செவ்வாய்க்கிழமை.... 10.08.2010
என் செல்போனில் ஒருவர் தொடர்பு கொண்டார். நீங்கள் செங்கோட்டை ஸ்ரீராம்
தானே! என்றார்.
ஆமாம்.. என்ன சொல்லுங்கள் என்று பதிலிறுத்தேன்.
நீங்கள் எழுதிய மகாசுதர்ஸன வழிபாடு புத்தகத்தை வாங்கிப் படித்தேன். நிறைய
தகவல்களை சேகரித்து எழுதியுள்ளீர்கள். ஆனால் அதில் ஓரிரு தவறுகள்
உள்ளன... என்றார். (புத்தகத்தின் ஆசிரியர் குறிப்பு பக்கத்தில் என்
முகவரியும் செல் எண்ணும் உள்ளன. நிறையப் பேர் இப்படி தொடர்பு கொண்டு
பேசியிருக்கிறார்கள். சிலர், சார் எங்களுக்கு சுதர்ஸன ஹோமம் செய்ய நல்ல
ஆள் யாரையாவது சொல்லுங்களேன்... என்று கேட்டிருக்கிறார்கள். சிலர்
யந்திரம் குறித்த தகவல்களைக் கேட்டிருக்கிறார்கள்... அதுபோல்தான் இதுவும்
என்றே நினைத்துப் பேசினேன்.)
அப்படியா... என்ன சார். சொல்லுங்கள். முடிந்தால் அடுத்த பதிப்பில்
சரிசெய்ய முயற்சிக்கிறேன். என்றேன்...
கஜேந்திரன் துயர் தீர்த்த சக்கரத்தாழ்வான் என்ற தலைப்பிலான விஷயத்தில்,
நீங்கள், கஜேந்திரன் நீர் பருக குளத்தில் கால் வைத்தபோது முதலை அதன்
காலைப் பிடித்துக் கொண்டதாக எழுதியிருக்கிறீர்கள்... ஆனால், படம் மட்டும்
அதன் தும்பிக்கையில் மலர் பறித்து வைத்தபடி ஓ வென அலறுவதுபோல் உள்ளது.
உண்மையில் அது இறைவழிபாட்டுக்கான மலரைத் தானே பறிக்கப் போனது. நீங்கள்
ஏன் மாற்றி எழுதினீர்கள்.... என்றார்.
சம்பவமும் அது தொடர்புடைய கதையும் ஒன்றுதான்... ஆனால், ஒவ்வொருவரும்
ஒவ்வொரு வகையில் சொல்லியுள்ளனர். நான் இந்தக் கதையின் தொடர்ச்சியாகக்
கொடுத்துள்ள பாசுரத்தை கவனியுங்கள். ஆழ்வாரின் பாடலில் அவர் சொன்ன
கருத்தைத்தான் அப்படி விரித்து எழுதியுள்ளேன்... அதனால் அதில் தவறில்லை
என்றேன்...
சரி சார்.. எனக்கு சக்கரம் என்றால், அதாவது சுதர்ஸனர் என்றால் கொள்ளை
ஆசை. அதனால்தான் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்தேன். இன்னும் நீங்கள்
நிறைய தகவல்களை சேகரித்து எழுதியிருக்கணும். சக்கரத்தைப் பற்றிய பல
தகவல்கள் விடுபட்டுப் போயுள்ளன.... என்றார்.
எனக்கு பக் என்று இருந்தது. என்ன இப்படிச் சொல்கிறார்... வைணவ மரபில்
என்ன உள்ளதோ, அவற்றில் உள்ள பெரும்பாலான தகவல்களை சேகரித்து ஓரளவு
முழுமையாக அன்றோ கொடுத்திருக்கிறோம்... என்று ஒருகணம் யோசித்தேன்.
பிறகு அவரிடம் கேட்டேன்... அப்படியா சார்.... இன்னும் என்ன வரணும் என்று
எதிர்பார்க்கிறீர்கள்... உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள்...
இயன்றால் சேர்த்து எழுதுகிறேன். என்றேன்...
சார் எனக்கு சக்கரம் மீது இவ்வளவு ஆர்வம் வரக் காரணமே, பைபிளில் வரும்
ஒரு வசனம்தான். அதில் கீழைவானில் ஒரு பறவையின் மீதேறி தேவன் கையில்
சக்கரம் கொண்டு வரும் காட்சியைக் காண் என்று சொல்லுகிறார்.... என்று
போட்டாரே ஒரு போடு!
இப்போது நான் கொஞ்சம் உஷாரானேன்.
ஓ பரவாயில்லை சார். நான் அதெல்லாம் படித்ததில்லை. இவ்வளவுதூரம்
நுணுக்கமாகப் படித்திருக்கிறீர்களே... நீங்கள் யார். உங்கள் பெயர் என்ன.
நீங்கள் என்ன செய்கிறீர்கள்.... என்று கேட்டேன்.
என் பெயர் வாசுதேவன், கோவில்பட்டியில் இருக்கிறேன். பில்டிங்
காண்ட்ராக்டர்.... என்றார்.
அவர் பேசிய விதத்திலும் சொன்ன தகவலிலும் எனக்கு நம்பிக்கை இல்லாததால்,
மேற்கொண்டு பேச எனக்கு விருப்பமில்லை.
ஓகே. சார். நீங்க பேசினதுக்கு ரொம்ப நன்றி. என்று சொல்லி போன் சுவிட்சை
ஆஃப் செய்தேன்.
இந்தச் சம்பவம் என் மண்டையைக் குழப்பிக் கொண்டிருக்க, அதே நாள் இரவே
எனக்கு விடை கிடைத்தது.... வலைத்தள உருவில்.
வாசுதேவன் என்ற ஒரு ஆள், இப்படி பைபிள் ரெபரென்ஸ் என்று சொல்லி
பேசுவாரா...? ஏன் இந்துப் பெயரில் இயங்க வேண்டும். ஆண்டாண்டு காலமாக நம்
புராணங்களில் சொல்லப்பட்டுள்ள ஒரு விஷயத்தை பைபிளில் சொல்லப்பட்டுள்ளது
என்று ஏன் கதை விட வேண்டும்? அதுவும், நூல் ஆசிரியரிடமே இப்படி ஒரு
தகவலைச் சொல்லி ஏன் குழப்ப வேண்டும்?
கீழ் வரும் செய்தியைப் படியுங்கள்...
எனக்குத் தோன்றிய விடை உங்களுக்கும் தோன்றுகிறதா என்று பார்க்கலாம்!
http://bibleunmaikal.blogspot. com/
புயலை எழுப்பும் புதிய பைபிள்.கொந்தளிக்கும் கிறிஸ்துவ அமைப்புகள்.
சிவன், கிருஷ்ணர் சிலைகளை தேவாலயத்தில் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
கத்தோலிக்க கிறிஸ்துவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது போப்பாண்டவரின் ஆசியோடு வெளியிடப்பட்டிருக்கும் புதிய பைபிள் ஒன்று.
இந்த ஒரு புத்தகத்தால் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்களிடையே மதக் கலவரம் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்திருப்பதாக, அவர்கள் அபயக் குரல் எழுப்புவது ஒட்டுமொத்த அதிர்வலையைக் கிளப்பியிருக்கிறது.
புதிய பைபிள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பின் தலைவர் ரபேலை சந்தித்துப் பேசினோம்.
"இந்து, முஸ்லிம் மதங்களில் உள்ள நல்ல கருத்துக்களை எடுத்துக் கொண்டு, நமது சமூகம் ஒற்றுமையாக இருக்கும் வகையில் அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்என ரோமாபுரியில் நடந்த இரண்டாம் வாடிகன் சங்கத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதையொட்டி வெளியான இந்தப் புதிய பைபிள், கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மனதைப் பெரிதும் புண்படுத்தியிருக்கிறது. இதனை இந்து மதப் பெரியவர்கள் படித்தால் கொதித்துப் போவார்கள்'' என்றார் அவர்.
`மேலும் விளக்கமாகக் கூறுங்கள்' என்றோம் நாம்.
"வாடிகனில் உள்ள போப் 16-ம் பெனடிக்ட், இந்த ஆண்டை இயேசுவின் புனித சீடர்களில் ஒருவரான புனித பவுல் ஆண்டாக அறிவித்துள்ளார்.
இதையொட்டி, கடந்த ஜூன் மாதம் மும்பை பேராயர் ஆஸ்வால் கிரேசியஸ் என்பவர், மிகப் பெரிய பதிப்பக நிறுவனமான செயிண்ட் பால் மூலம், `தி கம்யூனிட்டி பைபிள்' என்ற தலைப்பில் 2,271 பக்கமுள்ள புதிய பைபிள் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சுமார் முப்பதாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்ட இந்தப் புத்தகம் தற்போது தேவாலயங்களில் விறுவிறுப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
இதன் தமிழ்ப் பதிப்பை அச்சிடும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தபோது மிகவும் நொந்து போய்விட்டோம்.
அதேபோல, பல மாவட்டங்களில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு தங்களது மனவருத்தத்தையும் தெரிவித்தனர்'' என்றார் ரபேல்.
"இந்தப் புதிய பைபிள் முழுக்க, முழுக்க இந்து மத வேத நூல்கள் மற்றும் இந்து மதக் கடவுள்களை மேற்கோள்காட்டி எழுதப்பட்டுள்ளது. இந்திய கலாசாரத்தைத் தழுவி இது எழுதப்பட்டுள்ளதாக இதன் ஆசிரியர் அருட்தந்தை அகஸ்தீன் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இந்திய வேதநூல் என்ற பெயரில் இந்துக்களையும், கிறிஸ்துவர்களையும் குழப்பி இந்த கம்யூனிட்டி பைபிள் வெளிவந்துள்ளது.
பைபிளில் உபநிடதம், ரிக் வேதம், மகாபாரதம், யோக சூத்ரா, பாகவத புராணம், நாரத பக்தி சூத்திரம், பகவத் கீதை ஆகியவை மேற்கோள்காட்டப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக, பைபிளின் தொடக்க நூல் என்ற பகுதியில் 32-வது அதிகாரத்தில் யாக்கோபு கடவுளிடம் சண்டையிடுதல் என்ற பகுதியில், அந்த சம்பவத்தை மகாபாரதத்தில் அர்ஜுனன் கடவுளிடம் சண்டையிடுவதற்கு ஒப்பிட்டுள்ளனர். இந்துக் கடவுளை கிறிஸ்துவ கடவுளுடன் ஒப்பிட்டுள்ளனர்.
குரானின்படி ஆபிரகாம் (இப்ராஹீம்), யாக்கோபு (யாகூப்) ஆகியோரை இறைத்தூதர்களாக கருதும் முஸ்லிம்களின் மனதை இது புண்படுத்தாதா?
அதேபோல், எகிப்தில் பத்து பெருந்துன்பங்கள் என்ற பகுதியில் மன்னன் பாரவோன், அடிமைகளாக இருந்த இஸ்ரேல் மக்களை விடுதலை செய்ய மறுக்கிறான். மூர்க்க குணம் கொண்ட மனிதனாக பாரவோன் இருந்ததைத் துரியோதனனோடு ஒப்பிட்டுள்ளனர்.
பைபிளில் செங்கடல் இரண்டாகப் பிளந்து கடலின் நடுவே, பாதை ஏற்பட்டு இஸ்ரேல் மக்கள் கடந்து செல்வதை இந்து மதநூலான நாரத பக்த சூத்ராவுடன் ஒப்பிட்டு இதுதான் மறுபிறவி எடுப்பது, முக்தி அல்லது மோட்சம் என்றும் புதிய கண்டுபிடிப்பாக புதிய பைபிளில் எழுதியுள்ளனர்.
மறுபிறவி, அவதாரம் ஆகியவற்றில் நம்பிக்கையில்லாத கிறிஸ்துவர்களுக்கு இது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த பைபிளில் ஓர் இடத்தில் கடவுளுக்குரிய மனிதர்கள் உயர்ந்தவர்களாகவும், மற்றைய கடவுள் பற்றுள்ளவர்கள் சாதாரண மனிதர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இது சரியானதுதானா?
பகவத் கீதையில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள் இயேசுவின் வார்த்தைகள் என்று நியூ கம்யூனிட்டி பைபிளில் எழுதியவர்கள் சொந்தம் கொண்டாடுவதை இந்துக்கள் எப்படி ஏற்பார்கள்?
பைபிளில் திருப்பாடல்கள் ஐந்தாம் அதிகாரத்தில், `பாதுகாப்பிற்காக மன்றாடல்' என்ற தலைப்பில் உள்ள பகுதியை காயத்ரி மந்திரத்துடன் ஒப்பிட்டுள்ளனர்.
பைபிளில் மத்தேயு எழுதிய நற்செய்தி 13_வது அதிகாரத்தில், இயேசு உவமை வழியாகப் பேசியதை சக்தி வாய்ந்ததாகவும்,
இந்த உவமைகளை ராமகிருஷ்ண பரமஹம்சரின் போதனையுடன் ஒப்பிட்டும், பரமஹம்சரின் போதனைக் கதைகள் சாதாரண கதைகள் என்றும் இயேசு குறிப்பிட்டுள்ளது சக்தி வாய்ந்தவை என்றும் எழுதியுள்ளனர். இது நியாயமா?
இதையெல்லாம்விட, கம்யூனிட்டி பைபிளின் 1645-ம் பக்கத்தில் இந்திய உடையில் மேரி மாதாவையும் அவரது கணவர் சூசையப்பரை வேட்டி கட்டிய ஓர் இந்திய விவசாயி போலவும் படம் வெளியிட்டுள்ளனர்.
இந்தப் படம் மேரிமாதா குழந்தை இயேசுவுடன் எகிப்துக்கு ஓடிச் செல்வதை சித்திரிக்கும் படம். இந்தப் படத்தால் இந்தச் சம்பவம் ஏதோ இந்தியாவில் நடந்ததைப் போல் ஓர் எண்ணத்தைத் தோற்றுவிக்கும்.
ஆனால், இதே பைபிளில் இதற்கு இரண்டு பக்கம் தள்ளி, இயேசு காஷ்மீரில் வாழ்ந்தார், அவருக்கு கல்லறை உண்டு என்ற வாதத்தை மறுத்துள்ளனர். இந்திய உடையில் இவர்களைப் பார்த்த மக்களுக்கு காஷ்மீர் பற்றிய தகவல் குழப்பத்தை ஏற்படுத்தாதா?
இப்படி புதிய பைபிள் முழுவதும் கிறிஸ்துவ மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கும் வகையிலான கருத்துக்கள் பரவியுள்ளன.
இப்படியொரு குழப்பத்தோடு இதை ஏன் வெளியிட வேண்டும்?
இந்து மதக் கருத்துக்களை ஏற்று பைபிளை வெளியிட்டுள்ளதாகக் கூறும் பாதிரியார்கள், இந்து சன்னியாசிகள் போல் காவிநிற உடைகளை அணிய வேண்டியதுதானே?
இந்துத் துறவிகள் போல், சைவ உணவை மட்டுமே சாப்பிட வேண்டியதுதானே?'' எனக் கொந்தளிப்போடு முடித்தார் ரபேல்.
இதே சங்கத்தின் செயலாளர் கிளமண்ட் செல்வராஜ் நம்மிடம், ``
கடந்த 60 ஆண்டுகளாகவே சிறிதுசிறிதாக இந்து மதத்தோடு, கிறிஸ்துவ மதத்தைப் பொருத்தி மதத்தைப் பரப்பும் வேலையில் பாதிரியார்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இது தேவையில்லாதது. அவரவர் மதங்களில் உள்ள கருத்துக்களை அந்தந்த மதத்தினர் புனிதமாக வழிபட்டு வருகின்றனர்.
அதில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம். கடந்த 1948-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டு கத்தோலிக்க பாதிரியார் ஆஞ்சலோ பெனடிக்ட், சுவாமி சுபானந்தா என்று பெயரை மாற்றிக் கொண்டு, குஜராத்தில் இந்து முறைப்படி பூஜை செய்து, இயேசுவின் வசனங்களை இந்து முறைப்படி பரப்பினார்.
இவருடன் இருந்த பாதிரியார் பீட்டர் ஜூலியா, சுவாமி சில்லானந்தா என்று பெயரை மாற்றிக் கொண்டு, மராட்டியத்தில் சஞ்சீவன் ஆசிரமம் நடத்தி வந்தார். இவரது ஆசிரமத்தில் சிவலிங்கத்தில் சிலுவையைப் பதித்திருந்தார். இது குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்.
இதுபோன்ற புதிய பைபிள், பாதிரியார்களின் விசுவாசமற்ற செயல்பாடுகள் இந்தியா முழுவதும் உள்ள பதினைந்து கோடி கத்தோலிக்க மக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளன.
இந்த கம்யூனிட்டி பைபிளைத் தயாரிக்க யாரிடமும், இவர்கள் கருத்துக் கேட்கவில்லை. இந்தப் புத்தகம் தேவையற்றது என்று அனைத்து ஆயர்களுக்கும் நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம்.
இன்னும் பதில் வரவில்லை. எனவே, இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்களின் மனதைப் புண்படுத்தும் இந்தப் புத்தகத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விரைவில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளோம்'' என்றார் உறுதியாக.
கம்யூனிட்டி பைபிள் ஏற்படுத்தப்போகும் கலகம் என்னவென்பது போகப்போகத்தான் தெரியும்.
குமுதம் ரிப்போர்ட்டர் 31.08.2008. இதழிலிருந்து
ஆதாரம்: குமுதம் ரிப்போர்ட்டர் 31.08.2008.
................................................
கிறிஸ்துவ தலைமை பீடமான வட்டிகனிலிருந்தே போப்பாண்டவரின் ஆசியோடு மாற்று பைபிளை தயாரித்து இந்துக்களை மதம் மாற்ற ஆவண செய்து வருகின்றார்கள் என்றால் புரிந்து கொள்ளுங்கள்.

http://bibleunmaikal.blogspot.
மதம்மாற்ற செய்ய மொள்ளமாரித்தனம்.
இந்தியாவில் இந்து இயேசு. |
புயலை எழுப்பும் புதிய பைபிள்.
இந்தியாவில் கிறித்துவத்தைப் பரப்பஏசுவை கண்ணணாகவும் பைபிளை கீதையாகவும் ஆக்கும் முயற்ச்சிகளில் தோல்வியும் தளர்ச்சியும் அடையப் பெற்று இப்பொழுது நடப்பில் ஏசு " அல்லா " ஆக ஆக்கப்பட்டு "பைபிள்" "ஈஸா குர் ஆன் " ஆக ஆக்கப்படும் முயற்ச்சி உலக முழுவதிலும் மலிந்து வருகிறது..
இதை இணைய தளங்களிலும் கண்கூடாக காணலாம்
கிறித்துவத்தைப் பரப்ப ஹிந்துகளிடம் ஏசு=“கிருஷ்ணன்" !!பைபிள்=”கீதை” !! என்றும் முஸ்லிம்களிடம் “அல்லா " = "கர்த்தர்" "இயேசு" “பைபிள் ="ஈஸா குர் ஆன் “ என்றும் தங்கள் மதத்தை பற்றி சரியாக அறிந்திராத பாமர ஹிந்து முஸ்லீம்களை மூளைச்சலவை செய்து கிறிஸ்துவர்களாக மத மாற்றம் செய்து வருகிறார்கள்.
கிறிஸ்துவ தலைமை பீடமான வட்டிகனிலிருந்தே போப்பாண்டவரின் ஆசியோடு மாற்று பைபிளை தயாரித்து இந்துக்களை மதம் மாற்ற ஆவண செய்து வருகின்றார்கள் என்றால் புரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவில் கிறித்துவத்தைப் பரப்பஏசுவை கண்ணணாகவும் பைபிளை கீதையாகவும் ஆக்கும் முயற்ச்சிகளில் தோல்வியும் தளர்ச்சியும் அடையப் பெற்று இப்பொழுது நடப்பில் ஏசு " அல்லா " ஆக ஆக்கப்பட்டு "பைபிள்" "ஈஸா குர் ஆன் " ஆக ஆக்கப்படும் முயற்ச்சி உலக முழுவதிலும் மலிந்து வருகிறது..
இதை இணைய தளங்களிலும் கண்கூடாக காணலாம்
கிறித்துவத்தைப் பரப்ப ஹிந்துகளிடம் ஏசு=“கிருஷ்ணன்" !!பைபிள்=”கீதை” !! என்றும் முஸ்லிம்களிடம் “அல்லா " = "கர்த்தர்" "இயேசு" “பைபிள் ="ஈஸா குர் ஆன் “ என்றும் தங்கள் மதத்தை பற்றி சரியாக அறிந்திராத பாமர ஹிந்து முஸ்லீம்களை மூளைச்சலவை செய்து கிறிஸ்துவர்களாக மத மாற்றம் செய்து வருகிறார்கள்.
கிறிஸ்துவ தலைமை பீடமான வட்டிகனிலிருந்தே போப்பாண்டவரின் ஆசியோடு மாற்று பைபிளை தயாரித்து இந்துக்களை மதம் மாற்ற ஆவண செய்து வருகின்றார்கள் என்றால் புரிந்து கொள்ளுங்கள்.
PICTURE FROM KUMUDAM REPORTER 31.02.2008 |
சிவன், கிருஷ்ணர் சிலைகளை தேவாலயத்தில் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
கத்தோலிக்க கிறிஸ்துவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது போப்பாண்டவரின் ஆசியோடு வெளியிடப்பட்டிருக்கும் புதிய பைபிள் ஒன்று.
இந்த ஒரு புத்தகத்தால் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்களிடையே மதக் கலவரம் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்திருப்பதாக, அவர்கள் அபயக் குரல் எழுப்புவது ஒட்டுமொத்த அதிர்வலையைக் கிளப்பியிருக்கிறது.
புதிய பைபிள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பின் தலைவர் ரபேலை சந்தித்துப் பேசினோம்.
"இந்து, முஸ்லிம் மதங்களில் உள்ள நல்ல கருத்துக்களை எடுத்துக் கொண்டு, நமது சமூகம் ஒற்றுமையாக இருக்கும் வகையில் அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்என ரோமாபுரியில் நடந்த இரண்டாம் வாடிகன் சங்கத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதையொட்டி வெளியான இந்தப் புதிய பைபிள், கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மனதைப் பெரிதும் புண்படுத்தியிருக்கிறது. இதனை இந்து மதப் பெரியவர்கள் படித்தால் கொதித்துப் போவார்கள்'' என்றார் அவர்.
`மேலும் விளக்கமாகக் கூறுங்கள்' என்றோம் நாம்.
"வாடிகனில் உள்ள போப் 16-ம் பெனடிக்ட், இந்த ஆண்டை இயேசுவின் புனித சீடர்களில் ஒருவரான புனித பவுல் ஆண்டாக அறிவித்துள்ளார்.
இதையொட்டி, கடந்த ஜூன் மாதம் மும்பை பேராயர் ஆஸ்வால் கிரேசியஸ் என்பவர், மிகப் பெரிய பதிப்பக நிறுவனமான செயிண்ட் பால் மூலம், `தி கம்யூனிட்டி பைபிள்' என்ற தலைப்பில் 2,271 பக்கமுள்ள புதிய பைபிள் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சுமார் முப்பதாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்ட இந்தப் புத்தகம் தற்போது தேவாலயங்களில் விறுவிறுப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
இதன் தமிழ்ப் பதிப்பை அச்சிடும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தபோது மிகவும் நொந்து போய்விட்டோம்.
அதேபோல, பல மாவட்டங்களில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு தங்களது மனவருத்தத்தையும் தெரிவித்தனர்'' என்றார் ரபேல்.
"இந்தப் புதிய பைபிள் முழுக்க, முழுக்க இந்து மத வேத நூல்கள் மற்றும் இந்து மதக் கடவுள்களை மேற்கோள்காட்டி எழுதப்பட்டுள்ளது. இந்திய கலாசாரத்தைத் தழுவி இது எழுதப்பட்டுள்ளதாக இதன் ஆசிரியர் அருட்தந்தை அகஸ்தீன் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இந்திய வேதநூல் என்ற பெயரில் இந்துக்களையும், கிறிஸ்துவர்களையும் குழப்பி இந்த கம்யூனிட்டி பைபிள் வெளிவந்துள்ளது.
பைபிளில் உபநிடதம், ரிக் வேதம், மகாபாரதம், யோக சூத்ரா, பாகவத புராணம், நாரத பக்தி சூத்திரம், பகவத் கீதை ஆகியவை மேற்கோள்காட்டப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக, பைபிளின் தொடக்க நூல் என்ற பகுதியில் 32-வது அதிகாரத்தில் யாக்கோபு கடவுளிடம் சண்டையிடுதல் என்ற பகுதியில், அந்த சம்பவத்தை மகாபாரதத்தில் அர்ஜுனன் கடவுளிடம் சண்டையிடுவதற்கு ஒப்பிட்டுள்ளனர். இந்துக் கடவுளை கிறிஸ்துவ கடவுளுடன் ஒப்பிட்டுள்ளனர்.
குரானின்படி ஆபிரகாம் (இப்ராஹீம்), யாக்கோபு (யாகூப்) ஆகியோரை இறைத்தூதர்களாக கருதும் முஸ்லிம்களின் மனதை இது புண்படுத்தாதா?
அதேபோல், எகிப்தில் பத்து பெருந்துன்பங்கள் என்ற பகுதியில் மன்னன் பாரவோன், அடிமைகளாக இருந்த இஸ்ரேல் மக்களை விடுதலை செய்ய மறுக்கிறான். மூர்க்க குணம் கொண்ட மனிதனாக பாரவோன் இருந்ததைத் துரியோதனனோடு ஒப்பிட்டுள்ளனர்.
பைபிளில் செங்கடல் இரண்டாகப் பிளந்து கடலின் நடுவே, பாதை ஏற்பட்டு இஸ்ரேல் மக்கள் கடந்து செல்வதை இந்து மதநூலான நாரத பக்த சூத்ராவுடன் ஒப்பிட்டு இதுதான் மறுபிறவி எடுப்பது, முக்தி அல்லது மோட்சம் என்றும் புதிய கண்டுபிடிப்பாக புதிய பைபிளில் எழுதியுள்ளனர்.
மறுபிறவி, அவதாரம் ஆகியவற்றில் நம்பிக்கையில்லாத கிறிஸ்துவர்களுக்கு இது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த பைபிளில் ஓர் இடத்தில் கடவுளுக்குரிய மனிதர்கள் உயர்ந்தவர்களாகவும், மற்றைய கடவுள் பற்றுள்ளவர்கள் சாதாரண மனிதர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இது சரியானதுதானா?
சிவன், கிருஷ்ணர் சிலைகளை தேவாலயத்தில் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.