சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

From our Blog

வெள்ளி, டிசம்பர் 31, 2010

ஆங்கிலப் புத்தாண்டு அதிசயம் நிகழ்த்தட்டும்!



2010ல் வெங்காயமும் தக்காளியும் உருளைக் கிழங்கோடு இணைபிரியாமல் இருந்து உச்ச விலை தொட்டிருக்கிறது.



2011ல் அமைதியும் ஆனந்தமும் நம்மோடு இணைபிரியாமல் இருந்து உயர்வு நிலை அடையட்டும்!

வியாழன், டிசம்பர் 30, 2010

வண்ணமய வரவேற்பு!



நாங்கள் என்னவோ

வர்ணம் பூசித்தான் வரவேற்கிறோம்...
நாற்காலியில் அமரவைத்து
சாமரம் வீசுகிறோம்...
வண்ண வண்ண எண்ணங்களோடு!



பதிலுக்கு ...

கரியை அல்லவா பூசுகிறீர்கள்?


ஓ சீமான்களே!

அதுவும் ஒரு வண்ணம் என்பதாலா?

திங்கள், டிசம்பர் 27, 2010

நல்லா மாட்டிநாய் போ!



நீதான் கார் சீட்டுல உக்காந்து அசிங்கம் செஞ்சே சரி...  அப்படியே உன் வேலையை பாத்துட்டு வெளியே வரவேண்டியதுதானே! எஜமானர்கிட்ட என்னை இப்படியா மாட்டிவுடுவ?

ஏன்? என்ன மாட்டிவுட்டேன்...

என்ன மாட்டிவுட்டியா? கார் சீட்டுல உக்காந்து அவன் என்ன செஞ்சானோ அதத்தான் நானும் செஞ்சேன்னு சொல்றியே! ஒரே வீட்ல ஒண்ணா வளர்ந்துட்டு... இது நல்லாவா இருக்கு?

சனி, டிசம்பர் 25, 2010

வெங்காய வெங்காயம்!


வெங்காயத்தை நறுக்குகையில்

எம் குலப் பெண்களை அழவிட்டது.
வெங்காயத்தை வாங்குகையில்
எம் இனப் புதல்வர்களை அழவிட்டது.
தமிழா தமிழா!

அழுது தவிக்கின்ற உன்னை
சிரித்திடச் செய்திடவே
வெங்காயத்தைப் பற்றி
பெரியாரிடம் கேட்கச் சொன்னேன்.

நீயோ
வெறுங்கேள்வி கேட்டு என்னை
வெறுப்புறச் செய்துவிட்டாய்!
அரைகுறை அறிவாலே என்னை
அழஅழச் செய்துவிட்டாய்!

அன்று
தமிழகத்துக்கு ஒரு ராஜா-ஜி
இன்று
தம்அகத்துக்கு ஒரு ராஜா-2ஜி

வெங்காயம் வெங்காயம்!

வெளியே பளபளப்பு!
உரிக்க உரிக்க வெற்றுத் தாள்தான்!
பெரியாரின் வெங்காயம் அதுதான்!

அலைக்கற்றை பார்க்கத்தான் பூதம் பூதம்
அதனுள்ளே பார்த்தாலோ போதும் போதும்!
வெங்காயம் வெங்காயம்!

வரலாறு காணாத போராட்டங்கள்!


(குறை கேட்பு எப்படி இருக்கும்? எல்லாம் நம்ம கற்பனைதான்!)


சொல்லுங்க என்ன பிரச்சினை?
ஐயா எம் பொண்ணு எல்.கே.ஜி படிக்கிறா. நேத்திக்கு ஸ்கூல் போக 10 நிமிஷம் லேட்டாயிருச்சு. டீச்சர் 1 ரூபாய் அபராதம் போட்டுட்டாங்கய்யா.
அப்படியா? உடனே நம்ம மாவட்ட செயலாளருகிட்ட சொல்லி, ஸ்கூலுக்கு எதிரா பிரமாண்ட கண்டனக் கூட்டம் நடத்திருவோம். சரி... அப்புறம்..?
எங்க வீட்டு முன்னால சாக்கடை ஒண்ணு இருக்குங்க. அதுல பக்கெட்ல சேருகிற தண்ணிய கொட்டுவோம். இவங்க என்னடான்னா அதுல சிமிண்டு சிலாப் போட்டு சுத்தமா மூடி வெச்சிருக்கிறாங்க. நாங்க அரை கி.மீ நடந்து வந்து கழிவுத் தண்ணிய கொட்ட வேண்டிருக்குங்க...
அட... இவ்ளோ கஷ்டமா? நகராட்சி என்ன செய்யிது. இந்த அராஜகத்த கண்டிச்சி, உடனே மாவட்ட அளவுல நிர்வாகிங்கள வெச்சி ஒரு போராட்டம் நடத்திடுவோம்.

உங்க கோரிக்கை என்ன சொல்லுங்க?
அம்மா... இந்த மாதிரி... நேத்திக்கு எங்க ஊருக்கு வழக்கமா 8.30க்கு வரவேண்டிய பஸ் 8.28க்கே வந்துச்சுங்க. அதுனால எவ்ளோ பேர் கஷ்டப்பட்டாங்க தெரியுமா?
இது தப்பாச்சே! உடனே போக்குவரத்துக் கழக பணிமனை முன்னால போராட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சிடுவோம். கவலப் படாதீங்க.
ரொம்ப நல்லதும்மா. எங்க நகர்மன்றத் தலைவர்ட்ட பேசுறப்போ, இந்த... எதோ... 2ஜி ... ஸ்பெக்ட்ரம்... ஊழல்...அது இதுன்னு போராட்டம் பண்ணலாம்னு ஒருத்தர் பேசினாராம்... அதான்... எங்க விஷயத்த என்னத்த கவனிக்கப் போறாங்களோன்னு நெனச்சேன்..
ஐயா... கொஞ்சம் சும்மா இருங்கீங்களா..! ஊழல் அது இதுன்னு...அதெல்லாம் ஒரு விஷயமா? இப்போதான் கூட்டணி அப்டி இப்டின்னு பேசிட்டிருக்காங்க... நீங்க வேற...
..?! சரி சரி... யோவ் பி.ஏ. மீடியாக்கெல்லாம் உடனே அம்மா பேர்ல அறிக்கய ரெடி பண்ணுங்கப்பா!
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix