வியாழன், டிசம்பர் 16, 2010

நமக்கும் ஒரு கோடி உண்டு!



எனக்கும் ஒரு கோடி என்றான் எமகாதகன்.
எப்படி எனக்கேட்டால் சொன்னான்
என் பெயர் புண்ணியகோடி!


நகைப்புக்கு இடம் தரலாம்,
ஆயின்
நகைத்து மகிழும் காலம் இதுவோ?


தினம் ஓர் விலையேற்றம்
தினக்கூலி வாழ்க்கை திண்டாட்டம்!


அப்பனே புண்ணியகோடி,
கேட்டாயடா ஒரு கேள்வி!


நடந்தது நடப்பது நடக்க இருப்பது எல்லாமே
கோடிகளின் கதைதானடா!


உனக்கு மட்டும்தான் கோடி உண்டா?

நம் எல்லோருக்கும் இருக்கிறதே ஒரு கோடி!
 
அது,
அது...


நாமெல்லாம்,
தெருக்கோடி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக