ஞாயிறு, ஆகஸ்ட் 02, 2009
ஸ்ரீ.ஸ்ரீ. ரவிசங்கருடன் ஒரு சந்திப்பு
ஸ்ரீ.ஸ்ரீ. ரவிசங்கருடன் ஒரு சந்திப்பு
வாழும் கலை என்ற அமைப்பை நடத்தி வரும் குருஜி ரவிசங்கர் சென்னை வந்திருந்தார். ஒரே வருடத்தில் அடுத்தடுத்து மூன்று கிரகணங்கள் வருவதை ஒட்டி ஏதேனும் இயற்கை அசம்பாவிதங்கள் நிகழக்கூடும் என்று பல்வேறு தரப்பில் சொல்லப்படுவதால், ஆன்மிக விழிப்பு உணர்வு நிகச்சியை உண்டாக்க இவர் முயன்று வருகிறார். அதற்காக, தமிழகத்தின் பஞ்ச பூத ஸ்தலங்கள், மற்றும் சில முக்கியமான ஆலயங்கள் ஆகியவற்றுக்குச் சென்று தியானம், பூஜை, பாட்டு என்று ஏற்பாடு செய்து வருகிறார். அவரை சந்திக்கலாம் என்ற எண்ணம் இருந்தது அடியேனுக்கு. ஆகஸ்ட் 2, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உத்தண்டி காப்பர் பீச் அவென்யு பகுதியில் இருக்கும் குரு க்ருபா என்ற பங்களாவில் தங்கியிருந்தார். மாலை 7 மணிக்கு நேரம் கொடுத்திருந்தார். அவரை சந்தித்து ஆன்மிக விஷயங்கள் குறித்து பேசினேன். அதற்கு சற்று முன்னர், கம்யூனிஸ்ட் கட்சியின் (தமிழ் மாநில) முக்கியத் தலைவர் தோழர் ......... பார்த்துவிட்டு படியிறங்கிச் சென்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
சக்தில என்ன பேசினீங்கன்னு கவர் ஸ்டோரியா போடுவீங்களா, இல்ல... தனிப்பட்ட சந்திப்பா? அதுசரி, யார் அந்தத் தோழர்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா? இல்ல, ரகசியம், பரம ரகசியமா/
anyway
வாழ்க வளமுடன்
பா. சுவாமிநாதன்
கருத்துரையிடுக