சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

Monday, March 10, 2008

மகா சுதர்சன வழிபாடு - புத்தகம்

வணக்கம்
அடியேன் எழுதி விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள மஹா சுதர்சன வழிபாடு புத்தகம் பற்றிய தகவலை இங்குக் கொடுத்துள்ளேன்.
இந்தப் புத்தகத்தைப் பற்றி ...

உலகம் முழுவதும் முருக வழிபாடு பரவியுள்ளதுபோல் முருகனின் ஆயுதமான வேல் வழிபாடும் பரவியுள்ளது. வேல் வழிபாடு என்பது, முருக வழிபாட்டின் ஓர் அங்கம்.

உலகைக் காக்கும் கடவுளாக வேதங்கள் போற்றும் விஷ்ணுவின் கையில் உள்ள சக்கரத்தை வழிபடுவது விஷ்ணு வழிபாட்டின் ஓர் அங்கம். இதுவும் தொன்றுதொட்டு வந்துள்ளது என்பதற்கான உதாரணங்கள், வேதங்கள், ஆழ்வார் பாசுரங்கள் போன்றவற்றிலிருந்து தரப்பட்டுள்ளன. ஆண்டவன் கை ஆயுதம் எதற்காக என்பதையும், அதை வழிபடும் முறையையும் இந்நூல் எளிதாக விளக்குகிறது.


அம்பரீஷ மன்னனுக்கு உதவியது; அர்ஜுனன் உயிரைக் காத்தது, கஜேந்திரன் என்ற யானையின் உயிரைக் காத்தது உள்ளிட்ட சக்கரத்தாழ்வார் தொடர்புடைய கதைகள்... கும்பகோணம் சக்கரபாணி கோயில்; திருமோகூர் சக்கரத்தாழ்வார் கோயில் உள்ளிட்ட சுதர்ஸன வழிபாடுள்ள முக்கியத் திருத்தலங்கள்... சுதர்ஸனரை வழிபடும் முறை, சுதர்ஸன ஹோமம் செய்வதன் பலன், சுதர்ஸனரின் மகிமை, தேசிகர் அருளிய சுதர்ஸன அஷ்டகம்; சுதர்ஸன கவசம்; சுதர்ஸன ஷட்கம் போன்ற சுதர்ஸனர் சுலோகங்கள், தோத்திரங்கள் என அனைத்தும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.விலை: ரூ.35 முப்பத்தி ஐந்து மட்டும்

பக்கங்கள் : 96 ௯௬

புத்தகத்திலுள்ள ஆசிரியர் குறிப்பிலிருந்து...
Post a Comment
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix