திங்கள், மே 09, 2011

எதற்கு அன்னையர் தினம்?



அம்மா... அம்மா...
எந் நெஞ்சில் நீங்காதிருக்க
நினைப்பதற்கும் ஓர் நாள் எதற்கு?

காலை கண்விழித்தால்... அம்மா
காலில் அடிபட்டால்... அம்மா ஆ
கணநேரம் நினைவு தப்பியிருந்தாலும்
உள்ளுக்குள் புலம்பும் சொல் அம்மா...
நிமிடம் தப்பினும்
நினைவு தப்பாது...
மனசுக்குள் ரீங்காரம் அம்மா அம்மா
நொடிப் பொழுதும் நீங்காது
நீக்கமற நிறைந்த எண்ணம் ... அம்மா அம்மா

நாம் என்ன அயல்நாட்டான் போல்
ஆண்டுக்கு ஒருமுறையா
அம்மாவைப் பார்த்து வருகிறோம்...

போங்கடா பொசக்கெட்ட பசங்களா...
அம்மாவை நினைக்க ஒரு நாளாம்..
அதற்கு இத்தனை ஆர்ப்பாட்டங்களாம்!

பொத்திப்பொத்தி வளர்த்த தாய்க்கு
ஒரு நாளை மட்டும் ஒதுக்கி
மீதி நாளெல்லாம் சுயநலப் பித்தோடு
சுற்றித் திரிவதற்கா சும்பப் பயல்களே!

இத்தோடு நிறுத்துங்கள்
இந்த அன்னையர் தினம் கொண்டாடுவதை!

இது என்ன பிறந்த நாள் போலா?

இளவயதில் உன்னைத் தாங்கியவளை
முதிய வயதில் நீ தாங்குவதை விட்டு...
இதற்கெல்லாம் நாள் பார்த்து
கொண்டாடிவிட்டு சிட்டாய்ப் பறந்து போக
இது என்ன குடும்பம் தொலைத்த
உறவு தொலைத்த உருப்படாத தேசமா?

அழுக்கு ஆங்கிலக் கலாசாரம்
அகலும் நாள் எந்நாளோ?
அந்நாளில் நிச்சயமாய்
இந்த அன்னையர் தினமும் இருக்காது
மகளிர் தினமும் இருக்காது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக