








கோல்கத்தா சவுத் இந்தியா க்ளப் மற்றும் பாரதி தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்திய வரவேற்பு விழா!
கோல்கத்தாவில் இயங்கிவரும் பாரதிய பாஷா பரிஷத் என்ற உயரிய இலக்கிய அமைப்பு இந்த ஆண்டில் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு சாதனா சம்மான் என்ற விருதையும் அடியேனுக்கு யுவபுரஸ்கார் தேசிய இலக்கிய விருதையும் அளித்தது. அதற்காக சென்னையில் இருந்து கோல்கத்தா சென்ற எங்களுக்கு கோல்கத்தா சவுத் இந்தியா க்ளப்பும் பாரதி தமிழ்ச் சங்கமும் இணைந்து வரவேற்பு விழாவை நடத்தின. அருமையான நிகழ்ச்சி. கோல்கத்தா வாழ் தமிழர்கள் மட்டுமல்லாது, மலையாளிகள் மற்றும் கன்னடர்களும் வந்திருந்தார்கள். குழந்தைகள் பூச்செண்டு கொடுத்து, பூத்தூவி வரவேற்றார்கள். கோல்கத்தாவில் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகள் இருவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்கள்.
மறுநாள் 18.04.09 அன்று கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் புகழ்பெற்ற ஒரிய எழுத்தாளர் ரமாகாந்த் ரத் அடியேனுக்கு பரிசு வழங்கினார். அடுத்து அடியேன் பேசினேன். அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இங்கே...
கருத்துரையிடுக