சுடச்சுட:

இலக்கியம்

  • உலகின் - முதல் காதல் கடிதம்

  • தை மகள் பிறந்த நாள்!

  • ஆன்மிகம்

    செவ்வாய், டிசம்பர் 14, 2010

    உன்மத்தன் வம்பு


    உன்மத்தன் வம்பு!

    கமால் பாஷா ஞானம்
    டமால் என்றே வெடித்தது
    தமிழ் நாட்டின் மானம்
    தடால் என்றே கவிழ்ந்தது.

    கற்பனைக் கதையிது,
    விற்பனைக் கல்ல!
    எச்சரிக்கை எச்சரிக்கை!

    சொற்போர் எனல் வேண்டாம்
    கற்போரே உமக்கு மட்டும்!
    எச்சரிக்கை எச்சரிக்கை!

    காலை வெளிச்சத்தில்
    உதித்த கவிதையிது...
    மாலை மயக்கத்தில்
    மரித்த மனிதமிலை!

    தவமிருந்து பெற்றபிள்ளை
    தறுதலையாய் போகுதென்றால்
    தாய் இருந்த தவத்தினிலே
    தவறெதுவும் இல்லையடா

    வரும்லட்சுமி என்றே வசனம்பேசி
    வலிந்து அழைப்பான்
    வந்தபின்னே வாசல் வழிதிறந்து
    ஊர்மேயப் போவான்
    வா நீ வா நீ என்றே
    வருந்தி அழைப்பான்
    வந்தவள் வாசம்கண்டபின்
    போ நீ போ நீ என்றே
    துரத்தி அடிப்பான்
    எச்சரிக்கை எச்சரிக்கை

    மஞ்சத்தில் சாய்ந்தவளின்
    கெஞ்சல் மொழி கேட்பான்
    சரி சரி என்றே தலைசாய்ப்பான்
    சரிவு கண்டால்
    கா எனச் சொல்லி
    கழற்றிடுவான் எச்சரிக்கை!

    பாத்திரமோ இருள் வேடம்
    பாத்திறமோ பகல் வேடம்
    சத்தியமாய் பேசும்மனம்
    சத்தியமாய் இல்லையென
    நித்தியமாய் கண்டுவிடு
    எச்சரிக்கை எச்சரிக்கை

    பத்தியமாய் அவருமில்லை
    பைத்தியமாய் நாமுமில்லை
    வைத்தியமே தேவையடா
    வையத்தை வாழ்விக்க!

    சத்திரத்துச் சரக்கொன்றை
    வித்துவிடத் துடிக்கின்றார்
    பத்திரமாய் உம்மனத்தை
    வைத்திருங்கள் எச்சரிக்கை!

    கத்திக்கத்திக் கதைத்தாலும்
    காத்தாமுட்டி கேட்குதில்லை
    சொத்துசுகம் எல்லாமும்
    சொர்க்கத்தைத் தந்திடுமோ?
    எச்சரிக்கை எச்சரிக்கை!

    பாப்பான் கேட்பான் என்றே பயத்தால்
    விப்பான் விம்முவான்
    எச்சரிக்கை எச்சரிக்கை

    கறுப்புச் சட்டத்துள் தானாய் நுழைந்து
    வெறுப்புச் சாட்டையால் தாயைப் பழிப்பான்
    எச்சரிக்கை எச்சரிக்கை!

    கறுப்புக்குள்ளே புகுந்ததாய் எண்ணி
    வெளுப்பைத் தொலைத்த வீரன்வரான்
    எச்சரிக்கை எச்சரிக்கை!

    அந்தி வந்த பின்னே
    முந்தி மட்டும் தேடும்
    சிந்தை தொலைந்த சிறுவன்
    வாந்தி எடுத்ததெல்லாம்
    சொந்த வார்த்தையல்ல;
    நொந்த மனிதன் காட்சி!
    ஓய்ந்த மனதின் சாட்சி!

    எச்சரிக்கை எச்சரிக்கை
    எச்சரிக்கை எச்சரிக்கை!

    Unknown சொன்னது…

    வாஞ்சிநாதன் ஊர்காரராச்சே ! இந்த ஆஷ் துறைக்கு இது போதும் ! கவிதை சூப்பர் !

    Unknown சொன்னது…

    வாஞ்சிநாதன் ஊர்காரராச்சே ! இந்த ஆஷ் துறைக்கு இது போதும் ! கவிதை சூப்பர் !

    ippadikku murugan சொன்னது…

    அருமை ஸ்ரீராம்

    Gunalan Lavanyan சொன்னது…

    கவிதை முப்போகம் விளையட்டும்...

     
    Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
    Shared by WpCoderX