வியாழன், ஜனவரி 13, 2011

தாய் உள்ளமே!



தாய் உள்ளமே!
தந்தாய் கள்ளமே!
ஆரூர்ப் பிறந்தாய்
அயலூர் வந்தாய்
எழுத்தினை எடுத்தாய்
கதைபல வடித்தாய்
அரசியல் கலந்தாய்
காழ்ப்புணர்வு விதைத்தாய்
கட்சியைப் பிரித்தாய்
ஆட்சியைப் பிடித்தாய்
இமயமென வளர்ந்தாய்
இருக்கையில் அமர்ந்தாய்
வளமையில் சிறந்தாய்
உறவுகளை வளர்த்தாய்
விதேசிகளைப் புகழ்ந்தாய்
சுதேசிகளை இகழ்ந்தாய்
வடக்கினைக் காத்தாய்
இனத்தமிழ் இழந்தாய்
இலவசத்தை எறிந்தாய்
மெலியோரை எதிர்த்தாய்


இன்னும்...
இத்தாய் எத்தாய்
உம்மேல் பித்தாய்
யாமிருக்க...


கள்ளமே
தந்தாய் உள்ளமே!
தாய் உள்ளமே!

2 கருத்துகள்:

  1. கவிதை முத்தாய்
    என் உள்ளத்தை இழுத்தாய்
    கருத்துகள் நல்ல சத்தாய்
    இருக்கும் படி வைத்தாய்

    வாழ்த்துகிறேன் கெத்தாய்

    பதிலளிநீக்கு
  2. பேசாம நீர், எதிரணி ப்றேசார பீரங்கியாகலம்
    பட்டுக்கோட்டை பலராமன்

    பதிலளிநீக்கு