சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

திங்கள், மார்ச் 30, 2009

பிராணநாதா டூ புறம்போக்கு!

பிராணநாதா டூ புறம்போக்கு!


டமில் பாட்டு - டம்மி யாச்சு!



பாட்டுக் குள்ளே படம் ஒளிஞ்ச



காலம் அப்பங்க!



துட்டுக் குள்ளே மெட்டு ஒளிஞ்ச



காலம் இப்பங்க!





பிராண நாதா என்று கொஞ்சும்



காலம் ஒண்ணுங்க!



புறம் போக்கு என்று திட்டும்



காலம் மண்ணுங்க!





பள்ளிப் பிள்ளை வாயில் கூட



பாட்டு ஒலிக்குது.



முள்ளு போல தெச்ச தால



உள்ளம் வலிக்குது.





போற போக்கில் வாழும் கலை



பாட்டில் இருந்துச்சு.



புறம் போக்கு என்ற திட்டால்



மனசு வருந்துச்சு.





பாஸ்ட் புட்டா வாழ்க்க யத்தான்



பார்க்க வேணுமா?



வேஸ்ட் லேண்டு என்று சொல்லி



வெறுக்க வேணுமா?





பாட்டு மூலம் புத்தி மதி



படிச்ச நாடுங்க!



காட்டுக் கத்தல் பாட்ட விட்டு


கவித நாடுங்க!





பட்டுக் கோட்ட பாட்டு போல



கோட்ட கட்டுங்க!



பாட்டி னாலே சரித்தி ரத்தில்



பேர நாட்டுங்க!





கண்ட கண்ட வார்த்த யெல்லாம்



கத்துக் காதீங்க!



கண்ணி யமா பாட் டெழுதி



கவிஞ ராகுங்க!





- செங்கோட்டை ஸ்ரீராம்
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix