அனுமனின் வீரதீரங்களை முழங்கும் அந்த காண்டத்துக்கு அனுமன் பெயரைச் சூட்டுதலே பொருத்தம் என்பதை எல்லோருமே அறிவர். அதுதான் நியாயம் என்பதும் அவர்கள் கண்ணோட்டம். ஆனால் ஆஞ்சனேயனின் முன் வாயைத் திறப்பதாவது...?

கவியின் கண்கள் கருணையே வடிவான ராமபிரானின் கண்களைச் சந்தித்து கெஞ்சின. இந்தத் தலைப்பையே வைப்பதற்கு ஆஞ்சனேயனிடம் சொல்லுமாறு வேண்டின. கவிஞனுக்கும் ஒரு சுதந்திரம் இருக்கிறதே. அவ்வளவு லேசில் தலைப்பை மாற்றுவதற்கு கவி சம்மதிப்பாரா என்ன?

ராமனுக்கோ தர்மசங்கடமானது. ஆதிகவியை சமாளிப்பதா, அல்லது தன் முரட்டு பக்தனை சமாளிப்பதா? தன்னால் இயலாமல் போனதால் அந்த தர்மாத்மா வசிஷ்டர் முதலான ரிஷிகளிடம் தன் பார்வையை ஓட்டினார். அவர்களோ, ஒன்றும் சொல்வதற்கு இயலாதவர்களாய் ஒதுங்கிப் போனார்கள்.

இப்படியே அந்தக் கவி பிடிவாதம் செய்தால் என்ன நடக்கும்? கவியையும், பண்ணொடு பாடல் இசைக்கும் சிறார்கள் இருவரையும் அப்படியே தூக்கிக் கடலிலே வீசிவிடுவாரோ அந்த  அனுமன்...? அவை அச்சத்தின் பிடியில் ஆழ்ந்தது.

காலம் கடந்து கொண்டிருந்தது. யாருமே ஒரு முடிவுக்கும் வரக்காணோம். அந்த நிலையில் கவியின் உள்ளத்தில் ஒன்று நினைவுக்கு வந்தது.

கவிக்கு பிரம்ம தேவர் ஒரு முறை வரம் ஒன்று கொடுத்திருந்தார். ‘ரஹஸ்யஞ்ச ப்ரகாஸஞ்ச’  என்ற வரம் அது. அதாவது, ரஹஸ்யமானதும் வெளிப்படையாக உம் கண்ணிலே புலப்படும் என்பது அந்த வரம். அனுமனின் பெயரையே அந்த காண்டத்துக்கு சூட்டவேண்டும்; ஆனால் அனுமனின் கோபத்தையும் வளர்க்கக் கூடாது.... என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் அவருக்கு இந்த வரம் நினைவுக்கு வந்தது. உடனே அவர் உள்ளத்தில் ஒரு பெயர் தோன்றியது.

‘‘அனுமனே! உம் இஷ்டப்படி நான் முன்பு வைத்த பெயரை நீக்கிவிட்டு, அந்த காண்டத்துக்கு சுந்தர காண்டம் என்று பெயரிட்டால் உமக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லையே!’’ என்று வினவினார்.

‘‘நீர் முன்பு வைத்த அந்தப் பெயரைத் தவிர வேறெந்தப் பெயரிட்டாலும் நான் எதிர்க்க மாட்டேன்’’ என்றார் அஞ்சனை மைந்தன்.

அவையும் ஆமோதித்தது. அப்படியே சுந்தர காண்டம் தொடர்ந்தது. காண்டத்தின் கதை நிறையும் தறுவாயில், ‘‘இதி சுந்தரகாண்டஸ் ஸமாப்த: அத யுத்த காண்ட ஆரப்யதே’’ என்று பாலகர்கள் இருவரும் பாடப் புகுந்தனர்.

அவையோருக்கு சுந்தர காண்டத்தைக் கேட்டு முடித்ததும் அப்போதுதான் ஒன்று தோன்றியது.

‘‘ஏன் கவியே, இந்த காண்டம் முழுவதும் அனுமனின் வீரம்தானே வருகிறது. எங்குமே ‘சுந்தர’ என்ற சொல்லுக்குரிய ‘அழகு’ தெரியவேயில்லையே. பின் எப்படி இதற்கு சுந்தர காண்டம் என்பது பொருத்தமாக அமையும்...’’ - இப்படிக் கேள்வி எழுப்பினர் அவையோர்.

கவிக்கு இப்போது தாம் அறிந்த உண்மையைச் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்தது. கவி அஞ்சனை மைந்தன் பக்கலில் அஞ்சியவாறே சொல்லத் தொடங்கினார். ஆனாலும் அவருக்கு ‘வேறு எந்தப் பெயர் வேண்டுமானாலும் சூட்டுங்கள், ஏற்கிறேன்’ என்று மொழிந்த ஆஞ்சனேயரின் வாக்கில் நம்பிக்கை இருந்தது. கவி சொல்லத் தொடங்கினார்...

‘‘இந்த காண்டத்தில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை, அஞ்சனை மைந்தனின் சரிதம் வருவதால் அவருடைய பெயர் சூட்டுவதே பொருத்தம். அதுதான் கவி தர்மம். நியாயமும்கூட! இது அடியேனுக்குத் தெரியும். ஆகவே, அஞ்சனாதேவி ஆஞ்சனேயருக்கு இட்டு அழைத்த செல்லப் பெயரையே இந்த காண்டத்துக்குச் சூட்டினேன்.’’ - சொல்லிவிட்டு அமர்ந்த கவியைப் பார்த்து புருவம் நெறித்தார் அனுமன்.

அனுமனுக்கு சுந்தரன் என்ற பெயர் ஒன்று உண்டு என்பதை சபையோர் எவரும் அறிந்திருக்கவில்லை. ஏன், அனுமனுக்கும் கூடத்தான் தெரியாது. சரி, கவி ஏதோ வீம்புக்குச் சொல்கிறார் போலும் என்றே சபையோர் எண்ணினர். அனுமனும் அப்படியே எண்ணினார். அந்த ஐயத்துடனேயே அன்றைய பொழுது கழிந்தது.

மாலை நேரமானதும், கவியிடம் சென்ற அனுமன், தன் ஐயத்தைக் கேட்டார். கவி வால்மீகியோ, ‘‘அதை அஞ்சனை மலையில் உள்ள உம் அன்னை அஞ்சனாதேவியிடம் சென்று கேட்டுவிட்டு வாரும்’’ என்றார்.

கவியால் தான் ஏமாற்றப்பட்டோமோ என்ற ஏக்கத்தோடும், தனக்கு இப்படியும் ஒரு பெயர் உண்டோ என்ற ஊக்கத்தோடும் ஒரே தாவலில் அஞ்சனை மலைக்குச் சென்றார். அங்கே தன் தாயின் திருவடி வணங்கி எழ, அன்னை அழைத்தாள்... ‘‘வா சுந்தரா, எப்படி இருக்கிறாய்?’’

அனுமனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. தனக்கு இப்படியும் ஒரு செல்லப் பெயர் உண்டோ? சரி போகட்டும், அன்னையிடம் உரையாடிக் கொண்டிருப்பதைவிட, அண்ணலின் திருநாமம் கேட்கும் பாக்கியம் அன்றோ இப்போது மிக முக்கியம். மீண்டும் ஒரே தாவலில் அயோத்யாபுரியின் அஸ்வமேத மண்டபத்துக்கு வந்தார் அனுமன். அங்கே கவி வால்மீகியைப் பார்த்து, நடந்தவற்றைச் சொல்லி, தன் தோல்வியை ஏற்றுக்கொண்டு, தன்னை மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டார்.

இதனால்தான் சுந்தரகாண்டத்தின் பலச்ருதி இப்படி அமைந்திருக்கின்றது....

ஸுந்தரே ஸுந்தரஸ்யாஸ்ய ஸுந்தரம் கர்ம கத்யதே |

படநாத்சிரவணாச்சாபி ஸர்வ ஸௌபாக்யபாக் பவேத் ||

சுந்தர காண்டத்தில் சுந்தரன் என்ற அனுமனின் அழகுக் கைங்கர்யம் கூறப்படுவதால், சுந்தர காண்டத்தைப் படித்தாலும் கேட்டாலும் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும் என்று எழுதிவைத்தார் ஆதி கவி வால்மீகி.

கட்டுரை : செங்கோட்டை ஸ்ரீராம்

சனி, ஜனவரி 01, 2011

திருநெல்வேலி மாவட்ட முக்கிய தொலைபேசி எண்கள்


 மாவட்ட ஆட்சியர் 2501222
 வீடு 2577983
 ஆட்சியர் அலுவலகம் 2501032
 மாவட்ட வருவாய் அலுவலர் 2500466
 திருநெல்வேலி கோட்டாட்சியர் 2501333
 மாவட்ட வழங்கல் அலுவலர் 2500761
 திருநெல்வேலி வட்டாட்சியர் 2333169,
 94450 00671
 பாளை. வட்டாட்சியர் 2500086,
 94450 00669
 மாநகராட்சி அலுவலகம் 2336633
 மேயர் 2330577
 துணை மேயர் 2336633
 ஆணையர் 2336633,
 94422 18000
 அரசு மருத்துவக் கல்லூரி
 மருத்துவமனை 2572611-16
 காவல்துறை துணைத் தலைவர்
 (டி.ஐ.ஜி.) 2568031
 மாவட்ட எஸ்.பி 2568020
 மாநகர காவல் ஆணையர் 2501444,
 2502696
 துணை ஆணையர்
 (சட்டம்-ஒழுங்கு) 2501070
 துணை ஆணையர்
 (குற்றம் மற்றும் போக்குவரத்து) 2500350
 கோட்ட தீயணைப்பு அலுவலர் 2572342
 சுற்றுலாத் துறை 2500104,
 97890 55412
 ரயில்வே விசாரணை (பொது) 131
 நிலைய மேலாளர் 2322155,
 2336185
 ரயில்வே காவல் நிலையம் 2334634
 ரயில்வே பாதுகாப்புப் படை 2334539


 வட்டாட்சியர் அலுவலகம் 250348
 நகராட்சி அலுவலகம் 250377
 ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 250397
 டி.எஸ்.பி. அலுவலகம் 250400
 அரசு மருத்துவமனை 250380
 கலைக் கல்லூரி 250375
 மின்வாரிய அலுவலகம் 254477
 சட்டப் பேரவை
 உறுப்பினர் அலுவலகம் 255636


 துணை ஆட்சியர் அலுவலகம் 260124
 மாவட்ட பதிவாளர் அலுவலகம் 260153
 ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 260131
 டிஎஸ்பி அலுவலகம் 261111
 அரசு மருத்துவமனை 260650


 வட்டாட்சியர் 9445000679
 வட்டாட்சியர் அலுவலகம் 250223
 காவல் நிலையம் 250224
 நடுவர் நீதி மன்றம் 250351
 அரசு மருத்துவமனை 250408
 மின்வாரிய அலுவலகம் 250800


 அரசு மருத்துவமனை 240438
 ஆரம்ப சுகாதார
 நிலையம் (சொக்கம்பட்டி) 243126
 காவல் நிலையம் 240280
 காவல் நிலையம் (சொக்கம்பட்டி) 240191
 ரயில் நிலையம் 240241
 மின்வாரிய அலுவலகம் 240205


 டி.எஸ்.பி. அலுவலகம் 222111
 அரசு மருத்துவமனை 222399.
 காவல்நிலையம்(நகரம்) 226267.
 காவல்நிலையம்(தாலுகா) 222267.
 தீயணைப்பு நிலையம் 222509.
 ரயில்நிலையம் 222350.
 துணை மின்நிலையம் 222385.
 நகராட்சி அலுவலகம் 222236.
 ஆர்.டி.ஓ. அலுவலகம் 226600.

 வட்டாட்சியர் அலுவலகம் 270899
 டிஎஸ்பி அலுவலகம் 270110
 காவல்நிலையம் 270140
 குடிநீர் வடிகால் வாரியம் 272944
 மின்சார வாரியம் 270135
 சுகாதார நிலையம் 270442


 தென்காசி டி.எஸ்.பி. 222375
 தென்காசி காவல் நிலையம் 222278
 மகளிர் காவல் நிலையம் 222238
 குற்றாலம் காவல் நிலையம் 283137
 மின்வாரியம் 220268
 தீயணைப்பு நிலையம் 222166
 தென்காசி ரயில் நிலையம் 222234
 செங்கோட்டை ரயில் நிலையம் 233188
 தென்காசி வட்டாட்சியர் 22262
 செங்கோட்டை வட்டாட்சியர் 233276
 கோட்டாட்சியர் அலுவலகம் 222212
 ஆர்.டி.ஓ. அலுவலகம் 227327
 மாவட்ட கல்வி அலுவலகம் 280882
 தென்காசி நகராட்சி 222228
 செங்கோட்டைநகராட்சி 233238
 குற்றாலம் விருந்தினர் மாளிகை 283123


 காவல் நிலையம் 241337
 தீயணைப்பு நிலையம் 241238
 ஆரம்ப சுகாதார நிலையம் 241099


 டிஎஸ்பி அலுவலகம் 233135
 காவல் நிலையம் 233035
 மின்வாரிய நிலையம் 233037
 அரசு மருத்துவமனை 233649


 வட்டாட்சியர் அலுவலகம் .... 277140
 காவல் நிலையம் ............ 277125
 மின்வாரிய அலுவலகம் ...... 277568
 ஆரம்ப சுகாதார நிலையம் ... 277279


 காவல் நிலையம் .......... 261110
 தீயணைப்பு நிலையம் ..... 261699
 மின்வாரிய அலுவலகம் ... 261265
 ஆரம்ப சுதாதார நிலையம்.. 260100


 வட்டாட்சியர் அலுவலகம்:254122
 ஊராட்சி ஒன்றிய அலுவலகம்:254125
 ஊராட்சி மன்ற அலுவலகம்:254320
 காவல்நிலையம்:254124
 அரசுமருத்துவமனை:254239
 மின்வாரிய அலுவலகம்:254115


 வட்டாட்சியர் அலுவலகம்:250123
 காவல்நிலையம்:250112
 துணைகண்காணிப்பாளர் அலுவலகம்:250287
 ஊராட்சி ஒன்றிய அலுவலகம்:250229
 அரசு மருத்துவமனை:250131
 மின்வாரிய அலுவலகம்: 220934


 ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 220242
 காவல்நிலையம் 220256
 துணைகண்காணிப்பாளர் அலுவலகம் 220283
 அனைத்து மகளிர் காவல்நிலையம்-222755
 அரசு மருத்துவமனை:221287
 தீயணைப்பு நிலையம்:220221
 மின்வாரிய அலுவலகம்: 220934
 காவல்நிலையம் 260530
 மின்சார வாரியம் 260540
 மின்சார வாரியம் (கிராமப்புறம்) 261401
 தொலைபேசி நிலையம் 260000
 ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 265532
 பேரூராட்சி அலுவலகம் 260165
 அரசு மருத்துவமனை 260528
 அரசு மேல்நிலைப்பள்ளி 260325
 அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 265038
 (திருக்குறுங்குடி)
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix