சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

சனி, ஜனவரி 08, 2011

என் கணக்கு தப்பாது!



இங்க பாருங்க... இதுதான் எங்க அப்பா எழுதி வெச்ச கணக்கு நோட்டு. அவரு அந்தக் காலத்துல என் படிப்புக்காக என்னல்லாம் பெரிசா செலவழிச்சிருக்காருன்னு குறிப்பிட்டிருக்காரு.



அப்படியா சுவாரஸ்யமா இருக்கே... நீங்க 6ம் க்ளாசில சேந்தப்போ எவ்வளவு பணம் கட்டியிருக்காரு?

அது என்னத்த..? வெறும் 160 ரூபாய்தான். அது அறக்கட்டளை ஸ்கூலாம்.

அப்படியா உங்கள மட்டும் பெரிய்ய ஸ்கூல்ல சேர்த்திருந்தா நீங்களும் என்னை மாதிரி பெரிய்ய வக்கீலாவோ, அல்லது ஐ.எம்.ஏ.வுல டாக்டராவோ ஆகி கோடிக்கணக்கா சம்பாதிச்சிருப்பீங்க... சரி... நீங்க காலேஜ்ல சேர்ந்தப்போ என்ன பணம் கட்டியிருக்காரு..?

ம்... 2300 ரூபாய் மொத்தமா ஆயிருக்கு. ஆர்ட்ஸ் காலேஜ்.

சே... அது மட்டும் ஒரு 1 லட்சமோ 2 லட்சமோ செலவழிச்சி ஒரு இஞ்சினியரிங் காலேஜ்லயா இருந்தா, இந்நேரம் கவர்ன்மெண்ட் காண்ட்ராக்ட் வாங்கி, ஒரு 100 கோடியோ 200 கோடியோ சம்பாதிச்சிருப்பீங்க. அப்படி இல்லாததால உங்க குடும்பத்துக்கு இப்ப 200 கோடி நஷ்டம்.

அது என்ன இப்படி சொல்றீங்க? உங்க கணக்கு தப்பு.

கிடையாது. என் கணக்கு தப்பவே தப்பாது. உங்களுக்கு இஞ்சினியரிங் காலேஜ் சீட் கிடைச்சும் அங்க உங்கள சேக்காம, உங்க அப்பா 200 கோடி கையாடல் செஞ்சி குடும்பக் கணக்குலயே வராம ஆக்கிட்டாரு. அப்படித்தான..? அதே மாதிரி உங்கள நல்ல ஸ்கூல்ல சேக்காம உங்க குடும்பத்து வருமானத்துல ஒரு 50 கோடிய நஷ்டப்படுத்திட்டாரு. என்ன என் கணக்கு சரியா?

இல்லங்க. நான் அப்பதான் படிக்கத் தொடங்கினேன். எப்படி படிப்பேன், என்ன படிப்பேன்னு ஒரு விவரமே தெரியாம எப்படிங்க அவ்வளவு செலவு செஞ்சி பெரிய ஸ்கூல்ல என்னை சேர்த்திருக்க முடியும்? பிற்காலத்துல நான் நல்லா படிச்சி மார்க் எடுத்து காலேஜுக்கு வந்தப்போதானே என் அருமையே எங்க அப்பாவுக்கு புரிஞ்சது. ஆனா காலேஜுக்கு வந்த நேரத்துல இப்படி பண்ணிட்டாரே அதுதான் தப்பு.

...?!!!
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix