சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

புதன், ஜனவரி 26, 2011

இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டதாக நம்புகிறீர்களா?



இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டதாக நம்புகிறீர்களா?


அரசியல் சுதந்திரம் பெற்றுவிட்டதாகச் சொல்கிறார்கள்.

அது என்னமோ ஆட்சியைக் கைமாற்றிவிட்டுப் போயிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

அன்று நிர்வாக ரீதியாக ஆட்சி செய்தது - ஐரோப்பியன் - ஆங்கிலேயன்!

இன்றும் நிர்வாக ரீதியாக ஆட்சி செய்வது - ஐரோப்பியன் - இத்தாலியன் - இந்திய ஆங்கிலேயன்!

அன்றும் இங்கிருந்து வளங்களைச் சுரண்டி அங்கே சேர்த்துவைத்தான்!

இன்றும் இங்கிருந்து வளங்களைச் சுரண்டி சுவிஸ் வங்கியில் சேர்த்துவைக்கிறார்கள்!

அன்று போராட ஒரு தியாகியர் கூட்டம் இருந்தது.

இன்று போராட ஒரு திருடர் கூட்டம் இருக்கிறது. போராட்டம் என்ற பெயரில் தாங்களும் சுரண்டிக் கொழுக்க!

அன்று பாரதி-காந்தி-திலகர் போன்றோர் மக்களுக்கு சுயவுணர்வூட்ட எடுத்துச் சொன்னதை

சத்தியம் செய்து பின் தொடர்ந்தார்கள்.

இன்று நாட்டின் நிலையை எடுத்துச் சொன்னால்

சாதியம் பேசி சாக்கடையில்தான் இருப்போம் என்று முழக்கம் செய்கிறார்கள்!

வாழ்க பாரதத் தாயே! நின் புதல்வர்கள் வளமுடன் இருப்பார்களாக!
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix