- அக்னிக் குஞ்சுகளே அணி திரள்வீர்.....!!
- தினமணி ஆசிரியருக்கு எழுதிய கடிதம்..!
- பாசம் எனும் கட்டு; முன்னேற்றத்தைத் தடுக்கிறதோ?
- புனித தாமஸ் எனும் புனை கதை!
- இதழியல் அறம் குறித்த நீதிபதியின் பார்வை
- வரதராசப் பெருமாளின் பழையசீவரம் திருமுக்கூடல் பார்வேட்டை உற்ஸவம்
- ஔஷதகிரி ஶ்ரீநித்யகல்யாண ப்ரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயம்
- ஏழ்வரைக்கடியான் என்ற ராமரத்னம்
- தமிழன்னை இழந்துவிட்ட தவமகன்: கௌதம நீலாம்பரன்
- சரணாகதியின் பொருள் உரைத்தவன்!
- வாதம் - விதண்டாவாதம்; தர்க்கம் - குதர்க்கம்!
- வடக்கும் தெற்கும்: தேய்ந்தது எதுவோ?
ஞாயிறு, ஜனவரி 16, 2011
புதுக் குறள் பத்து
வள்ளுவர் நாளில் நவீனக் குறள்பத்து
நல்லோர்மன் னித்தருள்வீ ரே !
பொதுமக்களியல் - குடிமையியல் - ஆட்சியியல் - குடிசெயல்வகையியல்
மலையளவு ஊழல் எனினும் மறப்போம்
அலைக்கற்றை அவ்வளவு தான். (1)
கற்பனையில் தோன்றியதாய்க் கட்டவிழ்த்துக் காட்டிடுவோம்
விற்பனையில் பார்த்ததைத் தான் (2)
விலைவாசி ஏன்கவலை விற்பவற்றின் பங்காய்
நிலையாக நோட்டுவரும் போது? (3)
இலவசம் இல்லை இவன்வசம் இல்லை
பலமிழந்த பார்வையிது காண் (4)
தைதான் சுயமரியா தைதான் சிதைந்தாலும்
வைவேனே வையத்தைத் தான் (5)
வெங்காயக் கேள்வி வெறுங்கேள்வி கேட்டக்கால்
பொங்காதோ எந்தன் உளம் (6)
செய்தவற்றில் செய்தவற்றை சேர்ந்தேதான் கண்டிட்டால்
செய்யாச் செயலெனவே புகல் (7)
இனத்தை சுகத்தை இனிதாய் விரும்பின்
மனத்தை உறக்கத்தில் வை (8)
புதிதாகச் செய்வோம் புதிராகச் செய்வோம்
எதிர்க்கேள்வி கேட்டால் வழக்கு (9)
புத்தாண்டு பூத்ததுவாய் புன்சிரிப்பைக் காட்டிடுவோம்
வித்தாச்சே எங்கள்கொள் 'கை' (10)
© தினக்குரலன் மணிக்குறளன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
கருத்துரையிடுக