செவ்வாய், டிசம்பர் 13, 2011

புத்தூர் சுதர்ஸனர் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் காலமானார்



திருச்சி, டிச.13: திருச்சி புத்தூரில் வசித்து வந்த ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 86.  அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் சிரமப் பட்டு வந்தார். இந்நிலையில் இன்று (டிச.13) அதிகாலை 2.15க்கு அவர் ஆசார்யன் திருவடி அடைந்ததாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.திருச்சியின் புகழ்பெற்ற வழக்குரைஞர். சுதர்ஸனர் என்றும் சுதர்சனம் ஐயங்கார் என்றும் வைணவ உலகில் அழைக்கப்பட்டவர். இவருடைய தந்தையார் ஸ்ரீனிவாஸ ஐயங்கார். மிகச் சிறந்த அறிஞராகத் திகழ்ந்தவர். தந்தையின் வழியில் கிருஷ்ணஸ்வாமி ஐயங்காரும் சட்டம் முதுநிலை படித்து வழக்குரைஞர் ஆனார். தந்தையார் தொடங்கிய வைஷ்ணவ சுதர்ஸனம் என்னும் வைணவப் பத்திரிகையை வெகு காலம் நடத்தி வந்தவர்.  சமயப் பற்றால் வழக்குரைஞர் தொழிலை இரண்டாம் பட்சமாகக் கருதி சமயத் தொண்டு ஆற்றியவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை மற்றும் புத்தகங்கள் பதிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் நூற்றுக்கணக்கில் நூல்களை எழுதியுள்ளார். வைணவ கிரந்தங்கள், சமஸ்கிருத நூல்கள், தமிழ் பிரபந்தப் பாசுரங்களுக்கு விளக்கங்கள் என பல நூல்கள் இவரின் உழைப்பில் வெளிவந்துள்ளன. இதற்காக தனி அச்சுக்கூடமே வைத்து பதிப்பித்து வந்தார். தெய்வத் தமிழ் பாசுரங்கள் எளிய மக்களுக்கும் தெளிந்த நடையில் விவரணங்களோடு கிடைப்பதற்கு இவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம். திவ்யார்த்தரத்னநிதி, விசிஷ்டாத்வைத சம்ரட்சகர், திருமால்நெறி நூற்காவலர், ஸ்ரீதத்வநிர்தாரகர், வித்யாவிஷாரதா உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர் ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி ஐயங்கார்.தொடர்புக்கு:ஸ்ரீவைஷ்ணவ சுதர்ஸனம்5/3பி, புத்தூர் அக்ரஹாரம், புத்தூர், திருச்சி 17போன்: 0431 - 2773705 

5 கருத்துகள்:

  1. வழி தவறி போக இருந்த என் போன்ற சிறிய ஞானத்தனை .... திருத்தி பணி கொண்டது இவர் எழுத்துக்களே. இவரின் சாட்டையடி போன்ற சளைக்காத சாட்சியங்களால் பல உண்மைகளை தெரிந்து கொண்டேன். பத்திரிக்கை தர்மத்தை தொலைத்த இன்றைய நாளேடுகளின் நாகரீகத்தை இவர் ஆசார்யன் திருவடி அடைந்த அன்றே கண்டுகொண்டேன். இவரால் PHD வாங்கிய பல தமிழ் அறிஞர்கள் ஒரு இடத்தில் கூட இவர் பரமபத ப்ராப்தி அடைந்ததை வெளியிட இயலாது போன சோகம் மிகவும் கொடியது .. இவரின் நூல்களை அடுக்கி வைத்தாலே போதும் எதிர் வாதம் புறிகிறவர்களின் தோல்வி பயம் புரிந்து கொள்ள....

    பதிலளிநீக்கு
  2. ஆர்யத்தமிழன்7:47 PM, ஆகஸ்ட் 08, 2014

    ஸ்ரீவத்ஸனின் பதிவை படித்தவுடன் கண்கள் கலங்கிவிட்டன. ஆம் தனி ஒரு மனிதராகவே இருந்த்து ஒரு இயக்கம் செய்ய வேண்டிய பணிகளை செய்து முடித்துவிட்டார். அவரது ஞான புத்திரர்களுக்கு (நமக்கு)இழப்பு

    பதிலளிநீக்கு
  3. ஸ்ரீவத்ஸன் அவர்களின் வரிகள் கண்கலங்கவைத்தது உண்மை . தனி ஒரு மனிதராகவே இருந்து ஒரு இயக்கம் செய்யவேண்டிய பணிகளை செய்துவிட்டார். அவரது ஞானபுத்திரர்களாகிய நமக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு

    பதிலளிநீக்கு
  4. ஸ்ரீவத்ஸன் அவர்களின் வரிகள் கண்கலங்கவைத்தது உண்மை . தனி ஒரு மனிதராகவே இருந்து ஒரு இயக்கம் செய்யவேண்டிய பணிகளை செய்துவிட்டார். அவரது ஞானபுத்திரர்களாகிய நமக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு

    பதிலளிநீக்கு
  5. ஆர்யத்தமிழன்7:52 PM, ஆகஸ்ட் 08, 2014

    ஸ்ரீவத்ஸன் அவர்களின் வரிகள் கண்கலங்கவைத்தது உண்மை . தனி ஒரு மனிதராகவே இருந்து ஒரு இயக்கம் செய்யவேண்டிய பணிகளை செய்துவிட்டார். அவரது ஞானபுத்திரர்களாகிய நமக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு-

    பதிலளிநீக்கு