சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

ஞாயிறு, ஜனவரி 23, 2011

அவசர ரகசிய ஆலோசனை!


ம்ம்ம்... சிவ கங்கைலேர்ந்து கங்கைக்கே வசிக்கப் போயிட்டீங்க. அப்ப அப்ப இங்கயும் தலையைக் காட்டுங்க. தலைநகர்லயே தங்கிடாதீங்க. 

ஆமாங்க. நீங்க எல்லாரும் மனசு வெச்சதுனாலதான தலைநகர் தங்கல் சாத்தியமாகியிருக்கு. அதுக்கும் நீங்கதான் காரணம்... 

அந்த நினைவிருந்தா சரிதான்! பிறகு... இந்த கர்நாடகா விவகாரம் இப்படி போகுதே! 

அது ஒரு தனிக் கதை. இதெல்லாம் உங்களுக்கு தெரியாததா? 

ஆமாங்க. அவரு பாவம். சும்மா கோவில் குளம்னு தமிழ்நாட்டுக்கு வந்து கோடிகோடியா கொட்டிட்டுப் போறாரு. அவருக்கு எங்க எதைச் செய்யணும்னு தெரியல. கோவிலுக்கு வர்ற மனுஷன் அதே கையோட கோபாலபுரத்துக்கும் அடிக்கடி வந்துட்டுப் போயிருந்தாருன்னா, உங்களை எல்லாம் எப்படி சமாளிக்கணும்கிற வித்தையை கத்துக் கொடுத்திருப்பேன். 

ஐயையோ சும்மா இருங்க... ஏதோ அந்த ஒரு மாநிலத்த வெச்சி எங்க வியாபாரம் அபாரமா ஓடிக்கிட்டிருக்கு. அதுல நீங்க கையை வெச்சி கவுத்துடாதீங்க... 

இருந்தாலும் அவரைப் பாக்க பரிதாபமா இருக்கு. என்னங்க இது நில விவகாரம்..? உப்பு சப்பில்லாம... நாம பாக்காததா? இந்த அஞ்சு வருஷத்துல ரியல் எஸ்டேட் இங்க எப்படி வளர்ந்திருக்கு? யாரு வளர்த்திருக்காங்க? இதெல்லாம் அவரு கேட்டு தெரிஞ்சிக்க வேண்டாமா?! அதவிட ஒரு முக்கியமான படிப்பு அவருக்கு இருக்கு. ஒரு மாநிலத்துல கவர்னரை எப்படி கவனிக்கணும், எப்படி கையாளணும்ங்கிற வித்தை தெரியாம என்னத்த அவரு முதல்வர் நாற்காலில உட்கார்ந்திருக்காரோ தெரியலை. பக்கத்து மாநிலத்துல ஒரு பழுத்த அனுபவசாலி இருக்காங்கறதையே மறந்துட்டாரே! பண்டாரக் கட்சிங்கறது சரியாத்தான் இருக்கு... 

நல்ல வேளைங்க... அவருக்கு இந்த யோசனை தோணாம இருக்கறது! இல்லைன்னா நம்ம அலைக் கற்றை விவகாரம் அலை அலையா கத்தை கத்தையா மக்கள் மனசுல ஊறி, எல்லாமே நாறியிருக்கும்... 

பின்குறிப்பு: இது, ராடியா டேப் பேச்சு ஒட்டுகேட்பு மாதிரி... போட்டோ டூப் மனசு ஒட்டுகேட்பு
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix