சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

Wednesday, April 06, 2011

பழம்பெரும் நடிகை சுஜாதா காலமானார்


பிரபல தென்னிந்திய நடிகை சுஜாதா சென்னையில் இன்று காலமானார். 
இலங்கையில் 1952ம் ஆண்டு சுஜாதா பிறந்தார். அவரின்  தாய்மொழி மலையாளம்.இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்ட நடிகர்களுடன் சுஜாதா இணைந்து நடித்துள்ளார்.  
கமல்ஹாசனுடன் பெரும்பாலான படங்களில் நடித்துள்ளார்.அவள் ஒரு தொடர்கதை, வாழ்ந்து காட்டுகிறேன்,  விதி, அன்னக்கிளி, அந்தமான் காதலி, அவர்கள், கடல் மீன்கள், தாய் மூகாம்பிகை, மங்கம்மா சபதம், கொடிபறக்குது, உழைப்பாளி, அமைதிப்படை, பாபா, வில்லன், அட்டகாசம், வரலாறு உள்ளிட்ட படங்களில் சுஜாதா நடித்துள்ளார். 
கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த சுஜாதாவின் உயிர் சென்னையில் உள்ள அவரது வீட்டில் பிரிந்தது.Post a Comment
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix