

சூரிய கிரஹணத்தின்போது கண்ட வித்தியாசமான காட்சி இது. வீட்டின் முன் உள்ள மர நிழலில், இலைகளுக்கு இடையே பாய்ந்து வந்த சூரிய ஒளி, வழக்கத்துக்கு மாறாக பிறைச் சந்திரன் போல் தெளிவாக இருந்தது. அது, சந்திரனால் சூரியன் மறைக்கப்பட்டு, சூரியன் எப்படித் தெரிகிறானோ அப்படியே நிழலும் இருந்தது வியப்பானது. முன்னெல்லாம், ஒரு கண்ணாடியை வாசலில் வைத்துக் கொண்டு, அதன் ஒளியை வீட்டுக்குள் பாயச் செய்து, அதை ஒரு திரையில் அல்லது சுவரில் விழச் செய்து, கிரஹணத்தின் அளவைக் கண்டு களிப்போம். அதுபோல், இந்த மர நிழலில் உள்ள கிரஹணத்தின் அளவைப் பாருங்களேன்!