சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

ஞாயிறு, ஆகஸ்ட் 05, 2012

சாதி வெறியாளர் யார்?

2012 ஆகஸ்ட் 1: செங்கோட்டை சென்றிருந்தபோது, ஆற்றங்கரைத் தெருவில் எங்கள் இல்லத்தில் இருந்து 4 வீடு தள்ளியிருக்கும் பெரியவர் செங்கோட்டை வி.ஜனார்த்தனன் ஐயா வீட்டுக்கு வழக்கம் போல் சென்று கதவைத் தட்டினேன். காலை நேரம் எழுந்து மெதுவாக வந்து அமர்ந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். இவர், பணி ஓய்வு பெற்ற நல்லாசிரியர். அகவை 82 தொட்டவர். செங்கோட்டை தொடர்பான ஊர்க் கதைகளை, சுதந்திரப் போராட்ட நினைவுகளை, திருவிதாங்கூர் சமஸ்தான சங்கதிகளை என் சிறுவயது முதல் எனக்குச் சொன்னவர் இவர். இவரிடம் இருந்து கட்டுரைகளை மலையாள மொழிபெயர்ப்புகள் பலவற்றினை கேட்டுப் பெற்று மஞ்சரி இதழ்களில் பிரசுரம் செய்திருக்கிறேன். வாசகர் விரும்பும் அருமையான எழுத்து நடை இவருக்கு!
இம்முறை எங்கள் பேச்சு பழைய பள்ளிக்கூடங்கள், அந்நாளைய படிப்பு, கல்லூரி என்று வந்தது. அப்போது வாஞ்சிநாதனின் படிப்பு பற்றியும் பேச்சு வந்தது. நானும்கூட ஒரு முறை வாஞ்சிநாதன் குறித்த கட்டுரையினை எழுதியபோது, திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.ஆனர்ஸ் படிப்பில் வாஞ்சிநாதன் படித்ததாக எழுதியிருந்தேன். கிடைத்த தகவல் அப்படி. ஆனால், இதை கடுமையாக மறுத்தார் ஐயா வி.ஜனார்த்தனன். 1900 ஆம் ஆண்டுகளில் செங்கோட்டையில் மலையாளம் சொல்லித் தரும் பள்ளி ஒன்று இருந்தது. அதற்கு மலயான்ஸ்கூல் என்று பெயர். நாங்களும் துவக்க காலத்தில் அப்படித்தான் அழைத்தோம். இன்றும் இந்தப் பள்ளி இருக்கிறது. ஆனால் வாஞ்சிநாதன் பெயரில். காரணம் வாஞ்சியின் வீட்டுக்கு அருகே இருந்த பள்ளி. வாஞ்சி பயின்ற பள்ளி. அதனால் அவன் பெயரே இதற்கு இடப்பட்டுள்ளது. இது அல்ல விஷயம். அன்றைய நாள்களில் பள்ளிக் கல்வி முடிப்பதே பெரும்பாடு. அதையும் மீறி கல்லூரிக்குள் காலெடுப்பதெல்லாம் கனவுதான் பலருக்கு. பொருளாதார ரீதியில் மிகப் பெரும் நிலையில் இருப்போரே கல்லூரியில் காலெடுத்து வைக்க முடியும். ஏழைக் குடும்பத்தில் பிறந்த வாஞ்சியால் திருவனந்தபுரம் கல்லூரியில் நுழைந்திருக்கவே முடியாது. இது தவறான பதிவு. இதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை. யார் இப்படிக் கிளப்பியது என்று தெரியவில்லை. வாஞ்சி அந்தக் கல்லூரிப் படிப்பு வயதில் இங்கே புனலூரில் காட்டு இலாகாவில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான்.... இப்படியாகப் பேச்சு போனது.
வீட்டுக்கு வந்து மாடியில் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி, வாஞ்சிநாதன் குறித்து இணைய தளங்களில் எழுதப் பட்டிருந்த துர்பிரசாரங்கள் குறித்து யோசித்தேன். வாஞ்சி ஒரு சாதி வெறியாளன் என்று நிறுவுவதற்காக ஒரு கதையைக் கட்டியிருக்கிறார்கள். ஆஷ் துரையை 'ரொம்ப நல்லவன்’ ஆக்க மிகவும் முயற்சி செய்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் வரலாறு பெரும்பாலும் கிறிஸ்துவ ஆதிக்க மேல்நாட்டு மக்களின் பாதிப்பில் எழுதப் பட்டவை. இங்குள்ள வரலாறுகள் பெரும்பாலும் கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப, அதற்குத் தகுந்தபடி புனைந்து எழுதப் பட்டவை. பரப்பப் பட்டவை. அதில் ஒன்று, வாஞ்சிநாதன் விஷயத்திலும் நடந்துள்ளது. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தை நசுக்க, சுதந்திர வேட்கை கொண்ட வீரர்களை மனிதாபிமானமே சிறுதும் இல்லாமல் படாதபாடு படுத்திய ஆஷ் துரையை நல்லவனாகச் சித்திரிக்க, வாஞ்சி பலியாடு ஆக்கப்பட்டான்.
கதை இதுதான்... பிரசவ வலியால் துடித்தபடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணை அக்ரஹாரத்தின் வழியே விட மறுத்தானாம் வாஞ்சி. அப்போது ஆஷ் துரை அங்கே வந்து அக்ரஹாரத்தின் வழியே அந்தப் பெண்ணை அழைத்துச் செல்ல வழி செய்தானாம்... இதனால் ஆஷ் துரை மீது வஞ்சம் வைத்த வாஞ்சி, அவனை சுட்டுக் கொன்றானாம்... இப்படியொரு கதையைப் புனைந்தவர்களைக் காட்டிலும், அதைச் சொல்லிக்கொண்டு திரியும் நபர்கள்தானே சாதி வெறி பிடித்தவர்கள்! கட்டிய மனைவி பிரசவ காலத்தில் தவிப்பதையும், மாமனார் வீடு சென்ற அவளைக் காணவும் பொழுதின்றி, தாம் மேற்கொண்ட பாரதமாதா சங்கத்தின் விடுதலைப் போராட்டப் பணிகளில் முழு ஈடுபாடு காட்டிய சிற்றிளைஞன் வாஞ்சிக்கு இப்படியோர் அவப்பெயர் சூட்ட வேண்டுமானால், இவர்களின் உள்ளத்திலும் அறிவிலும் சாதி வெறி எப்படிப் புரையோடிப் போயிருக்க வேண்டும்!?
இந்தக் கதையில் இது எந்த அக்ரஹாரத்தில் நடந்தது என்று குறிப்பில்லை. பிரசவ வேதனையில் அந்தப் பெண் வந்தபோது, சரியாக அதே நேரம் ஆஷ் துரையும் வந்தது எப்படி என்று கூறவில்லை. இவை எல்லாவற்றையும் விட முக்கியமான அம்சம், ஊரின் பூகோள அமைப்பைப் புரிந்துகொள்ளாமல் விடப்பட்டிருக்கும் கதைதான்!
செங்கோட்டை அந்தக் காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. அதற்கும், பிரிட்டிஷ் இந்தியாவுக்கும் தொடர்பு இல்லை. 1956ல் மொழி வாரி மாகாணங்கள் அமையப் பெற்ற போதுதான், கன்னியாகுமரி, நாகர்கோவில் சில பகுதிகள், செங்கோட்டை ஆகிய பகுதிகள் தமிழகத்துடன் இணைந்தன. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சமவெளிப் பரப்பாக இருந்தாலும், சமஸ்தானத்துடன் இருந்த பகுதி என்பதால் அங்கே பிரிட்டிஷ் அதிகாரிகள், ராணுவத்தினர் நுழைவதற்கு அனுமதி தேவை. திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் ஒரு உடன்படிக்கை இருந்தது பிரிட்டிஷாருக்கு. தேடப்படும் சுதந்திரப் போர் வீரர்கள் சமஸ்தானத்தில் எங்காவது ஒளிந்திருந்தால் அவர்களைப் பிடித்து பிரிட்டிஷார் வசம் ஒப்படைக்க வேண்டும். இது உடன்படிக்கை. மற்றபடி, திருவிதாங்கூர் ஒரு சுதந்திரமுள்ள, அதே நேரம் அடிமைப்பட்ட நிலை என இரண்டுங்கெட்டான் நிலையில் இருந்தது.
இத்தகைய சூழலில், திருநெல்வேலி சப்-கலெக்டர் அந்தஸ்தில் இருந்த அதிகாரி ஆஷ் துரை, தென்காசி வரை மட்டுமே வர இயலும். குற்றாலத்தில் குளிக்க உரிமை இருந்தது. அதைத் தாண்டி அவர்கள் சமஸ்தானப் பக்கம் வரவும் முடியாது. இன்றும் செங்கோட்டை நகருக்கு ஒரு கி.மீ. வெளியே பிரானூர் பார்டர் என்று ஒரு பகுதி உள்ளது. அதுதான் சமஸ்தானத்தின் நுழைவாயில். பார்டரைத் தாண்டி ஆங்கிலேயர்கள் வர இயலாது. அவர்களுக்கு ஆட்சி அதிகாரமும் கிடையாது. அவ்வாறு இருக்க, வாஞ்சிநாதன் இருந்த திருவிதாங்கூர் ஆட்சிக்கு உட்பட்ட செங்கோட்டையில் ஆஷ் துரை கட்டளை இட்டு ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை பிரசவத்துக்காக அக்ரஹாரம் வழியே செல்ல வைத்தார் என்று புனையப்பட்ட கதை எவ்வளவு மோசமான சாதி வெறியில் உமிழப் பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இன்றைய செங்கோட்டை ஊரின் அமைப்பில், அக்ரஹாரங்கள் இருந்த பகுதியில் நீங்கள் நின்று பாருங்கள் புரியும். மொத்தம் ஏழு அக்ரஹாரங்கள் இருந்துள்ளன. சிவன் கோவில் தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, பெருமாள் கோவிலை ஒட்டிய இரண்டு மாட வீதிகள், கிருஷ்ணன் கோவில் பின்னுள்ள ஒரு மாடத் தெரு... இப்படி. இந்தப் பகுதிகள் ஊரில் இருந்து ஒதுக்குப் புறமாக தனித்திருக்கும். ஊரின் பிரதான கொல்லம் சாலை அக்ரஹாரங்களைச் சுற்றி வெளியே செல்லும். ஊருக்கு வெளிப்புறமாக தனித்திருக்கும் அக்ரஹாரங்கள் என்பதால், மருத்துவமனைகள் இருக்கும் செங்கோட்டை நகருக்குச் செல்வதற்கு நீங்கள் அக்ரஹாரங்களை அவசியம் கடந்துதான் செல்ல வேண்டும் என்ற நிலை இல்லவே இல்லை. அப்படி இருக்கும்போது, எங்கிருந்து அந்த கீழ்ச் சாதிப் பெண் வந்தாள் என்ற விவரம் யாராலும் சொல்லப் படவுமில்லை. அந்தப் பெண்ணை மருத்துவம் பார்க்க அக்ரஹாரம் வழியேதான் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவசிய நிலை இல்லாத போது, எதற்காக அப்படி அழைத்துச் சென்றார்கள் என்ற குறிப்பும் இல்லை.
இப்படி எல்லாம் சிறுமைக் கற்களை எய்து, ஒரு சுதந்திரப் போராட்ட வீரனை மட்டும் இந்த சாதி வெறியர்கள் கொச்சைப் படுத்தவில்லை, இந்திய சுதந்திரப் போராட்டத்தையே கொச்சைப் படுத்துகிறார்கள். காரணம், இந்திய சுதந்திரத்தால், கிறிஸ்துவ மதம் பரப்பும் செயல் தடைப் பட்டதாக எண்ணினார்கள் அவர்கள். சுதந்திரப் போராட்டத்தில் சாதி பார்த்து பாரத மாதா சங்கம் அமைக்கவில்லை. 1911ல் மாண்டு போன வாஞ்சிநாதனும், அவனுடன் கதை முடிந்துபோன பாரத மாதா சங்கமும் இத்தகைய சிறுமதியாளர்கள் வளர்த்துவிட்ட சாதி வெறிச் சங்கமுமில்லை, சாதி வெறி மனிதமும் இல்லை.
மாவீரன் மாடசாமியின் வரலாற்றைப் படியுங்கள். கல்கி எழுதிய பொங்குமாங்கடல் சிறுகதையைப் படியுங்கள். தினமணியின் முதல் ஆசிரியர் தென்காசி எஸ். சொக்கலிங்கத்தின் வரலாற்றைப் பாருங்கள். எத்தகைய சுயநலமற்ற தியாகத் திருவுள்ளங்கள் இந்த சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களே இத்தகைய புனைகதைகளைக் கேட்டு எழுதுவது வேதனையிலும் வேதனை. செண்பகராமன் பிள்ளை என்ற மாவீரன் ஜெர்மனியின் ஹிட்லரைக் கலங்கடித்தவர். நேதாஜிக்கு இந்திய தேசிய ராணுவம் அமைக்க உந்து சக்தியாக இருந்தவர். ஜெய்ஹிந்த் கோஷம் கொடுத்த புண்ணியவான். அடிமை இந்தியாவில் என் உடல் அடக்கம் செய்யப் படக் கூடாது, என் உடலின் அஸ்தி கூட அங்கே விழக்கூடாது என்று சபதம் இட்ட வீரர். செண்பகராமன் இறந்து வெகு காலம் வரை அவரது மனைவியால் பாதுகாக்கப்பட்டிருந்த அஸ்தி, இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் இந்திய தேசியக் கொடி பறந்த கப்பலில் எடுத்துவரப்பட்டு கரமனை ஆற்றின் கரையில் சுதந்திர இந்தியாவில் தூவப்பட்டது என்பதைக் கேள்விப் படும்போது எவ்வளவு சிலிர்ப்பும் மரியாதையும் நமக்கு வரவேண்டும்?! ஆனால்... சாதி வெறியின் உச்சத்தில் திளைத்திருக்கும் சமுதாயத்தில் செண்பகராமனின் வீரம் ஏன் கொண்டாடப் படாமல் போனது என்பது தெளிவாகத் தெரிகிறதே!
சுதந்திரம் பெற்ற பின்பு இப்படியெல்லாம் சாதிப் பிரிவினை பேசி இன்று இந்தியா கண்ட பலன், கிறிஸ்துவ மயமாக்கலும், தாழ்த்தப் பட்ட இனம் என்று சொல்லிச் சொல்லி சர்ச்சுகளுக்கு பேரம் பேசப்படுவதும்தான்!
வாழிய பாரதி மணித் திருநாடு! செண்பகராமா ஜெய்ஹிந்த்!!
Unknown சொன்னது…

அன்னியக் கைக்கூலிகள்,யாரைத்தான் விட்டு வைத்தார்கள்? சீனப்படை பாரதத்திர்க்குல் நுழைந்தால் வரவேர்ப்பேன் என்று முழக்கமிட்டவர்களுக்கும், ஜெரூசலேமையும், மெக்காவையும் புண்ணிய பூமி என்று கருதுபவர்களுக்கு வாஞ்சியும், செண்பகராமன் பிள்ளையும் எட்டிக்காய் தானே? தூற்றுவதும், துஷ் பிரச்சாரம் செய்வதும்தானே இந்த மூதேவிகளின் பாரம்பரியம்.

Arun Ambie சொன்னது…

வாஞ்சிநாதன் சிறுமைப் படுத்தப்படுவதற்குக் காரணம் சாதி வெறியா? எந்த ஊரில் ஐயா இருக்கிறீர்கள்? அவர் சிறுமைப்படுத்தப்பட்டு சாம்பல்துரை தூக்கிப்பிடிக்கப்படக் காரணம் மதப் பிரச்சார வெறியும், பதவி வெறியும் இவற்றில் "மஞ்சள் குளிக்கும்" உருப்படாதவைகளுமே. இந்த அரிசனப் பெண் அக்ரஹார வழிபோன புனைகதையைப் பரப்புவோர் பெரும்பாலும் கிறிசுதவர்களும் இசுலாமியர்களும் அவர்களுக்கு அடிவருடும் ஓட்டு/பணப் பொறுக்கிகளுமே ஆவர். இந்து மதத்தை மட்டுமே எதிர்க்கும் பகுத்தறிவுப் பதர்கள் ஓட்டுப் பிச்சைக்காக பல்லிளித்துக் கொண்டே பின்னால் போகின்றன. தேசபக்தி மிக்க ஹிந்து மக்கள் யாரும் வாஞ்சியை வஞ்சித்துப் பேசவில்லை. தேசத்துக்காகப் பாடுபட்டோர், முன்னோர் மூத்தோரெல்லாம் மூடப்பேர்வழிகள் என்ற ஐரோப்பிய ஆபிரகாமியர்களின் அறிவழிப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் மஞ்ச மாக்கான்களும் அவர்களின் அடியொற்றித் திரியும் முட்டாள்களுமே இத்தகைய ஈனச்செயல்களில் ஈடுபடும் இழிபிறவிகள்.

சீனு சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Boston Bala சொன்னது…

நன்றி

Boston Bala சொன்னது…

எஸ் ராமகிருஷ்ணன் எங்கே அப்படி எழுதி இருக்கிறார்? எனது இந்தியாவிலா?

நான் படித்த சுட்டி: http://malaikakitham.blogspot.com/2012/06/blog-post_8756.html

Srinivasan Sampathkumar சொன்னது…

Dear Sriram, Excellent Post. I have been reading many of your posts through FB and am quite impressed by the way you write.

Apart from appreciating your style and flair, more importantly, you have courageously written the facts about the greatest martyr Veera Vanchinathan - whose selfless sacrifice never got the real appreciation it deserved, though he never did that in search of one.

Long live the glory of this great son of Maha Bharat Vanchi

Thanks to you again for this article. Incidentally I posted an article on Vanchinathan on my blog in June 2011, and typically an anonymous bloke posted similar comment. Do see my blogpost : http://www.sampspeak.in/2011/06/one-hundred-years-17th-june-lest-we.html

With regards - S. Sampathkumar

குமார் சொன்னது…

//எங்கிருந்து அந்த கீழ்ச் சாதிப் பெண் வந்தாள் என்ற விவரம் யாராலும் சொல்லப் படவுமில்லை //

இதை “எங்கிருந்து அந்த கீழ்ச் சாதிப் பெண் வந்தார்..” என்று கூட எழுதியிருக்கலாமே.. இதுக்கும் சாதி வெறிக்கும் எந்த இணைப்பும் இல்லைங்க.. சொல்லிப்புட்டேன்..

Senkottai Sriram சொன்னது…

குமார் சொல்வது போல் பெண்மைக்கு மரியாதை தரும் நம் மண்ணில் அப்படியே எழுதியிருக்க வேண்டும். அதை அவ்வாறே திருத்திக் கொள்கிறேன்! சுட்டிக் காட்டியதற்கு நன்றி!

பெயரில்லா சொன்னது…

வீர வாஞ்சியைப் பற்றி இவர்கள் எளிதாகக் கற்பனை செய்ய ஒரு காரணம் அவர் சட்டைப் பையில் வைத்திருந்த கடிதமாகக் கூட இருக்கலாம். அதில் சனாதன தர்மத்தை மிதிக்க எத்தனிப்பவரை சகியாமலேயே அவர் இக்காரியத்தில் இறங்கியிருக்கிறார் என்பதாயும் இருக்கலாம். மேலும், நம் சொந்த நாட்டின் புல்லுருவிகளுக்கு இவர் தியாகம் புரியாது, வ.வே.சு அய்யரின் தொண்டு தெரியாது, ஏனென்றால் இவர்கள் பிராமணர்கள், எனவே ஆகாது. ஆஷ் துரையின் பேரன் வீர வாஞ்சியின் நினைவு தின விழாவில் கலந்து கொண்டு "வாஞ்சியாரின் தியாகத்திற்குத் தலைவணங்குகிறேன்" என்றிருக்கிறார். புல்லுருவிகளுக்கு வரலாறும் தெரியாது, தேச பக்தியும் கிடையாது.

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான பதிவு.
நன்றி.

Unknown சொன்னது…

காங்கிரஸ் மீதுள்ள தீராக் கோபத்தால் இராஜாஜி, காங்கிரஸை எப்படியும் அழித்தே தீரவேண்டும் என்று தீர்மானித்தார். எல்லாக் கட்சிகளையும் கூட்டுச் சேரவைத்தார். தி.மு.க. ஜெயித்தது. அது ஜெயித்தது கொள்கையினால் அல்ல. அன்றிலிருந்தது தமிழகத்திற்குப் பிடித்தது சனி.தோல்வி முகம் காட்டும்பொழுதெல்லாம் பிராமண துவேஷம் வளர்க்கப்பட்டது. இன்னும் ஓய்ந்த பாடில்லை. தமிழுக்கு பிராமணர்கள் செய்த தொண்டுகள் எல்லாம் ஒருங்கிணைத்து நூல்கள் வரவேண்டும். தமிழ் பேசுவோர் எல்லாம் தமிழர்கள் என்ற நிலையே சரியான திசைவழி.

Narendran சொன்னது…

Dear Sriram, where did you see that ? If you can send or give the link that would help us to know the exact wordings and the writer? In which S. Rama Krishnan has mentioned that as in EN INDIA I didnt see
? SO please give the evidence for the readers to see.

பெயரில்லா சொன்னது…

This is absurd

Unknown சொன்னது…

When Kumar pointed out a mistake - Without hesitating you have replied him that it will be rectified in future and also said thanks to him,HATS OFF.

Unknown சொன்னது…

kejreval pola seruppadi pattal than.... veeramani...soramani thirunthuma...

Unknown சொன்னது…

Somany true incidents are still unknown. Super

பிரேமாவின் செல்வி சொன்னது…

கீழ்சாதி, மேல்சாதி என்று எதுவுமில்லை. தாழ்த்தப்பட்ட, உயர்த்தப்பட்ட சாதிகள்தான். இந்த சொற்பிரயோகங்களில் மிகு கவனம் செலுத்துதல் நலம்.இல்லையேல் இதுவும் சாதி வெறிதான்.

 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix